Home
Mobile

ரூ.5000 கேப்புல அப்படி என்ன ஸ்பெஷல்.. Nothing Phone 3a Vs Nothing Phone 3a Pro.. மார்ச் 11-ஆ இல்ல மார்ச் 15-ஆ!

2025 ஆம் ஆண்டில் மிகவும் எதிர்பார்க்கப்படும் நத்திங் போன் 3 மாடலுக்கு முன்பாக நத்திங் நிறுவனம் அதன் நத்திங் போன் 3ஏ சீரிஸை இந்தியா உட்பட உலகளாவிய சந்தைகளில் அறிமுகம் செய்துள்ளது. இந்த சீரீஸின் கீழ் நத்திங் போன் 3ஏ (Nothing Phone 3a) மற்றும் நத்திங் போன் 3ஏ ப்ரோ (Nothing Phone 3a Pro) என 2 மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

இவ்விரு ஸ்மார்ட்போன்களுக்கும் இடையே ரூ.5000 வேறுபாடு உள்ளது. ஒருவேளை நத்திங் போன் 3ஏ அல்லது நத்திங் போன் 3ஏ ப்ரோ ஆகிய 2 மாடல்களில் எதை வாங்குவது என்கிற குழப்பம் உங்களுக்குள் இருந்தால்.. அல்லது ரூ.5000 விலை வேறுபாட்டிற்கு இடையே நத்திங் போன் 3ஏ மற்றும் நத்திங் போன் 3ஏ ப்ரோ மாடல்களுக்குள் அப்படி என்ன வித்தியாசம் இருக்கிறது என்பதை தெரிந்து கொள்ள விரும்பினால்.. இதோ விவரங்கள்:

Nothing Phone 3a Vs Nothing Phone 3a Pro.. மார்ச் 11-ஆ.. மார்ச் 15-ஆ!

டிசைன்: முந்தைய நத்திங் ஸ்மார்ட்போன்களை போலவே, நத்திங் போன் 3ஏ மற்றும் 3ஏ ப்ரோ ஆகிய இரண்டுமே ட்ரான்ஸ்பரென்ட் பேக் பேனல் மற்றும் கிளிஃப் லைட்டிங் செட்டப்பை கொண்டுள்ளன. நத்திங் போன் 3ஏ மாடல் ஆனது ஒயிட், பிளாக் மற்றும் ப்ளூ கலர்களில் கிடைமட்ட ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்பை கொண்டுள்ளது

நத்திங் போன் 3ஏ ப்ரோ ஆனது மிகப்பெரிய கேமரா பம்ப் உடன் சர்குலர் வடிவியிலான ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்பை கொண்டுள்ளது. இது க்ரே மற்றும் பிளாக் கலர்களில் கிடைக்கும். மேலும் போன் 3ஏ ஆனது 201 கிராம் எடையை கொண்டுள்ளது; ப்ரோ மாடல் 211 கிராம் எடையுடன் சற்று கனமானதாக உள்ளது.

நத்திங் போன் 3ஏ மற்றும் நத்திங் போன் 3ஏ ப்ரோ ஆகிய இரண்டு போன்களிலும் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் உள்ளன மற்றும் புதிய எசென்ஷியல் கீயும் சேர்க்கப்பட்டு உள்ளது. இது ஏஐ-யின் உதவியுடன் பல வகையான செயல்பாடுகளை செய்ய உதவும்படி வடிவமைக்கப்பட்டு உள்ளது

டிஸ்பிளே: போன் 3ஏ மற்றும் 3ஏ ப்ரோ ஆகிய இரண்டுமே 6.77-இன்ச் அமோஎல்இடி டிஸ்பிளேவை கொண்டுள்ளன. இவைகள் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், எச்டிஆர் 10 பிளஸ் ஆதரவு மற்றும் 3000 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ் ஆகிய அம்சங்களுடன் வருகின்றன. மேலும் இரண்டு ஸ்மார்ட்போன்களின் டிஸ்பிளேக்களுமே பாண்டா கிளாஸ் மூலம் பாதுகாக்கப்படுகின்றன.

பெர்ஃபார்மென்ஸ்: இரண்டுமே அட்ரெனோ 710 ஜிபியு உடனான ஸ்னாப்டிராகன் 7எஸ் ஜென் 3 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. ஓஎஸ்-ஐ பொறுத்தவரை போன் 3ஏ சீரிஸ் ஆனது ஆண்ட்ராய்டு 15 அடிப்படையிலான நத்திங் ஓஎஸ் 3 உடன் வருகின்றன. இரண்டுக்குமே மூன்று வருட ஆண்ட்ராய்டு அப்டேட்கள் மற்றும் நான்கு வருட செக்யூரிட்டி பேட்ச்கள் கிடைக்கும்.

கேமரா: இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களுக்கும் இடையிலான முக்கிய வேறுபாடு கேமரா பிரிவில் தான் உள்ளது. இரண்டுமே ஆப்டிகல் இமேஜ் ஸ்டேபிலைசேஷன் (OIS) ஆட்டோ ஃபோகஸ் (AF) ஆதரவுடன் ஒரே 50எம்பி சாம்சங் ஜிஎன்9 1/1.57-இன்ச் மெயின் சென்சாரை கொண்டுள்ளன. மேலும் 8எம்பி சோனி IMX355 1/4-இன்ச் அல்ட்ராவைட் சென்சாரை கொண்டுள்ளன.

இருப்பினும் போன் 3ஏ ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது 3எக்ஸ் ஆப்டிகல் ஜூம் மற்றும் 6எக்ஸ் இன் சென்சார் ஜூம் மற்றும் ஓஐஎஸ் ஆதரவுடன் மிகவும் மேம்பட்ட பெரிஸ்கோப் 50எம்பி சோனி LYT600 1/1.95-இன்ச் சென்சார் உள்ளது. மறுகையில் உள்ள போன் 3ஏ மாடல் ஆனது 2எக்ஸ் ஆப்டிகல் ஜூம் கொண்ட ஸ்டாண்டர்ட் 50எம்பி சாம்சங் ஜெஎன்5 1/2.76-இன்ச் சென்சார் டெலிஃபோட்டோ லென்ஸை கொண்டுள்ளது.

இருப்பினும் ப்ரோ மாடலை போல, நத்திங் போன் 3ஏ ஸ்மார்ட்போனில் ஓஐஎஸ் ஆதரவு இல்லை. செல்பீ கேமவரை பொறுத்தவரை நத்திங் போன் 3ஏ ஸ்மார்ட்போன் ஆனது 32 எம்பி செல்பீ கேமராவை கொண்டுள்ளது, அதே சமயம் நத்திங் போன் 3ஏ ப்ரோ மாடல் ஆனது அதிக தெளிவுத்திறன் கொண்ட 50எம்பி செல்பீ கேமராவை கொண்டுள்ளது.

பேட்டரி: இரண்டு போன்களும் 5000mAh பேட்டரி மற்றும் 50W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் வருகின்றன. நத்திங் நிறுவனத்தின் கூற்றுப்படி இந்த போன்கள் 19 நிமிடங்களில் 50% வரை சார்ஜ் ஆகலாம் மற்றும் ஒரு மணி நேரத்திற்குள் முழு சார்ஜ் ஆகிவிடும். துரதிர்ஷ்டவசமாக, இரண்டு ஸ்மார்ட்போன்களின் ரீடெயில் பாக்ஸ்களிலும் சார்ஜர் இடம்பெறாது.

நத்திங் போன் 3ஏ ஸ்மார்ட்போனின் இந்திய விலை விவரங்கள்:
8ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் - ரூ.22,999 (வங்கி சலுகைகள் உட்பட)
8ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் - ரூ.24,999 (வங்கி சலுகைகள் உட்பட)
இது மார்ச் 11 ஆம் தேதி முதல் பிளிப்கார்ட் வழியாக வாங்க கிடைக்கும்.

நத்திங் போன் 3ஏ ப்ரோ ஸ்மார்ட்போனின் இந்திய விலை விவரங்கள்:
8ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் - ரூ.27,999 (வங்கி சலுகைகள் உட்பட)
8ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் - ரூ.29,999 (வங்கி சலுகைகள் உட்பட)
12ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் - ரூ.31,999 (வங்கி சலுகைகள் உட்பட)
இது மார்ச் 15 ஆம் தேதி முதல் பிளிப்கார்ட் வழியாக வாங்க கிடைக்கும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Nothing Phone 3a Vs Nothing Phone 3a Pro What is The Difference All you Need to Know
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X