மார்கெட் காலி.. ரூ.22,999 பட்ஜெட்ல SONY கேமரா.. 50W சார்ஜிங்.. 5000mAh பேட்டரி.. AMOLED டிஸ்பிளே.. எந்த மாடல்?
இந்தியாவில் இருக்கும் டிரான்ஸ்பரன்ட் டிசைன் ஸ்மார்ட்போன் பிரியர்களை மரண வெயிட்டிங் மோடில் போட்டுவைத்த நத்திங் போன் 3ஏ (Nothing Phone 3a) விற்பனைக்கு வந்துவிட்டது. கிளைஃப் இன்டர்பேஸ் (Glyph Interface), ரீடிஃபைனிங் டிசைன் (Redefining Design) அப்கிரேட்கள் மட்டுமல்லாமல், சோனி சென்சார் கேமரா, டெலிபோட்டோ லென்ஸ், 50W ஃபாஸ்ட் சார்ஜிங், 5000mAh பேட்டரி, அமோலெட் டிஸ்பிளே போன்ற மற்ற பீச்சர்களிலும் மிட்-ரேஞ்ச் காட்டி இருக்கிறது. இந்த நத்திங் போன் 3ஏ போனின் பீச்சர்கள் மற்றும் விலை விவரங்கள் இதோ.
நத்திங் போன் 3ஏ அம்சங்கள் (Nothing Phone 3a Specifications): கிளைஃப் இன்டர்பேஸ் மற்றும் டிரிபிள் ரியர் கேமரா டிசைனில் பின்னி எடுக்கிறது. கிளைஃப் இன்டர்பேஸ் மூலம் பேக் பேனலில் லைட்னிங் மற்றும் சவுண்ட் பேட்டர்ன்களுடன் நோட்டிபிகேஷன்கள் கிடைக்கிறது. கேமரா, மியூசிக், ஆப் நோட்டிபிகேஷன்களை பெறலாம். இதை நத்திங் பிரியர்கள் கஸ்டமைஸ் செய்து கொள்ளலாம்.

பாண்டா கிளாஸ் (Panda Glass) பாதுகாப்பு மற்றும் 3000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கொண்ட 6.77 இன்ச் (1080 x 2392 பிக்சல்கள்) அமோலெட் (AMOLED) டிஸ்பிளே வருகிறது. இந்த டிஸ்பிளேவில் ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) ரெசொலூஷன், 480Hz டச் சாம்பிளிங் ரேட் மற்றும் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் கிடைக்கிறது. 2160Hz PWM டிம்மிங் ஃபிரிகொன்சி மற்றும் எச்டிஆர்10பிளஸ் (HDR10+) உள்ளது.
இந்த நத்திங் போன் 3ஏ போனில் 50 எம்பி மெயின் கேமரா + 50 எம்பி டெலிபோட்டோ கேமரா + 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா கிடைக்கிறது. இந்த கேமராக்களில் பிரீமியம் சென்சார்கள் மற்றும் அவுட்புட் பார்க்க முடிகிறது. மெயின் கேமராவில் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (Optical Image Stabilization) மற்றும் ஃபேஸ் டிடெக்சன் ஆட்டோபோகஸ் (Phase Detection Autofocus) கிடைக்கிறது.
அதேபோல டெலிபோட்டோவில் 2X ஆப்டிகல் ஜூமிங், 4X இன்-சென்சார் ஜூமிங் மற்றும் 30X அல்ட்ரா ஜூமிங் கிடைக்கிறது. 32 எம்பி செல்பீ ஷூட்டர் கிடைக்கிறது. பிரீமியம் கேமரா அவுட்புட் கொடுக்கும்படி ட்ரூலென்ஸ் என்ஜின் 3 (TrueLens Engine 3), மல்டி-ஃபிரேம் டெக்னாலஜி (Multi-frame Technology) போன்ற பிரத்யேக பீச்சர்கள் கிடைக்கின்றன. ஷூட் பீச்சர்களும் இருக்கின்றன.
ஆகவே, அல்ட்ரா எக்ஸ்டிஆர் (Ultra XDR), போர்ட்ராய்டு மோட் (Portrait Mode), நைட் மோட் (Night Mode), ஆட்டோ டோன் (Auto Tone) போன்ற பீச்சர்களை பயன்படுத்தலாம். இந்த கேமரா, டிஸ்பிளேவுக்கு ஏற்ப பர்ஃமென்ஸ் கொடுக்கும்படி ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) கொண்ட ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 7எஸ் ஜென் 3 4என்எம் (Octa Core Snapdragon 7s Gen 3 4nm) சிப்செட் கிடைக்கிறது.
நத்திங் ஓஎஸ் 3.1 (Nothing OS 3.1) மற்றும் அட்ரினோ 720 ஜிபியு (Adreno 720 GPU) கிராபிக்ஸ் கார்டு கிடைக்கிறது. இந்த நத்திங் போன் 3ஏ போனில் 50W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 5000mAh பேட்டரி கிடைக்கிறது. இன்-டிஸ்பிளே ஆப்டிகல் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Optical Fingerprint Sensor). ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) மற்றும் IP64 ரெசிஸ்டன்ட் பேக் செய்துள்ளது.
இந்த நத்திங் போன் 3ஏ போனின் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.24,999ஆக இருக்கிறது. ரூ.2,000 பேங்க் டிஸ்கவுண்ட் போக பிளிப்கார்ட் (Flipkart) தளத்தில் விற்பனைக்கு வந்துள்ளது. ஆகவே, ரூ.22,999 பட்ஜெட்டில் ஆர்டர் செய்து கொள்ளலாம். அதேபோல 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் டிஸ்கவுண்ட் ஆர்டருக்கு வருகிறது.


Click it and Unblock the Notifications








