Home
Mobile

மட்ட ரேட்ல Nothing போன்.. ரூ.24,999 பட்ஜெட்.. இது கனவுல கூட கிடைக்காது.. ரூ.5,000 விலை குறைப்பு.. எந்த மாடல்?

பிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் சேல் 2025 (Flipkart Big Billion Days Sale 2025) சலுகையில் நத்திங் போன் 3ஏ ப்ரோ (Nothing Phone 3a Pro) ஸ்மார்ட்போன் அடிமட்ட விலைக்கு கிடைக்க இருக்கிறது. இதுவரையில் கிடைக்காத பட்ஜெட்டில் மட்டுமல்லாமல், கிடைக்காத டிசைனிலும் வாங்கி கொள்ளலாம். இந்த நத்திங் போன் 3ஏ ப்ரோ ஸ்மார்ட்போனுக்கு கிடைக்கும் விலை குறைப்பு மற்றும் பீச்சர் விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

பிளிப்கார்ட் தளத்தில் நத்திங் போன் 3ஏ ப்ரோ ஸ்மார்ட்போனின் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.29,999ஆக இருக்கிறது. இந்த விலையில் ரூ.2,000 பேங்க் டிஸ்கவுண்ட் போக விற்பனைக்கு கிடைக்கிறது. ஆனால், கொஞ்ச நாள் பொறுத்து பிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் சேலில் வாங்கினால், ரூ.24,999 பட்ஜெட்டில் வாங்கி கொள்ளலாம்.

மட்ட ரேட்ல Nothing போன்.. ரூ.24,999 பட்ஜெட்! இது கனவுல கூட கிடைக்காது!

செப்டம்பர் 23ஆம் தேதி முதல் பிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் சேல் 2025 தொடங்குகிறது. இதில் பல்வேறு நத்திங் மாடல்களுக்கு விலை குறைப்பு மற்றும் பேங்க் டிஸ்கவுண்ட் கிடைக்க இருக்கிறது. இதில் ரூ.29,999 ஆரம்ப விலை கொண்ட நத்திங் போன் 3ஏ ப்ரோ ஸ்மார்ட்போன் ரூ.24,999 பட்ஜெட்டில் கிடைக்க இருக்கிறது. இதனால் நத்திங் பிரியர்கள் காத்திருக்கின்றனர்.

நத்திங் போன் 3ஏ ப்ரோ அம்சங்கள் (Nothing Phone 3a Pro Specifications): இந்த நத்திங் ஸ்மார்ட்போனில் 6.77 இன்ச் (1080 x 2392 பிக்சல்கள்) அமோலெட் (AMOLED) டிஸ்பிளே கிடைக்கிறது. இந்த டிஸ்பிளேவில் ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) ரெசொலூஷன், 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 480Hz டச் சாம்பிளிங் ரேட் கிடைக்கிறது. 2160Hz PWM டிம்மிங் ஃபிரிகொன்சி உள்ளது.

மேலும், 3000 பீக் பிரைட்னஸ் மற்றும் எச்டிஆர்10பிளஸ் (HDR10+) கிடைக்கிறது. மொத்தமாக டிஸ்பிளேவுக்கு பாண்டா கிளாஸ் (Panda Glass) புரொடெக்சன் கிடைக்கிறது. ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 7எஸ் ஜென் 3 4என்எம் (Octa Core Snapdragon 7s Gen 3 4nm) சிப்செட் கிடைக்கிறது. இதற்கு ஏற்ப அட்ரினோ 720 ஜிபியு (Adreno 720 GPU) கிராபிக்ஸ் கார்டு கிடைக்கிறது.

இந்த நத்திங் போன் 3ஏ ப்ரோ ஸ்மார்ட்போனில் ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) பேஸ்டு நத்திங் ஓஎஸ் 3.1 (Nothing OS 3.1) கிடைக்கிறது. 50 எம்பி மெயின் கேமரா + 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 50 எம்பி டெலிபோட்டோ கேமரா கிடைக்கிறது. மெயின் கேமராவில் சாம்சங் (SAMSUNG) சென்சார் மற்றும் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் கிடைக்கிறது.

டெலிபோட்டோ கேமராவில் சோனி எல்ஒய்டி 600 சென்சாரும், ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் டெக்னாலஜியும் கிடைக்கிறது. 4K வீடியோ ரெக்கார்டிங் மற்றும் ஆக்சன் பட்டன் கிடைக்கிறது. இந்த நத்திங் போன் 3ஏ ப்ரோ ஸ்மார்ட்போனில் 50 எம்பி செல்பீ கேமரா கிடைக்கிறது. இதிலும் 4K வீடியோ ரெக்கார்டிங் கிடைக்கிறது. இன்-டிஸ்பிளே ஆப்டிகல் ஃபிங்கர்பிரிண்ட் கிடைக்கிறது.

இந்த நத்திங் போனில் 50W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 5000mAh பேட்டரி கிடைக்கிறது. டைப்-சி ஆடியோ மற்றும் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் கிடைக்கின்றன. பிரீமியம் டிரான்ஸ்பரன்ட் டிசைனில் பிளாக் மற்றும் கிரே ஆகிய கலர்களில் விற்பனைக்கு கிடைக்கிறது. 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மட்டுமல்லாமல், 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட மாடலும் கிடைக்கிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Nothing Phone 3a Pro With 8GB RAM Available At Rs 27999 in Flipkart Big Billion Days Sale 2025
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X