உஷார் ஆன கார்ல் பெய்.. சிங்கிள் 8GB ரேம் ஆப்ஷன்.. பக்காவான பட்ஜெட் விலையில் புது Nothing போன்!
நத்திங் நிறுவனம் உஷாராகி விட்டது. நத்திங் போன் 3 ஸ்மார்ட்போனிற்கு எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்கவில்லை. இப்படியே "பிளாக்ஷிப் போன்கள்" பின்னால் போனால் கடையை இழுத்து சாத்த வேண்டியது தான். பட்ஜெட் பக்கம் இறங்கிவிட வேண்டியது தான் என்று நத்திங் நிறுவனம் உஷாராகி விட்டது.
நத்திங் நிறுவனமானது உலகளவில் ஒரு புதிய ஸ்மார்ட்போனையும் விரைவில் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. அதாவது இந்தியா உட்பட உலகளாவிய சந்தைகளில் நத்திங் போன் 3ஏ லைட் (Nothing Phone 3a Lite) என்கிற ஸ்மார்ட்போனை விரைவில் அறிமுகப்படுத்தும் என்று கூறப்படுகிறது. இதை உறுதிப்படுத்தும் வண்ணம் நத்திங் போன் 3ஏ லைட் ஸ்மார்ட்போனின் விலை மற்றும் வெளியீட்டு தேதி குறித்த விவங்கள் ஆன்லைனில் லீக் ஆகியுள்ளது.

பிரெஞ்சு வெளியீடான டீலாப்ஸின் அறிக்கையின்படி, நத்திங் போன் 3ஏ லைட் ஸ்மார்ட்போன் ஆனது 2025 நவம்பர் மாத தொடக்கத்தில் ஐரோப்பாவில் அறிமுகப்படுத்தப்படும் என்று தெரிவிக்கிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் நவம்பர் 04 ஆம் தேதி அன்று ஐரோப்பாவில் விற்பனைக்கு வரக்கூடும் என்றும், விலையை பொறுத்தவரை இது 249.99 யூரோவிற்கு (இந்திய மதிப்பின்படி ரூ.25,500) விற்பனைக்கு வரக்கூடும் என்றும் அறிக்கை குறிப்பிடுகிறது.
சுவாரஸ்யமாக, சில ஐரோப்பிய நாடுகளில் இந்த ஸ்மார்ட்போனின் விலை 239.99 யூரோவாக (இந்திய மதிப்பின்படி ரூ.24,500) ஆக இருக்கலாம் என்றும் அந்த அறிக்கை வெளிப்படுத்துகிறது. இது நத்திங் போன் 3ஏ லைட் ஸ்மார்ட்போனின் சிங்கிள் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷனின் விலையாக இருக்கலாம்
இந்த ஸ்மார்ட்போன் வழக்கம் போல பிளாக் மற்றும் ஒயிட் ஆகிய 2 கலர் ஆப்ஷன்களில் வெளியாகலாம். இருப்பினும் நத்திங் போன் 3ஏ லைட் ஸ்மார்ட்போனின் சரியான வெளியீட்டு தேதி குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை, இது அதே நாளில் (நவம்பர் 4 அன்று) இந்தியாவிலும் விற்பனைக்கு வருமா என்பதிலும் எந்த உறுதிப்பாடும் இல்லை.
நத்திங் போன் 3ஏ லைட் ஸ்மார்ட்போனில் என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்? இது ஒரு ஆக்டா-கோர் சிப்செட்டால் இயக்கப்படலாம். பெரும்பாலும் அது மீடியாடெக் டைமன்சிட்டி 7300 ஆக இருக்கலாம். இந்த சிப்செட் மாலி-ஜி615 எம்சி2 ஜிபியுவுடன் இணைக்கப்படலாம். மேலும் இந்த ஸ்மார்ட்போன் 8 ஜிபி ரேம் உடன் வரலாம் மற்றும் ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் கொண்டு இயங்கலாம்.
நத்திங் போன் 2ஏ என்ன விலைக்கு அறிமுகமானது, இப்போது என்ன விலைக்கு வாங்க கிடைக்கிறது? இந்த ஸ்மார்ட்போனின் பேஸிக் 8ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.23,999 க்கு அறிமுகமானது. இப்போதும் பிளிப்கார்ட் மற்றும் அமேசான் இந்தியா ஆகிய 2 இ-காமர்ஸ் தளங்களிலும் அதே ரூ.23,999 க்கு தான் வாங்க கிடைக்கிறது.
நத்திங் போன் 2ஏ ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்: பேக் பேனலில் மூன்று கிளிஃப் எல்இடி ஸ்ட்ரிப்ஸ்களை (Glyph LED strips) கொண்டுள்ள நத்திங் போன் 2ஏ ஸ்மார்ட்போனானது டூயல் ரியர் கேமரா செட்டப்பை கொண்டுள்ளது. அதில் ஓஐஎஸ்-க்கான ஆதரவு உடனான 50எம்பி மெயின் கேமரா சென்சார் + 50எம்பி அல்ட்ரா-வைட்-ஆங்கிள் கேமரா உள்ளது.
டஸ்ட் மற்றும் வாட்டர் ப்ரூஃப்பிற்கான ஐபி54 ரேட்டிங் உடன் வரும் நத்திங் போன் 2ஏ ஸ்மார்ட்போனானது எப்எச்டி பிளஸ் ரெசல்யூஷன், 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 1300 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் எச்டிஆர் ஆதரவு உடனான 6.7-இன்ச் பிளாட் ஓஎல்இடி டிஸ்பிளேவை கொண்டுள்ளது, டிஸ்பிளேவின் மேல்பக்கத்தில் 32எம்பி செல்பீ கேமரா உள்ளது; இதில் இன்-டிஸ்பிளே ஃ பிங்கர் பிரிண்ட் ஸ்கேனரும் உள்ளது.
மீடியாடெக் டைமன்சிட்டி7200 ப்ரோ சிப்செட் உடன் வரும் நத்திங் போன் 2 ஸ்மார்ட்போன் ஆனது 12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி வரையிலான இன்டர்னல் ஸ்டோரேஜை பேக் செய்கிறது. ஆண்ட்ராய்டு 14 அவுட் ஆஃப் தி பாக்ஸ் அடிப்படையிலான நத்திங் ஓஎஸ் 2.5 கொண்டு இயங்கும் இந்த ஸ்மார்ட்போன் 45W ஃபாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் 5,000mAh பேட்டரியை பேக் செய்கிறது.


Click it and Unblock the Notifications








