மொத்த ஆர்டரும் இந்த ஒத்த போனுக்கு.. ரூ.19,999 பட்ஜெட்ல Nothing 5ஜி போன்.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?
பிளிப்கார்ட் தளத்தில் நத்திங் போன் 3ஏ லைட் (Nothing Phone 3a Lite) ஸ்மார்ட்போனின் விற்பனை தள்ளுபடி போக தொடங்கி இருக்கிறது. இந்த பட்ஜெட்டில் சூப்பர் அமோலெட் டிஸ்பிளே, 5000mAh பேட்டரி, 33W ஃபாஸ்ட் சார்ஜிங், சாம்சங் சென்சார் கேமரா மற்றும் பாண்டா கிளாஸ் புரொடெக்சன் கொடுக்கிறது. மீடியாடெக் டைமன்சிட்டி 7300 ப்ரோ சிப்செட் கொண்ட இந்த நத்திங் போன் 3ஏ லைட் ஸ்மார்ட்போனின் முழு பீச்சர்கள், விலை மற்றும் தள்ளுபடி விவரங்களை இப்போது பார்க்கலாம்.
8 ஜிபி ரேம் (8 ஜிபி விர்ச்சுவல் ரேம்) + 128 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்டின் விலை ரூ.20,999ஆக இருக்கிறது. 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்டின் விலை ரூ.22,999ஆக இருக்கிறது. பிளிப்கார்ட் தளத்தில் ரூ.1,000 உடனடி தள்ளுபடி போக வாங்க கிடைக்க இருக்கிறது. எஸ்பிஐ மற்றும் ஐசிஐசிஐ பேங்க் கார்டுகளுக்கு இந்த டிஸ்கவுண்ட் கிடைக்கிறது.

ஆகவே, ரூ.19,999 பட்ஜெட்டில் வாங்கி கொள்ளலாம். நத்திங் ஸ்மார்ட்போன்களில் முதல் முறையாக சிங்கிள்-எல்இடி க்ளைப் லைட் (Single-LED Glyph Light) கொண்ட மாடலாக இந்த நத்திங் போன் 3ஏ லைட் கிடைக்கிறது. பிளாக் (Black), ப்ளூ (Blue) மற்றும் ஒயிட் (White) ஆகிய கலர்களில் விற்பனைக்கு கிடைக்கிறது. முழு பீச்சர்கள் பட்ஜெட்டுக்கு ஏற்ப இருக்கின்றன.
நத்திங் போன் 3ஏ லைட் அம்சங்கள் (Nothing Phone 3a Lite Specifications): இந்த நத்திங் போனில் ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) ரெசொலூஷன் கொண்ட 6.77 இன்ச் (1080 x 2392 பிக்சல்கள்) அமோலெட் (AMOLED) டிஸ்பிளே கிடைக்கிறது. இந்த டிஸ்பிளேவுக்கு பாண்டா கிளாஸ் பாதுகாப்பு (Panda Glass Protection) கிடைக்கிறது. 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 480Hz டச் சாம்பிளிங் ரேட் கொடுக்கிறது.
3000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் 2160Hz PWM டிம்மிங் ஃபிரிகொன்சி கிடைக்கிறது. ஓடிடி பிரியர்கள் விரும்பும்படி எச்டிஆர்10பிளஸ் (HDR10+) கொண்டுள்ளது. ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 7300 ப்ரோ 4என்எம் (Octa Core MediaTek Dimensity 7300 Pro 4nm) சிப்செட்டை இந்த நத்திங் போன் 3ஏ லைட் கொடுக்கிறது. ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) கிடைக்கிறது.
மேலும், 3 ஜெனரேஷன் ஆண்ட்ராய்டு அப்டேட் கொடுக்கிறது. அதேபோல 6 வருடங்களுக்கு செக்கியூரிட்டி அப்டேட்களை பெற்று கொள்ளலாம். நத்திங் ஓஎஸ் 3.5 (Nothing OS 3.5) மற்றும் கேமிங் பிரியர்களுக்கு இந்ட பட்ஜெட்டுக்கு ஏற்ப அவுட்புட் கொடுக்கும்படி மாலி ஜி615 எம்சி2 ஜிபியு (Mali G615 MC2 GPU) கிராபிக்ஸ் கார்டு கிடைக்கிறது. 2 டிபிக்கான மைக்ரோஎஸ்டி சப்போர்ட் உள்ளது.
ஹைபிரிட் டூயல் சிம் சிலாட் கிடைக்கிறது. எலக்ட்ரானிக் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (EIS) டென்காலஜி மற்றும் 4K வீடியோ ரெக்கார்டிங் சப்போர்ட் கொண்ட 50 எம்பி மெயின் கேமரா மற்றும் 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா கிடைக்கிறது. மேலும், 2 எம்பி மேக்ரோ கேமராவுடன் டிரிபிள் ரியர் கேமரா சிஸ்டம் கொடுக்கிறது. 10X டிஜிட்டல் ஜூமிங் மற்றும் 16 எம்பி செல்பீ கேமரா கிடைக்கிறது.
இந்த நத்திங் போன் 3ஏ லைட் ஸ்மார்ட்போனில் 33W ஃபாஸ்ட் சார்ஜிங் (Fast Charging) கொண்ட 5000mAh பேட்டரி கிடைக்கிறது. இந்த பேட்டரியுடன் 8.3 மிமீ தடிமன் வருகிறது. ஆகவே, ஸ்லிம் மாடலாக எதிர்பார்க்க முடியாது. இன்-டிஸ்பிளே ஃபிங்கபிரிண்ட் சென்சார், பாட்டம் போர்டெட் ஸ்பீக்கர் மற்றும் IP54 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & ஸ்பிளாஷ் ரெசிஸ்டன்ட் வருகிறது.


Click it and Unblock the Notifications








