முரட்டு ஆஃபர்.. பட்ஜெட்ல AMOLED டிஸ்பிளே.. 50MP கேமரா.. 5000mAh பேட்டரி.. 33W பாஸ்ட் சார்ஜிங்.. எந்த மாடல்?
இந்திய மார்கெட்டில் நத்திங் நிறுவனத்தின் ஸ்மார்ட்போன்களுக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. இதில் நத்திங் போன் 3ஏ லைட் (Nothing Phone 3a Lite) ஸ்மார்ட்போன் லேட்டஸ்ட் பீச்சர்கள் மற்றும் டிசைனை கொடுத்து தனியிடம் பிடித்துள்ளது. இப்போது, தள்ளுபடி விலையில் கிடைப்பதால், விற்பனையில் பட்டையை கிளப்பி வருகிறது. இந்த போனின் தள்ளுபடி விவரங்களை தெரிந்து கொள்ளலாம்
இப்போது, பிளிப்கார்ட் தளத்தில் 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி மெமரி கொண்ட மாடலுக்கு 4 சதவீத தள்ளுபடி கொடுக்கப்பட்டு ரூ.21,999 விலைக்கு கிடைக்கிறது. மேலும், தேர்ந்தெடுக்கப்பட்ட வங்கி கார்டுகளுக்கு ரூ.1,000 தள்ளுபடி கொடுக்கப்பட்டு உள்ளது. ஆகவே, ரூ.20,999 விலைக்கு இந்த நத்திங் போன் 3ஏ லைட் ஸ்மார்ட்போனை வாங்கி கொள்ளலாம்.

நத்திங் போன் 3ஏ லைட் அம்சங்கள் (Nothing Phone 3a Lite Specifications): ஆக்டா கோர் 4என்எம் மீடியாடெக் டைமன்சிட்டி 7300 ப்ரோ (Octa Core 4nm MediaTek Dimensity 7300 Pro) சிப்செட் மற்றும் மாலி ஜி615 எம்சி2 ஜிபியு (Mali G615 MC2 GPU) கிராபிக்ஸ் கார்டு இந்த நத்திங் போன் 3ஏ லைட் ஸ்மார்ட்போனில் கிடைக்கிறது. பிரத்யேக பீச்சர்களுடன் நத்திங் ஓஎஸ் 3.5 (Nothing OS 3.5) கிடைக்கிறது.
3 ஜெனரேஷன் ஆண்ட்ராய்டு அப்டேட்கள் மற்றும் 6 வருடங்களுக்கு செக்யூரிட்டி அப்டேட்களுடன் ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) கொடுக்கப்பட்டு உள்ளது. பிரீமியம் மாடல்களுக்கு நிகரான பீச்சர்களை இந்த ஸ்மார்ட்போன் கொடுத்துள்ளது. 6.77 இன்ச் (1080 x 2392 பிக்சல்கள்) அமோலெட் (AMOLED) டிஸ்பிளே மற்றும் பாண்டா கிளாஸ் பாதுகாப்பு (Panda Glass Protection) கொண்டுள்ளது.
மேலும், ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) ரெசொலூஷன், 120 Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 480 Hz டச் சாம்பிளிங் ரேட் கிடைத்துள்ளது. 2160Hz PWM டிம்மிங் ஃபிரிகொன்சி கொடுத்து உள்ளது. எச்டிஆர்10பிளஸ் (HDR10+) மற்றும் 3000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கிடைக்கிறது. 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி மெமரி மட்டுமல்லாமல், 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி மெமரி மாடலும் கிடைக்கிறது.

2 டிபிக்கான மைக்ரோஎஸ்டி கார்டு சிலாட் மற்றும் டூயல் நானோ சிம் சிலாட் கிடைத்துள்ளது. சாம்சங் சென்சார் மற்றும் எலக்ட்ரானிக் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (EIS) டெக்னாலஜி கொண்ட 50 எம்பி மெயின் கேமரா கிடைக்கிறது. மேலும், 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா மற்றும் 2 எம்பி மேக்ரோ கேமரா கொண்ட டிரிபிள் ரியர் கேமரா சிஸ்டம் கொடுக்கப்பட்டு உள்ளது.
10X டிஜிட்டல் ஜூமிங் மற்றும் 4K வீடியோ ரெக்கார்டிங் கொடுக்கப்பட்டு உள்ளது. செல்பீ மற்றும் வீடியோ கால்களுக்காக 16 எம்பி செல்பீ கேமரா கொடுத்துள்ளது. 33W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 5000mAh பேட்டரியை இந்த நத்திங் போன் 3ஏ லைட் ஸ்மார்ட்போன் கொடுத்து உள்ளது. இந்த பேட்டரியுடன் 8.3 எம்எம் தடிமன் மற்றும் 199 கிராம் எடை கொடுத்துள்ளது.
இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor) கிடைக்கிறது. யுஎஸ்பி டைப்-சி ஆடியோ (USB Type-C Audio), பாட்டம் போர்டெட் ஸ்பீக்கர்கள் (Bottom-ported Speakers) கிடைக்கின்றன. 5ஜி எஸ்ஏ / என்எஸ்ஏ (5G SA / NSA), டூயல் 4ஜி வோஎல்டிஇ (Dual 4G VoLTE) கிடைக்கிறது. பிளாக் (Black), ப்ளூ (Blue) மற்றும் ஒயிட் (White) ஆகிய 3 கலர்களில் விற்பனைக்கு கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications








