Home
Mobile

மொத்த இந்தியாவும் வாங்குமே.. போட்டு தாக்கும் பட்ஜெட் விலையில் புது Nothing Phone 3a Lite 5ஜி அறிமுகம்!

கார்ல் பெய் (Carl Pei) தலைமையிலான நத்திங் நிறுவனத்தின் லேட்டஸ்ட் மிட்ரேஞ்ச் ஸ்மார்ட்போனாக நத்திங் போன் 3ஏ லைட் (Nothing Phone 3a Lite) உலகளவில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. பெயர் குறிப்பிடுவது போலவே இது நத்திங் போன் 3ஏ சீரிஸின் கீழ் இணையும்.

இந்த புதிய மாடல் ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 7300 ப்ரோ சிப், 8ஜிபி ரேம், 256ஜிபி ஸ்டோரேஜ், 50 எம்பி பிரைமரி கேமரா, 33W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 5000mAh பேட்டரி ஆகிய முக்கிய அம்சங்களை பேக் செய்கிறது.

பட்ஜெட் விலையில் புது Nothing Phone 3a Lite 5ஜி அறிமுகம்!

நத்திங் போன் 3ஏ லைட் ஸ்மார்ட்போனின் அம்சங்கள்:
- டூயல் சிம் ஆதரவு கொண்ட 5ஜி ஸ்மார்ட்போன்
- ஆண்ட்ராய்டு 15-அடிப்படையிலான நத்திங் ஓஎஸ் 3.5
- 3 ஆண்டுகளுக்கு மேஜர் ஆண்ட்ராய்டு அப்டேட்ஸ் மற்றும் 6 ஆண்டுகளுக்கு செக்யூரிட்டி அப்டேட்ஸ்

- 6.77-இன்ச் FHD+ (1080 × 2392 பிக்சல்ஸ்) பிளேக்சிபில் AMOLED டிஸ்பிளே
- 120Hz வரை ரெஃப்ரெஷ் ரேட்
- 3000 நிட்ஸ் பீக் HDR ப்ரைட்னஸ்
- 387 பிபிஐ பிக்சல் டென்சிட்டி
- 1000Hz டச் சாம்பிளிங் ரேட்
- 1.07 பில்லியன் கலர்ஸ்
- 2160Hz PWM டிம்மிங்

- ஆக்டா கோர் 4nm மீடியாடெக் டைமன்சிட்டி 7300 ப்ரோ சிப்செட்
- 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ்
- மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் வழியாக 2டிபி வரை விரிவாக்கலாம்
- பேக் பேனலில் கிளிஃப் லைட் நோட்டிபிகேஷன் இன்டிகேட்டர்

- ட்ரிபிள்-ரியர் கேமரா யூனிட்
- 1/1.57-இன்ச் சாம்சங் சென்சார் (f/1.88), ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (OIS) மற்றும் எலக்ட்ரானிக் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (EIS) கொண்ட 50 மெகாபிக்சல் பிரைமரி ஷூட்டர்
- 119.5-டிகிரி பீல்ட் ஆப் வியூ கொண்ட 8-மெகாபிக்சல் அல்ட்ராவைடு கேமரா (f/2.2)
- மூன்றாவது கேமராவை பற்றிய விவரங்கள் இல்லை
- 16-மெகாபிக்சல் (f/2.45) செல்பீ கேமரா

- 30fps இல் 4K ரெசல்யூஷனில் வீடியோ ரெக்கார்ட்
- 60fps வரை 1080p வீடியோ ரெக்கார்ட்
- 120fps இல் 1080p ஸ்லோ-மோ வீடியோ ரெக்கார்ட்
- ட்ரூலென்ஸ் எஞ்சின் 4.0
- மோஷன் கேப்சர், போர்ட்ரெய்ட் ஆப்டிமைசர் மற்றும் நைட் மோட்

- இன்-டிஸ்பிளே பிங்கர் பிரிண்ட் சென்சார்
- தூசி மற்றும் ஸ்பிளாஸ் எதிர்ப்பிற்கான IP54 ரேட்டிங்
- முன் மற்றும் பின் பக்க பேனல்களுக்கு பாண்டா கிளாஸ் ( Panda Glass) ப்ரொடெக்ஷன்
- 33W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 5,000mAh பேட்டரி
- 5W வயர்டு ரிவர்ஸ் சார்ஜிங் ஆதரவு
- அளவீட்டில் 164×78×8.3மிமீ
- எடையில் சுமார் 199 கிராம்

நத்திங் போன் 3ஏ லைட் விலை மற்றும் விற்பனை: நத்திங் போன் 3ஏ லைட் ஸ்மார்ட்போனின் 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ஆனது இந்திய ரூபாய் மதிப்பின்படி தோராயமாக ரூ.25,600 க்கு அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. இங்கிலாந்தில் இதே மாடல், இந்திய ரூபாய் மதிப்பின்படி தோராயமாக ரூ.29,000 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது

256ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷனுடன் வரும் டாப்-ஆஃப்-லைன் வேரியண்டின் விலை, இந்திய ரூபாய் மதிப்பின்படி தோராயமாக ரூ.28,700 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இங்கிலாந்தில், இதே ஸ்டோரேஜ் ஆப்ஷனின் விலை, இந்திய ரூபாய் மதிப்பின்படி தோராயமாக ரூ. 32,500 க்கு அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. இது தேர்ந்தெடுக்கப்பட்ட சந்தைகளில் ஒயிட் மற்றும் பிளாக் கலர் ஆப்ஷன்களில் விற்பனைக்கு வரும். இந்திய அறிமுகம் மற்றும் விலை விவரங்கள் இன்னும் வெளிப்படுத்தப்படவில்லை.

More from GizBot

Best Mobiles in India

English summary
Nothing Phone 3a Lite Launched Price Specifications Features
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X