Home
Mobile

2026 ஆரம்பமே Nothing போன் விலை குறைக்கப்பட்டது.. 50எம்பி கேமரா.. AMOLED டிஸ்பிளே.. எந்த மாடல்?

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நத்திங் போன் 3ஏ லைட் (Nothing Phone 3a Lite) ஸ்மார்ட்போன் ஆனது இந்தியாவில் ரூ.20,999 விலையில் அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால் தற்போது இந்த போனின் விலை குறைக்கப்பட்டுள்ளது. இது குறித்த விரிவான தகவல்களை இங்கே பார்க்கலாம்.

அமேசானில் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட நத்திங் போன் 3ஏ லைட் ஸ்மார்ட்போன் முன்பு ரூ.20,999 விலையில் விற்பனை செய்யப்பட்டது. ஆனால் தற்போது இந்த போனின் விலை குறைக்கப்பட்டு ரூ.20,326 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் அமேசானில் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை இஎம்ஐ முறையில் வாங்கினால் ரூ.1000 தள்ளுபடியும் கிடைக்கும். ஆகவே இந்த போனை ரூ.19,326 விலையில் வாங்கிவிட முடியும்.

2026 ஆரம்பமே Nothing போன் விலை குறைக்கப்பட்டது.. எந்த மாடல்?

நத்திங் போன் 3ஏ லைட் அம்சங்கள் (Nothing Phone 3a Lite Specifications): சக்திவாய்ந்த மீடியாடெக் டைமன்சிட்டி 7300 ப்ரோ எஸ்ஒசி (MediaTek Dimensity 7300 Pro SoC) சிப்செட் வசதி நத்திங் போன் 3ஏ லைட் ஸ்மார்ட்போனில் உள்ளது. குறிப்பாக இந்த சிப்செட் மேம்பட்ட செயல்திறன் வழங்கும். ஆகவே இந்த ஸ்மார்ட்போனில் அனைத்து ஆப்களையும் தடையின்றி பயன்படுத்தலாம்.

குறிப்பாக 6.77 இன்ச் புல் எச்டி பிளஸ் அமோலெட் (AMOLED) டிஸ்பிளே வசதியுடன் இந்த போன் வெளிவந்துள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 1080 x 2392 பிக்சல்கள், 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 3000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்கள் உள்ளன. எனவே இந்த ஸ்மார்ட்போன் சிறந்த திரை அனுபவத்தை வழங்கும்.

அதேபோல் 50 எம்பி மெயின் கேமரா + 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 2 எம்பி மேக்ரோ கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப் கொண்டுள்ளது நத்திங் போன் 3ஏ லைட் ஸ்மார்ட்போன். இந்த ஸ்மார்ட்போன் மூலம் 4கே வீடியோ பதிவு செய்ய முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமராவும் உள்ளது.

8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்டுள்ளது இந்த நத்திங் போன் 3ஏ லைட் ஸ்மார்ட்போன் மாடல். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இந்த ஸ்மார்ட்போனில் உள்ளது. அதாவது 2டிபி வரை மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இதில் உள்ளது.

IP54 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & ஸ்பிளாஷ் ரெசிஸ்டன்ஸ் உடன் இந்த புதிய நத்திங் போன் 3ஏ லைட் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்ய்பட்டுள்ளது. மேலும் டூயல் 5ஜி, 4ஜி வோல்ட்இ, வைஃபை 6, ப்ளூடூத் 5.3, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த போனில் உள்ளன.

நத்திங் போன் 3ஏ லைட் ஸ்மார்ட்போன் 5000mAh பேட்டரி உடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 33W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளது. பின்பு இந்த போனின் எடை 199 கிராம் ஆகும்

மேலும் யூ.எஸ்.பி டைப்-சி ஆடியோ (USB Type-C Audio), பாட்டம் போர்டெட் ஸ்பீக்கர் (Bottom-ported Speaker) ஆதரவுகள் இதில் உள்ளன. இன்-டிஸ்பிளே ஆப்டிகல் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Optical Fingerprint Sensor) ஆதரவும் இந்த போனில் உள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Nothing Phone 3a Lite price cut in India: check all details here
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X