Home
Mobile

வெயிட் பண்ணா இதுக்கு பண்ணனும்.. 5000mAh பேட்டரி.. 50MP கேமரா.. 33W ஃபாஸ்ட் சார்ஜிங்.. எந்த மாடல்?

நத்திங் பிரியர்களை வெயிட்டிங் மோடில் போட்டுவைத்த நத்திங் போன் 3ஏ லைட் (Nothing Phone 3a Lite) ஸ்மார்ட்போனில் ஏற்கனவே ஒயிட் மற்றும் பிளாக் கலர்கள் உறுதியாகின. இப்போது, பெரும்பானலான ஸ்மார்ட்போன் பிரியர்கள் விரும்பும்படியான பிரத்யேக கலர் சேர்க்கப்பட்டு இருக்கிறது. இதனால், நத்திங் பிரியர்கள் மேலும் எதிர்பார்ப்பில் இருக்கின்றனர். இந்த நத்திங் போன் 3ஏ லைட் ஸ்மார்ட்போனின் முழு விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

இந்திய மார்கெட்டில் வருகிற நவம்பர் 27ஆம் தேதி நத்திங் போன் 3ஏ லைட் வெளியாக இருக்கிறது. ஏற்கனவே, குளோபல் மார்கெட்டில் வெளியாகி இருப்பதால், பீச்சர்கள் முதல் டிசைன் மற்றும் கலர் விவரங்கள் வரையில் தெரிந்து கொள்ள முடிகிறது. ஆகவே, இந்த ஸ்மார்ட்போனில் பிளாக் (Black) மற்றும் ஒயிட் (White) கலர்கள் கிடைக்க இருப்பது ஏற்கனவே உறுதியாகி இருந்தது. ஆனால், இந்தியாவுக்கு பிரத்யேக கலர் வர இருப்பது தெரியவந்துள்ளது.

வெயிட் பண்ணா இதுக்கு பண்ணனும்.. 5000mAh பேட்டரி.. 50MP கேமரா.. மாடல்?

குளோபல் மார்கெட்டில் பிளாக் மற்றும் ஒயிட் கலர்கள் மட்டுமே வெளியாகின. ஆனால், இந்தியாவில் பிரத்யேகமாக ப்ளூ கலர் வேரியண்ட் கிடைக்க இருப்பது டீசர் மூலம் உறுதியாகி இருக்கிறது. அதாவது, நத்திங் இந்தியா நிறுவனம், அதனுடயை இன்ஸ்டா பக்கத்தில் ப்ளூ கலருடைய கேண்டில் எரிந்து, உருகும்படியும், அந்த உருகிய மெழுகு திரவத்தின் எடை 199 கிராமில் இருப்பதையும் அந்த டீசரில் விளக்கி இருக்கிறது.

அதேபோல லைட் ப்ளூ கேண்டில் (Lite Blue Candle) என்பதையும் கீழே குறிப்பிட்டு இருக்கிறது. ஆகவே, இந்தியாவில் பிரத்யேக கலர் வேரியண்ட் கிடைக்க இருப்பது உறுதியாகி விட்டது. நத்திங் பிரியர்களுக்கு கூடுதலாக ஒரு கலர் கிடைக்க இருப்பதால், இது விற்பனையை அதிகரிக்க வழிவகுக்கலாம். இந்த நத்திங் போன் 3ஏ லைட் ஸ்மார்ட்போனின் பீச்சர்களை தெரிந்து கொள்ளலாம்.

நத்திங் போன் 3ஏ லைட் அம்சங்கள் (Nothing Phone 3a Lite Specifications): இந்த ஸ்மார்ட்போனில் ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) கொண்ட ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 7300 ப்ரோ 4என்எம் (Octa Core MediaTek Dimensity 7300 Pro 4nm) சிப்செட் கிடைக்கிறது. மேலும், பிரத்யேக நத்திங் பீச்சர்களுடன் நத்திங் ஓஎஸ் 3.5 (Nothing OS 3.5) கொடுக்கப்படுகிறது. 3 ஜெனரேஷன் ஓஎஸ் அப்டேட் கிடைக்கிறது.

இந்தியாலும் இதே அப்டேட்களை எதிர்பார்க்கலாம். புல்எச்டிபிளஸ் (FHD+) ரெசொலூஷன் கொண்ட 6.77 இன்ச் (1080 x 2392 பிக்சல்கள்) அமோலெட் (AMOLED) டிஸ்பிளே கிடைக்கிறது. இந்த டிஸ்பிளேவுக்கு பாண்டா கிளாஸ் (Panda Glass) புரொடெக்சன் கிடைக்கிறது. 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 480 டச் சாம்பிளிங் ரேட் மற்றும் 3000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கொடுக்கப்படுகிறது. 2160Hz PWM டிம்மிங் ஃபிரிகொன்சி உள்ளது.

இந்த நத்திங் போன் 3ஏ லைட் ஸ்மார்ட்போனில் 50 எம்பி மெயின் கேமரா + 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 2 எம்பி மேக்ரோ கேமரா கிடைக்கிறது. ஈஐஎஸ் (EIS) டெக்னாலஜி கிடைக்கிறது. 16 எம்பி செல்பீ கேமரா கிடைக்கிறது. 33W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 5000mAh பேட்டரி கிடைக்கிறது. இந்த பேட்டரியுடன் 199 கிராம் எடை வருகிறது. ஆகவே, மூன்று கலர் வேரியண்ட்களும் 199 கிராம் எடையில் இருக்கப்போகிறது.

குளோபல் மார்கெட்டில் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.25,000 பட்ஜெட்டில் இருந்தது. ஆகவே, இந்த பட்ஜெட்டை இந்திய மார்கெட்டிலும் எதிர்பார்க்கலாம், அல்லது விலையில் ரூ.1,000 மாற்றம் இருக்கும். நவம்பர் 27ஆம் தேதிக்கு முன்பாகவே பீச்சர்கள், கலர் மற்றும் பட்ஜெட் செக்மெண்ட் அதிகாரப்பூர்வமாக உறுதியாகவும் வாய்ப்புகள் இருக்கிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Nothing Phone 3a Lite India Launch With Blue Variant Confirmed Expected Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X