Home
Mobile

எப்படி செட் பண்ணேன் பாத்தீங்களா விலையை.. Nothing Phone 3a, Nothing Phone 3a Pro சேல் பிச்சிக்க போகுது!

2025 பிப்ரவரியில் "அட கொஞ்சம் கேப்பு விடுங்கப்பா" என்று கூறும் அளவிற்கு பல நிறுவனங்கள் தத்தம் புதிய ஸ்மார்ட்போன்களை வரிசைக்கட்டி ரிலீஸ் செய்ய உள்ளன. இதில் பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன்கள் முதல் பிளாக்ஷிப் போல்டபிள் ஸ்மார்ட்போன் வரை அடக்கம். ஆனாலும் கூட பிப்ரவரி முடிந்து மார்ச் மாதம் முதல் வாரத்தில் நடக்கவுள்ள வெளியீட்டு நிகழ்விற்கு இப்போதே 'ஹைப்' எகிறிவிட்டது.

அது நத்திங் நிறுவனத்தின் வெளியீட்டு நிகழ்வாகும். இது மார்ச் 4 ஆம் தேதி இந்திய நேரப்படி மதியம் 3.30 மணிக்கு நடக்கவுள்ளது. முன்னதாக இந்நிகழ்வில் நத்திங் போன் 3 ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. பின்னர் பிளிப்கார்ட் வழியாக வெளியான டீசர் - நத்திங் போன் 3ஏ சீரீஸ் அறிமுகமாகும் என்பதை உறுதிப்படுத்தியது.

Nothing Phone 3a,  Nothing Phone 3a Pro என்ன விலைக்கு வரும்?

2025 மார்ச் 4 ஆம் தேதி நடக்கும் நிகழ்வில் நத்திங் போன் 3ஏ சீரீஸின் கீழ் நத்திங் போன் 3ஏ (Nothing Phone 3a) மற்றும் நத்திங் போன் 3ஏ ப்ரோ (Nothing Phone 3a Pro) ஆகிய 2 மாடல்கள் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதுகுறித்து வெளியான டீஸர் போட்டோவின் வழியாக, இந்த போன்களில் ட்ரிபிள் ரியர் கேமா செட்டப் மற்றும் கிளிஃப் இன்டர்பேஸ் இடம்பெறுவது மட்டுமே உறுதி செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் பல லீக்ஸ் தகவல்கள் நத்திங் போன் 3ஏ மற்றும் நத்திங் போன் 3ஏ ப்ரோவின் விலை நிர்ணயம் மற்றும் முக்கிய அம்சங்களை பற்றி புட்டுப்புட்டு வைக்கின்றன.

நத்திங் போன் 3ஏ மற்றும் நத்திங் போன் 3ஏ ப்ரோ என்ன விலைக்கு வரும்? இவ்விரு ஸ்மார்ட்போன்களும் நிச்சயம் மிட்-ரேன்ஜ் பிரிவில் தான் இருக்கும் என்று ஊகிக்கப்படுகிறது. நினைவூட்டும் வண்ணம், இந்தியாவில் நத்திங் போன் 2ஏ (Nothing Phone 2a) ஸ்மார்ட்போனின் ரூ.23,999 என்றும், அதே சமயம் நத்திங் போ 2ஏ பிளஸ் (Nothing Phone 2a Plus) ரூ.27,999 க்கும் அறிமுகமானது.

இம்முறை பிளஸ் வேரியண்ட் இருக்காது. அதற்கு பதிலாக ப்ரோ மாடல் அறிமுகமாகும் என்றும், ஆனாலும் விலை நிர்ணயத்தில் பெரிய வேறுபாடு இருக்காது என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. நத்திங் போன் 3ஏ ஆனது ரூ.25,000 க்குள் என்கிற பட்ஜெட்டிலும், நத்திங் போன் 3ஏ ப்ரோ ஆனது ரூ.30,000 க்குள் என்கிற பட்ஜெட்டிலும் அறிமுகம் செய்யப்படலாம்.

முன்னதாக வெளியான லீக்ஸ் ஒன்று இவ்விரு ஸ்மார்ட்போன்களின் ஸ்டோரேஜ் ஆப்ஷன்கள் குறித்த விவரங்களை வெளிப்படுத்தி இருந்தது. அதன்படி நத்திங் போன் 3ஏ ஸ்மார்ட்போன் ஆனது 8 ஜிபி + 128 ஜிபி மற்றும் 8 ஜிபி + 256 ஜிபி ஆப்ஷன்களில் வரும். மறுகையில் உள்ள நத்திங் போன் 3ஏ ப்ரோ மாடல் ஆனது 12 ஜிபி + 256 ஜிபி ஆப்ஷனில் அறிமுகம் செய்யப்படலாம்.

நத்திங் போன் 3ஏ ஸ்மார்ட்போனில் என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்? இது 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.8 இன்ச் ஓஎல்இடி டிஸ்ப்ளேவை பேக் செய்யலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது உண்மையாக இதுவரை வெளியான எந்த ஒரு நத்திங் போனிலும் இல்லாத பெரிய டிஸ்பிளே இதில் இடம்பெறும்.

சிப்செட்டை பொறுத்தவரை இது ஸ்னாப்டிராகன் 7எஸ் ஜென் 3 (Snapdragon 7s Gen 3) சிப்செட் மூலம் இயக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது நத்திங் போன் 2ஏ ஸ்மார்ட்போனில் உள்ள மீடியாடெக் டைமன்சிட்டி (MediaTek Dimensity) சிப்செட்டை விட நிச்சயம் சிறந்ததாக இருக்கும். மேலும் இது ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ்-ஐ அடிப்படையாக கொண்ட நத்திங் ஓஎஸ் 3.1 (Nothing OS 3.1) உடன் வருமென்றும் எதிர்பார்க்கப்படுகிறது

கேமராக்களை பொறுத்தவரை, இது கிடைமட்டமாக அமைக்கப்பட்ட நத்திங் நிறுவனத்தின் முதல் ட்ரிபிள் ரியர் கேமரா ஸ்மார்ட்போனாக இருக்கலாம். அதில் 50 மெகாபிக்சல் ப்ரைமரி சென்சார் மற்றும் 2எக்ஸ் ஆப்டிகல் ஜூம் கொண்ட 50 மெகாபிக்சல் டெலிஃபோட்டோ கேமரா இடம்பெறலாம். இது உண்மையாகும் பட்சத்தில், நத்திங் நிறுவனம் அதன் ஸ்மார்ட்போனில் முதல் முறையாக டெலிஃபோட்டோ லென்ஸை சேர்க்கிறது என்று அர்த்தம்.

செல்பீ கேமராவை பொறுத்தவரை இதில் 32 மெகாபிக்சல் செல்பீ கேமரா இடம்பெறலாம். இது டிஸ்பிளேவின் ஹோல்-பஞ்ச் கட்அவுட்டில் வைக்கப்படும். அதாவது முந்தைய நத்திங் மாடல்களில் நாம் கண்டதை போலவே. பேட்டரியை பொறுத்தவரை, இதை 45W வயர்டு சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் 5000mAhபேட்டரி பேக் செய்யப்படலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Nothing Phone 3a Phone 3a Pro Expected Price in India Specifications Launch on March 4
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X