Home
Mobile

கியூ கட்ட போகுது கூட்டம்.. ரூ.20,999-க்கு AMOLED டிஸ்பிளே.. 5000mAh பேட்டரி.. 50MP கேமரா.. எந்த மாடல்?

ஒட்டுமொத்த நத்திங் பிரியர்களும் கியூ கட்டி வாங்கும்படியான விற்பனை நவம்பர் 29ஆம் தேதி நடக்க இருக்கிறது. நத்திங் போன் 3ஏ லைட் (Nothing Phone 3a Lite) ஸ்மார்ட்போன் ஆன்லைன் மார்கெட்டுக்கு முன்னதாக ஆஃப்லைன் மார்கெட்டில் கிடைக்க இருக்கிறது. ஒரேவொரு நாள் விற்பனை நடக்க இருப்பதால், விற்பனை பட்டையை கிளப்ப இருக்கிறது.

இந்திய மார்கெட்டில் நத்திங் போன் 3ஏ லைட் ஸ்மார்ட்போனின் விற்பனை டிசம்பர் 5ஆம் தேதியில் தொடங்குகிறது. 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.20,999ஆகவும், 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.22,999ஆகவும் இருக்கிறது. பிளிப்கார்ட் தளத்தில் ரூ.1,000 டிஸ்கவுண்ட் போக விற்பனைக்கு கிடைக்க இருக்கிறது.

கியூ கட்ட போகுது கூட்டம்.. ரூ.20,999-க்கு AMOLED டிஸ்பிளே.. மாடல்?

ஆனால், டிசம்பர் 5ஆம் தேதிக்கு முன்னதாகவே டெல்லியில் நடக்கும் எக்ஸ்க்ளூசிவ் டிராப் இவென்ட்டில் (Exclusive Drop Event) ஆப்லைனில் கிடைக்க இருக்கிறது. நவம்பர் 29ஆம் தேதி பிற்பகல் 3 மணிக்கு டெல்லியில் உள்ள ப்ளூ டோக்காய் காபி ரோஸ்டரில் இந்த இவென்ட் நடக்க இருக்கிறது. ஆகவே, முன்கூட்டியே வாங்குவதற்காக டெல்லியில் நத்திங் பிரியர்கள் குவிந்துள்ளனர்.

இதற்கு காரணம் நத்திங் போன் 3ஏ லைட் ஸ்மார்ட்போனுடன் ரூ.17,999 மதிப்புள்ள இயர் ஓப்பன் இயர்பட்ஸ் (Ear Open Earbuds) கொடுக்கப்பட இருக்கிறது. ஆனால், இது முதலில் வாங்கும் 20 கஸ்டமர்களுக்கு மட்டுமே கிடைக்க இருக்கிறது. அதேபோல அந்த இவென்ட்டில் சில ஆக்டிவிட்டிகளும் நடக்கிறது, இதில் வெற்றி பெறும் கஸ்டமர்களுக்கும் ஓப்பன் இயர்பட்ஸ் கிடைக்கும்.

நத்திங் போன் 3ஏ லைட் அம்சங்கள் (Nothing Phone 3a Lite Specifications): ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) மற்றும் நத்திங் ஓஎஸ் 3.5 (Nothing OS 3.5) கிடைக்கிறது. பட்டையை கிளப்பும் பர்ஃபாமென்ஸ் கொண்ட ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 7300 ப்ரோ 4என்எம் (Octa Core MediaTek Dimensity 7300 Pro 4nm) சிப்செட் மற்றும் மாலி ஜிபியு கிராபிக்ஸ் கார்டு கொடுக்கப்படுகிறது.

பாண்டா கிளாஸ் பாதுகாப்பு (Panda Glass Protection) 6.77 இன்ச் அமோலெட் (AMOLED) டிஸ்பிளே இணைக்கப்பட்டுள்ளது. இதில் ஃபுல்எச்டிபிளஸ் (FHD) 1080 x 2392 பிக்சல்கள் ரெசொலூஷன் கிடைக்கிறது. மேலும், 120 ஹெர்ட்ஸ் அடாப்டிவ் ரெஃப்ரெஷ் ரேட் 480 ஹெர்ட்ஸ் டச் சாம்பிளிங் ரேட் மற்றும் 2160Hz PWM டிம்மிங் ஃபிரிகொன்சி கிடைக்கிறது.

இந்த டிஸ்பிளேவுக்கு எச்டிஆர்10பிளஸ் (HDR10+) மற்றும் 3000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கிடைக்கிறது. 50 மெகாபிக்சல் பிரைமரி கேமராவில் சாம்சங் சென்சாரும், எலக்ட்ரானிக் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் சென்சாரும் கிடைக்கிறது. 8 மெகாபிக்சல் அல்ட்ரா வைடு கேமரா மற்றும் 2 மெகாபிக்சல் மேக்ரோ கேமரா கிடைக்கிறது. 10X டிஜிட்டல் ஜூமிங் கிடைக்கிறது.

இந்த நத்திங் போன் 3ஏ லைட் ஸ்மார்ட்போனில் 16 மெகாபிக்சல் செல்பா கேமரா கிடைக்கிறது. இதில் 1080p வீடியோ ரெக்கார்டிங் கிடைக்கிறது. பிரைமரி கேமராவில் 4K வீடியோ ரெக்கார்டிங் கிடைக்கிறது. 33W ஃபாஸ்ட் சார்ஜிங்குடன் 5000mAh பேட்டரி இணைக்கப்பட்டு இருக்கிறது. 8.3 மிமீ தடிமன் மற்றும் 199 கிராம் எடையை கொண்டுள்ளது.

IP54 ரேட்டிங் கொண்ட டஸ்ட் மற்றும் ஸ்பிளாஷ் ரெசிஸ்டன்ட் கிடைக்கிறது. இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சாரும் பாட்டம் போர்டெட் ஸ்பீக்கரும் கொடுக்கப்பட்டு இருக்கிறது. 5ஜி எஸ்ஏ, என்எஸ்ஏ கனெக்டிவிட்டி மற்றும் டூயல் 4ஜி வோஎஸ்டிஇ கிடைக்கிறது. 3 ஜெனரேஷன் ஓஎஸ் அப்டேட் மற்றும் 6 வருடங்களுக்கு செக்கியூரிட்டி அப்டேட் கிடைக்கிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Nothing Phone 3a Lite Set For First Sale in Delhi With Exclusive Drop Event This November 29
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X