மார்க்கெட்டே திணறப்போகுது.. 45W சார்ஜிங்.. AMOLED டிஸ்பிளே.. வருகிறது புது Nothing போன்.. எந்த மாடல்?
நத்திங் நிறுவனம் வரும் மார்ச் 4-ம் தேதி நத்திங் போன் 3ஏ (Nothing Phone 3a) மாடலை அறிமுகம் செய்ய உள்ளது. குறிப்பாக இந்த புதிய போன் தனித்துவமான வடிவமைப்புடன் வெளிவரும் என நத்திங் நிறுவனம் கூறியுள்ளது. மேலும் தற்போது ஆன்லைனில் நத்திங் போன் 3ஏ மாடலின் அம்சங்கள் கசிந்துள்ளது. இது குறித்து விரிவான தகவல்களை இங்கே பார்க்கலாம்.
நத்திங் போன் 3ஏ அம்சங்கள் (Nothing Phone 3a Specifications): 6.8-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் அமோலெட் டிஸ்பிளே (AMOLED display) உடன் அறிமுகம் செய்யப்படும். மேலும் இதன் டிஸ்பிளேவில் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளது. குறிப்பாக 6.8-இன்ச் என்கிற பெரிய டிஸ்பிளே உடன் இந்த போன் வெளிவரும் என்பதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

அதேபோல் 2.5ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ கோர் ஸ்னாப்டிராகன் 7எஸ் ஜென் 3 (Octa Core Snapdragon 7s Gen 3) சிப்செட் வசதியுடன் நத்திங் போன் 3ஏ போன் வெளிவரும். குறிப்பாக இந்த போனுக்கு வழங்கப்பட்டுள்ள சிப்செட் மேம்பட்ட செயல்திறன் வழங்கும். அதேபோல் கேமிங் பயனர்களைக் கவரும் வகையில் அட்ரினோ 720 ஜிபியு (Adreno 720 GPU) கிராபிக்ஸ் கார்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Nothing OS 3.1 சார்ந்த ஆண்ட்ராய்டு 15 (Android 15) இயங்குதள வசதியுடன் இந்த நத்திங் போன் 3ஏ போன் அறிமுகம் செய்யப்படும். ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.இன்-டிஸ்பிளே ஆப்டிகல் ஃபிங்கர்பிரிண்ட் ஸ்கேனர் (In-display Optical Fingerprint Sensor) வசதி இந்த போனில் உள்ளது.
OIS ஆதரவு கொண்ட 50எம்பி பிரைமரி கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 50எம்பி டெலிபோட்டோ லென்ஸ் என்கிற டூயல் ட்ரிபிள் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த நத்திங் போன் 3ஏ வெளிவரும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். எனவே இந்த ஸ்மார்ட்போன் அட்டகாசமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும்.
யுஎஸ்பி டைப்-சி ஆடியோ (USB Type-C audio), ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள்(Stereo speakers), ஆதரவுடன் நத்திங் போன் 3ஏ போன் வெளிவரும் என்று தெவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த போன் சிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்கும். அதேபோல் இந்த போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது நத்திங் நிறுவனம்.

5000mAh பேட்டரி உடன் நத்திங் போன் 3ஏ அறிமுகம் செய்யப்படும். எனவே இந்த ஸ்மார்ட்போனை வாங்கும் பயனர்களுக்கு சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 45W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. எனவே இந்த போனை விரைவாக சார்ஜ் செய்துவிட முடியும்.
5ஜி எஸ்ஏ/என்எஸ்ஏ (5G SA/NSA), டூயல் 4ஜி வோல்ட்இ (Dual 4G VoLTE), வைஃபை 802.11ஏஎக்ஸ் ( Wi-Fi 6 802.11ax, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த நத்திங் போன் 3ஏ போனில் உள்ளன. மேலும் இந்த போன் பட்ஜெட் விலையில் வெளியாகும் எனத் தகவல்கள் வெளியாகி உள்ளன.


Click it and Unblock the Notifications








