செஞ்சி விட்டாச்சு ப்ரோ.. AMOLED டிஸ்பிளே.. 50MP கேமரா.. 5000mAh பேட்டரி.. பட்ஜெட் ரேட்ல Nothing-ன் புது போன்!
இந்தியாவில் இருக்கும் ஒட்டுமொத்த ஸ்மார்ட்போன் பிரியர்களும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த அறிவிப்பு வந்துவிட்டது. நத்திங் போன் 3ஏ லைட் (Nothing Phone 3a Lite) ஸ்மார்ட்போன் இந்தியாவில் வெளியாகும் என்பதை நத்திங் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்துவிட்டது. இந்த நத்திங் ஸ்மார்ட்போனின் பீச்சர்கள் மற்றும் விலை விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
குளோபல் மார்கெட்டில் இந்த நத்திங் போன் 3ஏ லைட் ஸ்மார்ட்போன் அக்டோபரில் வெளியானது. பட்ஜெட் விலையில் வெளியாகியதால், இந்திய மார்கெட்டில் எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. இப்போது, அவர்களை வெயிட்டிங் மோடில் போட்டு வைக்கும்படி நத்திங் இந்தியா நிறுவனம் அந்த ஸ்மார்ட்போனின் வெளியீட்டை உறுதி செய்துள்ளது.

பிளாக் மற்றும் ஒயிட் கலர்களுடன் போஸ்டரை வெளியிட்டு, விரைவில் இந்தியாவில் வெளியாகும் என்பதை எக்ஸ் தளத்தில் உறுதி செய்துள்ளது. ஆகவே, ஓரிரு வாரங்களில் வெளியீட்டு தேதி மற்றும் பீச்சர்கள் உறுதி செய்யப்பட இருக்கிறது. இந்த டிசம்பர் மாதத்துக்குள் வெளியாகவும் வாய்ப்புள்ளது. குளோபல் வேரியண்ட்டின் பீச்சர்கள் மற்றும் விலையை தெரிந்து கொள்ளலாம்.
நத்திங் போன் 3ஏ லைட் அம்சங்கள் (Nothing Phone 3a Lite Specifications): இந்த நத்திங் ஸ்மார்ட்போனில் பாண்டா கிளாஸ் (Panda Glass) புரொடெக்சன் கொண்ட 6.77 இன்ச் (1080 x 2392 பிக்சல்கள்) அமோலெட் (AMOLED) டிஸ்பிளே கிடைக்கிறது. இந்த டிஸ்பிளேவில் புல்எச்டிபிளஸ் (FHD+) ரெசொலூஷன், 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 480 டச் சாம்பிளிங் ரேட் கிடைக்கிறது.
மேலும், 2160Hz PWM டிம்மிங் ஃபிரிகொன்சி, 3000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் எச்டிஆர்10பிளஸ் (HDR10+) கிடைக்கிறது. ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) பேஸ்டு நத்திங் ஓஎஸ் 3.5 (Nothing OS 3.5) கிடைக்கிறது. இந்தியாவில் ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) எதிர்பார்க்கலாம். ஏனென்றால், 3 ஜெனரேஷன் ஓஎஸ் அப்டேட்கள் மற்றும் 6 வருடங்களுக்கு செக்யூரிட்டி அப்டேட்கள் உள்ளன.
ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 7300 ப்ரோ 4என்எம் (Octa Core MediaTek Dimensity 7300 Pro 4nm) சிப்செட் கிடைக்கிறது. 50 எம்பி மெயின் கேமரா கிடைக்கிறது. இதில் சாம்சங் சென்சார், ஈஐஎஸ் டெக்னாலஜி மற்றும் 4K வீடியோ ரெக்கார்டிங் கிடைக்கிறது. மேலும், 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 2 எம்பி மேக்ரோ கேமராவுடன் டிரிபிள் ரியர் கேமரா சிஸ்டம் கிடைக்கிறது.
10X டிஜிட்டல் ஜூமிங் மற்றும் 16 எம்பி செல்பீ கேமரா கிடைக்கிறது. இந்த நத்திங் போன் 3ஏ லைட் ஸ்மார்ட்போனில் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மற்றும் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்கள் கிடைக்கிறது. 33W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 5000mAh பேட்டரி கிடைக்கிறது. இந்த பேட்டரியுடன் 8.3 எம்எம் தடிமன் வருகிறது.
199 கிராம் எடை கொடுக்கிறது. இன்-டிஸ்பிளே ஆப்டிகல் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Optical Fingerprint Sensor) மற்றும் பாட்டம் போர்டெட் ஸ்பீக்கர் (Bottom-ported Speaker) கிடைக்கிறது. இந்த நத்திங் போன் 3ஏ லைட் ஸ்மார்ட்போனில் IP54 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & ஸ்பிளாஷ் ரெசிஸ்டன்ஸ் கிடைக்கிறது. கிளாஸ் பேக் பேனலுடன் பிளாக் மற்றும் ஒயிட் கலரில் கிடைக்கிறது.
8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.26,000 பட்ஜெட்டிலும், 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.29,000 பட்ஜெட்டிலும் இருக்கிறது. இதே பட்ஜெட்டில் இந்திய மார்கெட்டில் வெளியாக வாய்ப்புள்ளது. அதோடு ப்ரீ-புக்கிங், பேங்க் தள்ளுபடிகள் போக மேலும் மலிவாக கிடைக்கவும் வாய்ப்புகள் இருக்கின்றன.


Click it and Unblock the Notifications








