நாளை விற்பனைக்கு வரும் புதிய Nothing போன்.. 50எம்பி கேமரா.. 33W சார்ஜிங்.. எந்த மாடல்? என்ன விலை?
கடந்த வாரம் அறிமுகம் செய்யப்பட்ட நத்திங் போன் 3ஏ லைட் (Nothing Phone 3a Lite) ஸ்மார்ட்போன் நாளை (டிசம்பர் 5) பிளிப்கார்ட் தளத்தில் விற்பனைக்கு வருகிறது. இப்போது இந்த நத்திங் போன் 3ஏ லைட் ஸ்மார்ட்போனின் விலை, சலுகைகள் மற்றும் அம்சங்களை இந்த பதிவில் பார்க்கலாம்.
8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட நத்திங் போன் 3ஏ லைட் ஸ்மார்ட்போனின் விலை ரூ.20.999-ஆக உள்ளது. பின்பு இதன் 8ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் விலை ரூ.22,999-ஆக உள்ளது. தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை வாங்கினால் ரூ.1000 தள்ளுபடியும் உள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனை ரூ.19,999 விலையில் வாங்கிவிட முடியும்.

நத்திங் போன் 3ஏ லைட் அம்சங்கள் (Nothing Phone 3a Lite Specifications): மீடியாடெக் டைமன்சிட்டி 7300 ப்ரோ எஸ்ஒசி (MediaTek Dimensity 7300 Pro SoC) சிப்செட் வசதி நத்திங் போன் 3ஏ லைட் ஸ்மார்ட்போனில் உள்ளது. குறிப்பாக இந்த சிப்செட் மேம்பட்ட செயல்திறன் வழங்கும். ஆகவே இந்த ஸ்மார்ட்போனில் அனைத்து ஆப்களையும் தடையின்றி பயன்படுத்தலாம்.
குறிப்பாக 6.77 இன்ச் புல் எச்டி பிளஸ் அமோலெட் (AMOLED) டிஸ்பிளே வசதியுடன் இந்த போன் வெளிவந்துள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 1080 x 2392 பிக்சல்கள், 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 3000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்கள் உள்ளன. எனவே இந்த ஸ்மார்ட்போன் சிறந்த திரை அனுபவத்தை வழங்கும்.
அதுவும் Nothing OS 3.5 சார்ந்த ஆணட்ராய்டு 15 (Android 15) இயங்குதள வசதி நத்திங் போன் 3ஏ லைட் ஸ்மார்ட்போனில் உள்ளது. ஆனாலும் இந்த ஸ்மார்ட்போனுக்கு 3 வருட ஓஎஸ் அப்டேட் மற்றும் 6 வருட பாதுகாப்பு அப்டேட்களும் கிடைக்கும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நத்திங் போன் 3ஏ லைட் ஸ்மார்ட்போன் 50 எம்பி மெயின் கேமரா + 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 2 எம்பி மேக்ரோ கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப் கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் மூலம் 4கே வீடியோ பதிவு செய்ய முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமராவும் உள்ளது.
அதேபோல் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மற்றும் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி ஆகிய இரண்டு வேரியண்ட்களில் நத்திங் போன் 3ஏ லைட் ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரும். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இந்த ஸ்மார்ட்போனில் உள்ளது. அதாவது 2டிபி வரை மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இதில் உள்ளது.
இதில் யூ.எஸ்.பி டைப்-சி ஆடியோ (USB Type-C Audio), பாட்டம் போர்டெட் ஸ்பீக்கர் (Bottom-ported Speaker) ஆதரவுகள் உள்ளன. மேலும் இன்-டிஸ்பிளே ஆப்டிகல் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Optical Fingerprint Sensor) ஆதரவும் இந்த போனில் உள்ளது.

நத்திங் போன் 3ஏ லைட் ஸ்மார்ட்போன் 5000mAh பேட்டரி உடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 33W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளது. பின்பு இந்த போனின் எடை 199 கிராம் ஆகும்.
குறிப்பாக IP54 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & ஸ்பிளாஷ் ரெசிஸ்டன்ஸ் உடன் இந்த புதிய நத்திங் போன் 3ஏ லைட் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்ய்பட்டுள்ளது. மேலும் டூயல் 5ஜி, 4ஜி வோல்ட்இ, வைஃபை 6, ப்ளூடூத் 5.3, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த போனில் உள்ளன.


Click it and Unblock the Notifications








