Home
Mobile

பொளக்குது விற்பனை.. பட்ஜெட்ல AMOLED டிஸ்பிளே.. SONY கேமரா.. 5000mAh பேட்டரி.. 50W சார்ஜிங்.. எந்த மாடல்?

பிளிப்கார்ட் தளத்தில் நடக்கும் சாசா லேலே (SASA LELE Sale) விற்பனையில் ஃபிளெக்சபிள் அமோலெட் டிஸ்பிளே, சோனி சென்சார் டெலிபோட்டோ கேமரா, மோஷன் கேப்ச்சர் செல்பீ ஷூட்டர், 5000mAh பேட்டரி, 50W ஃபாஸ்ட் சார்ஜிங் போன்ற பீச்சர்களை கொண்ட நத்திங் போன் 3ஏ ப்ரோ (Nothing Phone 3a Pro) போனுக்கு பட்டையை கிளப்பும் டிஸ்கவுண்ட் கிடைக்கிறது.

நத்திங் போன் 3ஏ ப்ரோ அம்சங்கள் (Nothing Phone 3a Pro Specifications): இந்த நத்திங் போனில் 6.77 இன்ச் (1080 x 2392 பிக்சல்கள்) அமோலெட் (AMOLED) டிஸ்பிளே வருகிறது. இந்த டிஸ்பிளேவில் 387 பிபிஐ பிக்சல் டென்சிட்டி, 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 1000Hz டச் சாம்பிளிங் ரேட் மற்றும் 2160Hz PWM டிம்மிங் ஃபிரிகொன்சி கிடைக்கிறது.

பொளக்குது விற்பனை.. பட்ஜெட்ல AMOLED டிஸ்பிளே.. SONY கேமரா.. மாடல்?

மேலும், 3000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் பாண்டா கிளாஸ் (Panda Glass) புரொடெக்சன் கிடைக்கிறது. பிரத்யேகமாக கிடைக்கும் கிளிஃப் இன்டர்பேஸ் (Glyph Interface) மூலம் கிளிஃப் டைமர், கிளிஃப் ஃபில் லைட்,ஃபிளிப் டீ கிளிஃப் போன்ற பீச்சர்கள் கிடைக்கின்றன. இந்த நத்திங் போனில் அட்ரினோ 720 ஜிபியு (Adreno 720 GPU) கிடைக்கிறது.

மேலும், ஆக்டா கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 7எஸ் ஜென் 3 4என்எம் (Octa Core Qualcomm Snapdragon 7s Gen 3 4nm) சிப்செட் கிடைக்கிறது. லேட்டஸ்ட் பீச்சர்களுடன் நத்திங் ஓஎஸ் 3.1 (Nothing OS 3.1) மற்றும் ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) கிடைக்கிறது. மேலும், குவால்காம் ஏஐ என்ஜின் மற்றும் குவால்காம் எக்ஸாகான் என்பியு சப்போர்ட் கிடைக்கிறது.

இந்த நத்திங் போன் 3ஏ ப்ரோ போனில் 50 எம்பி மெயின் கேமரா + 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 50 எம்பி பெரிஸ்கோப் டெலிபோட்டோ கேமரா கிடைக்கிறது. மெயின் கேமராவில் ஓஐஎஸ் மற்றும் ஈஐஎஸ் டெக்னாலஜி கிடைக்கிறது. மேலும், ஆட்டோ போகஸ், டூயல் பிக்சல் பிடிஏஎப் (Dual pixel PDAF) மற்றும் 2X இன்-சென்சார் ஜூம் கிடைக்கிறது.

டெலிபோட்டோ கேமராவில் சோனி எல்ஒய்டி 500 சென்சார், ஓஐஎஸ் மற்றும் ஈஐஎஸ் டெக்னாலஜி கிடைக்கிறது. மேலும், ஆட்டோ போகஸ், 3X ஆப்டிகல் ஜூமிங், 6X இன்-சென்சார் ஜூமிங் மற்றும் 60X அல்ட்ரா ஜூமிங் கிடைக்கிறது. சாம்சங் சென்சார், அல்ட்ரா எக்ஸ்டிஆர், மோஷன் கேப்ச்சர் மற்றும் மேக்ரோ மோட் கொண்ட 50 எம்பி செல்பீ ஷூட்டர் கிடைக்கிறுது.

இதுபோக 4K வீடியோ ரெக்கார்டிங் மற்றும் ஆக்சன மோட் (Action Mode) சப்போர்ட் கிடைக்கிறது. இந்த நத்திங் போனில் 50W ஃபாஸ்ட் சார்ஜிங், 7.5W ரிவர்ஸ் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 5,000mAh பேட்டரி கிடைக்கிறது. 19 நிமிடங்களில் 50 சதவீத சார்ஜ் மற்றும் 56 நிமிடங்களில் 100 சதவீத சார்ஜ் செய்து கொள்ளலாம். கிரே மற்றும் பிளாக் கலர்களில் டிரான்ஸ்பரன்ட் டிசைனில் கிடைக்கிறது.

இந்த நத்திங் போனில் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.29,999ஆக இருக்கிறது. 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.31,999ஆக இருக்கிறது. இப்போது, பிளிப்கார்ட் தளத்தில் நடக்கும் சாசா லேலே விற்பனையில் ரூ.3000 உடனடி டிஸ்வுண்ட் போக விற்பனைக்கு கிடைக்கிறது. ஆகவே, ரூ.26,999 பட்ஜெட்டில் வாங்கலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Nothing Phone 3a Pro With 50MP Camera Gets Discount on Flipkart SASA LELE Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X