Home
Mobile

ஆரம்பமே ஆஃபர்.. இந்தியாவில் அறிமுகமானது புது Nothing போன்.. AMOLED டிஸ்பிளே.. எந்த மாடல்? என்ன விலை?

இந்தியாவில் நத்திங் நிறுவனம் தனது புதிய நத்திங் போன் 3ஏ லைட் (Nothing Phone 3a Lite) ஸ்மார்ட்போனை இன்று அறிமுகம் செய்துள்ளது. அசத்தலான வடிவமைப்பு மற்றும் மேம்பட்ட அம்சங்களுடன் இந்த புதிய போன் வெளிவந்துள்ளது. இப்போது நத்திங் போன் 3ஏ லைட் மாடலின் விலை, விற்பனை மற்றும் அம்சங்களைப் பார்க்கலாம்.

நத்திங் போன் 3ஏ லைட் அம்சங்கள் (Nothing Phone 3a Lite Specifications): 6.77 இன்ச் புல் எச்டி பிளஸ் அமோலெட் (AMOLED) டிஸ்பிளே வசதியுடன் இந்த போன் வெளிவந்துள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 1080 x 2392 பிக்சல்கள், 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 3000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்கள் உள்ளன. எனவே இந்த ஸ்மார்ட்போன் சிறந்த திரை அனுபவத்தை வழங்கும்.

ஆரம்பமே ஆஃபர்.. இந்தியாவில் அறிமுகமானது புது Nothing போன்.. எந்த மாடல்

அதேபோல் மீடியாடெக் டைமன்சிட்டி 7300 ப்ரோ எஸ்ஒசி (MediaTek Dimensity 7300 Pro SoC) சிப்செட் வசதி நத்திங் போன் 3ஏ லைட் ஸ்மார்ட்போனில் உள்ளது. குறிப்பாக இந்த சிப்செட் மேம்பட்ட செயல்திறன் வழங்கும். ஆகவே இந்த ஸ்மார்ட்போனில் அனைத்து ஆப்களையும் தடையின்றி பயன்படுத்தலாம்.

குறிப்பாக Nothing OS 3.5 சார்ந்த ஆணட்ராய்டு 15 (Android 15) இயங்குதள வசதி நத்திங் போன் 3ஏ லைட் ஸ்மார்ட்போனில் உள்ளது. ஆனாலும் இந்த ஸ்மார்ட்போனுக்கு 3 வருட ஓஎஸ் அப்டேட் மற்றும் 6 வருட பாதுகாப்பு அப்டேட்களும் கிடைக்கும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

50 எம்பி மெயின் கேமரா + 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 2 எம்பி மேக்ரோ கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப் கொண்டுள்ளது நத்திங் போன் 3ஏ லைட் ஸ்மார்ட்போன். இந்த ஸ்மார்ட்போன் மூலம் 4கே வீடியோ பதிவு செய்ய முடியும். மேலும் செல்பிகளுக்கும்இ வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமராவும் உள்ளது.

8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மற்றும் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி ஆகிய இரண்டு வேரியண்ட்களில் நத்திங் போன் 3ஏ லைட் ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரும். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இந்த ஸ்மார்ட்போனில் உள்ளது. அதாவது 2டிபி வரை மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இதில் உள்ளது.

அதுவும் IP54 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & ஸ்பிளாஷ் ரெசிஸ்டன்ஸ் உடன் இந்த புதிய நத்திங் போன் 3ஏ லைட் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்ய்பட்டுள்ளது. மேலும் டூயல் 5ஜி, 4ஜி வோல்ட்இ, வைஃபை 6, ப்ளூடூத் 5.3, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த போனில் உள்ளன

யூ.எஸ்.பி டைப்-சி ஆடியோ (USB Type-C Audio), பாட்டம் போர்டெட் ஸ்பீக்கர் (Bottom-ported Speaker) ஆதரவுகள் இதில் உள்ளன. மேலும் இன்-டிஸ்பிளே ஆப்டிகல் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Optical Fingerprint Sensor) ஆதரவும் இந்த போனில் உள்ளது.

ஆரம்பமே ஆஃபர்.. இந்தியாவில் அறிமுகமானது புது Nothing போன்.. எந்த மாடல்

5000mAh பேட்டரி உடன் நத்திங் போன் 3ஏ லைட் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 33W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளது. பின்பு இந்த போனின் எடை 199 கிராம் ஆகும்.

நத்திங் போன் 3ஏ லைட் விலை மற்றும் விற்பனை
8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட நத்திங் போன் 3ஏ லைட் ஸ்மார்ட்போனின் விலை ரூ.20.999-ஆக உள்ளது. பின்பு இதன் 8ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் விலை ரூ.22,999-ஆக உள்ளது. வரும் டிசம்பர் 5-ம் தேதி இந்த போனை பிளிப்கார்ட்டில் வாங்க முடியும். தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை வாங்கினால் ரூ.1000 தள்ளுபடியும் உள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனை ரூ.19,999 விலையில் வாங்கிவிட முடியும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Nothing Phone 3a Lite launched in India: check specifications, price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X