தேதி குறிச்ச நத்திங்.. வெயிட் பண்ணது வீண் போகாது.. புது Nothing லைட் வெர்ஷன்.. எந்த மாடல்? விலை எப்படி?
நத்திங் நிறுவனத்தின் அடுத்த பட்ஜெட் விலை மாடலான நத்திங் போன் 3ஏ லைட் (Nothing Phone 3a Lite) ஸ்மார்ட்போனின் வெளியீட்டு தேதி அதிகாரப்பூர்வமாக உறுதியாகி இருக்கிறது. மீடியாடெக் டைமன்சிட்டி 7300 சிப்செட் கொண்ட மாடலாக வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நத்திங் போன் 3ஏ லைட் ஸ்மார்ட்போனின் பீச்சர்கள் எப்படி இருக்கும்? எப்போது வெளியாகும்? எந்த பட்ஜெட்டில் கிடைக்கும்? உள்ளிட்ட முழு விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
இந்திய மார்கெட்டில் நத்திங் போன் 3ஏ (Nothing Phone 3a) ஸ்மார்ட்போன் வெளியாகி டிசைன் மற்றும் பீச்சர்களில் பட்டையை கிளப்பியது. ஆனால், பட்ஜெட் பிரியர்களுக்கு ஏற்ற விலையில் கிடைக்கவில்லை. ஆரம்ப விலை மாடலான 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.24,999 பட்ஜெட்டில் இருந்தது. ஆனால், இந்த நத்திங் போன் 3ஏ லைட் அதைவிட மலிவான பட்ஜெட்டில் கிடைக்க இருக்கிறது.

முந்தைய மாடல்களை போல டிசைனை கொண்டிருந்தாலும், இதில் பிரத்யேகமாக பாட்டம் எல்இடி கிடைக்க இருக்கிறது. பிளாக் (Black) மற்றும் ஒயிட் (White) ஆகிய கலர்களில் எதிர்பார்க்கலாம். இந்த டிசைன் மற்றும் கலர்களுடன் அக்டோபர் 29ஆம் தேதி வெளியாக இருக்கிறது. வழக்கம்போல குளோபல் மார்கெட்டில் வெளியிடப்படுகிறது. இதற்கு அடுத்து இந்திய மார்கெட்டில் எதிர்பார்க்கலாம்.
இந்த வெளியீட்டு தேதி, பாட்டம் எல்இடி கிளைஃப், ஒயிட் கலர் ஆகிய விவரங்கள் மட்டுமே நத்திங் நிறுவனம் வெளியிட்டுள்ள டீசர் மூலம் உறுதியாகி இருக்கிறது. இருப்பினும், பட்ஜெட் மற்றும் முக்கிய பீச்சர்கள் மார்கெட்டில் கசிந்துள்ளன. அதன்படி, இந்த நத்திங் போன் 3ஏ ஸ்மார்ட்போனில் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கிடைக்க இருக்கிறது. ரூ.21,999 அல்லது ரூ.23,999 பட்ஜெட்டில் வெளியாகலாம்.

நத்திங் போன் 3ஏ லைட் அம்சங்கள் (Nothing Phone 3a Lite Specifications): இந்த நத்திங் ஸ்மார்ட்போனில் ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) பேஸ்டு நத்திங் ஓஎஸ் 4.0 (Nothing OS 4.0) கிடைக்க இருக்கிறது. முன்பே சொன்னதை போல ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 7300 (Octa Core MediaTek Dimensity 7300) சிப்செட் எதிர்பார்க்கலாம். 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கிடைக்க இருக்கிறது.
33W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 5000mAh பேட்டரி கிடைக்க இருக்கிறது. இந்த நத்திங் போன் 3ஏ லைட் ஸ்மார்ட்போனில் 50 எம்பி மெயின் கேமரா + 50 எம்பி அல்ட்ரா வைடு கேமரா கொண்ட டூயல் ரியர் கேமரா சிஸ்டம் (Dual Rear Camera System) வர இருக்கிறது. 32 எம்பி செல்பீ ஷூட்டர் எதிர்பார்க்கலாம். டிஸ்பிளேவுக்கு கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 (Corning Gorilla Glass 5) பாதுகாப்பு வர இருக்கிறது.
மேலும், IP64 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & ஸ்பிளாஷ் ரெசிஸ்டன்ஸ் வர இருக்கிறது. நத்திங் நிறுவனத்திள் கிளைஃப் பீச்சர்களுடன் நத்திங் ஓஎஸ் 4.0 கிடைக்க இருக்கிறது. இந்த நத்திங் போன் 3ஏ லைட் ஸ்மார்ட்போனில் ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) ரெசொலூஷன் கொண்ட 6.77 இன்ச் அமோலெட் (AMOLED) டிஸ்பிளே மற்றும் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் கிடைக்க இருக்கிறது.
இந்த பீச்சர்கள் மட்டுமே மார்கெட்டில் கசிந்துள்ளன. இந்த ஸ்மார்ட்போன் நவம்பர் மாதத்தில் வெளியாகும் என்று தகவல்கள் வெளியாகின. இதனால், பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன் பிரியர்கள் வெயிட்டிங் மோடில் காத்திருக்க தொடங்கினர். ஆனால், அவர்களுக்கு ட்ரீட் வைத்தது போல முன்னகூட்டியே இந்த நத்திங் போன் 3ஏ லைட் ஸ்மார்ட்போன் அக்டோபர் 29ஆம் தேதி வெளியாக இருக்கிறது.


Click it and Unblock the Notifications








