அடுத்த Nothing போன் ரெடி.. ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ்.. டைமன்சிட்டி சிப்செட்.. 8ஜிபி ரேம்.. எந்த மாடல்?
நத்திங் நிறுவனம் நத்திங் போன் 3ஏ லைட் (Nothing Phone 3A Lite) எனும் ஸ்மார்ட்போனை உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. அதாவது இந்த போன் வரும் மாதங்களில் அறிமுகம் செய்யப்பட அதிக வாய்ப்புகள் உள்ளது. இந்நிலையில் நத்திங் போன் 3ஏ லைட் ஸ்மார்ட்போனின் சில விவரக்குறிப்புகள் தற்போது ஆன்லைனில் கசிந்துள்ளது.
நத்திங் போன் 3ஏ லைட் அம்சங்கள் (Nothing Phone 3A Lite Specifications): மீடியாடெக் டைமன்சிட்டி 7300 சிப்செட்(MediaTek's Dimensity 7300 chipset) உடன் இந்த புதிய நத்திங் போன் 3ஏ லைட் மாடல் அறிமுகம் செய்யப்படும். எனவே இந்த ஸ்மார்ட்போனில் அனைத்து ஆப்களையும் தடையின்றி பயன்படுத்த முடியும். குறிப்பாக இந்த போனுக்கு வழங்கப்பட்ட சிப்செட் ஆனது மேம்பட்ட செயல்திறன் வழங்கும்.

அதேபோல் ஆண்ட்ராய்டு 15 இயங்குதள வசதியுடன் நத்திங் போன் 3ஏ லைட் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும். மேலும் 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி மெமரி வசதியுடன் இந்த போன் வெளிவரும். தற்போது நத்திங் போன் 3ஏ லைட் போனின் சில அம்சங்கள் மட்டுமே வெளியாகி உள்ளது. கூடிய விரைவில் இந்த போனின் அனைத்து அம்சங்களும் வெளியாகும். மேலும் ஏற்கனவே வெளியான நத்திங் போன் 3ஏ போனின் அம்சங்களை இப்போது பார்க்கலாம்.
நத்திங் போன் 3ஏ அம்சங்கள் (Nothing Phone 3A Specifications): இந்த போனின் பேக் பேனலில் கிளிஃப் லைட்டிங் செட்டப் உள்ளது. குறிப்பாக இது ஒரு தனித்துவமான அனுபவத்தை கொடுக்கும். அதேபோல் ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ்-ஐ சார்ந்த நத்திங் ஓஎஸ் 3.1 மூலம் இந்த போன் இயங்குகிறது. ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும்.
6.77 இன்ச் AMOLED டிஸ்பிளே வசதியுடன் நத்திங் போன் 3ஏ ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 3000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனின் டிஸ்பிளே சிறந்த திரை அனுபவத்தை கொடுக்கும்.
அதேபோல் 50 மெகாபிக்சல் ப்ரைமரி கேமரா + 8 மெகாபிக்சல் அல்ட்ராவைடு கேமரா + 50 மெகாபிக்சல் டெலிஃபோட்டோ சென்சார் என்கிற ஹாரிசாண்டல் ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப் கொண்டுள்ளது இந்த நத்திங் போன் 3ஏ ஸ்மார்ட்போன். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமராவும் இந்த போனில் உள்ளது.

ஸ்னாப்டிராகன் 7எஸ் ஜென் 3 சிப்செட் வசதியுடன் இந்த நத்திங் போன் 3ஏ ஸ்மார்ட்போன் வெளிவந்தது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்ோனில் வீடியோ எடிட்டிங் மற்றும் கேமிங் ஆப்களை தடையின்றி பயன்படுத்த முடியும். அதாவது இந்த போனுக்கு வழங்கப்பட்ட சிப்செட் மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும்.
5000mAh பேட்டரி உடன் நத்திங் போன் 3ஏ ஸ்மார்ட்போன் வெளிவந்தது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனை வாங்கும் பயனர்களுக்கு சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த ஸ்மார்ட்போன் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 50W பாஸ்ட் சார்ஜிங் ஆதரவும் உள்ளது. மேலும் தற்போது நத்திங் போன் 3ஏ ஸ்மார்ட்போன் ஆனது ரூ.23,999 விலையில் வாங்க கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications