Home
Mobile

நவம்பர் 27 வரை எந்த போனும் வாங்காதீங்க.. 50எம்பி கேமரா.. AMOLED டிஸ்பிளே.. வருகிறது Nothing போன்.. எந்த மாடல்?

நத்திங் போன் 3ஏ லைட் (Nothing Phone 3a Lite) ஸ்மார்ட்போன் ஆனது வரும் நவம்பர் 27-ம் தேதி மதிய 12 மணி அளவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் பிளிப்கார்ட் தளத்தில் விற்பனைக்கு வரும். தற்போது இந்த போனின் முக்கிய விவரக்குறிப்புகள் வெளியாகி உள்ளது. இது குறித்த தகவல்களை இங்கே பார்க்கலாம்.

நத்திங் போன் 3ஏ லைட் அம்சங்கள் (Nothing Phone 3a Lite Specifications): 6.77 இன்ச் புல் எச்டி பிளஸ் அமோலெட் (AMOLED) டிஸ்பிளே வசதியுடன் இந்த போன் வெளிவரும். மேலும் இதன் டிஸ்பிளேவில் 1080 x 2392 பிக்சல்கள், 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 3000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்கள் உள்ளன.

நவம்பர் 27 வரை எந்த போனும் வாங்காதீங்க.. வருகிறது Nothing போன்..

அதேபோல் நத்திங் போன் 3ஏ லைட் ஸ்மார்ட்போனில் Nothing OS 4.0 சார்ந்த ஆணட்ராய்டு 16 (Android 16) இயங்குதள வசதி உள்ளது. ஆனாலும் இந்த ஸ்மார்ட்போனுக்கு 3 வருட ஓஎஸ் அப்டேட் மற்றும் 6 வருட பாதுகாப்பு அப்டேட்களும் கிடைக்கும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சக்திவாய்ந்த மீடியாடெக் டைமன்சிட்டி 7300 ப்ரோ எஸ்ஒசி (MediaTek Dimensity 7300 Pro SoC) சிப்செட் வசதி நத்திங் போன் 3ஏ லைட் ஸ்மார்ட்போனில் உள்ளது. குறிப்பாக இந்த சிப்செட் மேம்பட்ட செயல்திறன் வழங்கும். அதுவும் இந்த ஸ்மார்ட்போனில் கேமிங் ஆப்பகளை தடையின்றி பயன்படுத்தலாம்.

50 எம்பி மெயின் கேமரா + 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 2 எம்பி மேக்ரோ கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப் கொண்டுள்ளது புதிய நத்திங் போன் 3ஏ லைட் ஸ்மார்ட்போன். எனவே இந்த ஸ்மார்ட்போன் மூலம் அசத்தலான படங்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமராவும் உள்ளது.

8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மற்றும் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்களில் நத்திங் போன் 3ஏ லைட் ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரும். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இந்த ஸ்மார்ட்போனில் உள்ளது. அதாவது 2டிபி வரை மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இதில் உள்ளது.

கிளிஃப் லைட்டிங் லேஅவுட் (Glyph lighting layout) இந்த போனில் உள்ளது. மேலும் இன்-டிஸ்பிளே ஆப்டிகல் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Optical Fingerprint Sensor) ஆதரவுடன் நத்திங் போன் 3ஏ லைட் போன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நவம்பர் 27 வரை எந்த போனும் வாங்காதீங்க.. வருகிறது Nothing போன்..

பாட்டம் போர்டெட் ஸ்பீக்கர் (Bottom-ported Speaker) ஆதரவு இதில் உள்ளது. IP54 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & ஸ்பிளாஷ் ரெசிஸ்டன்ஸ் உடன் இந்த புதிய நத்திங் போன் 3ஏ லைட் ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். டூயல் 5ஜி, 4ஜி வோல்ட்இ, வைஃபை, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த போனில் உள்ளன.

5000mAh பேட்டரி உடன் நத்திங் போன் 3ஏ லைட் ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். எனவே இந்த ஸ்மார்ட்போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 33W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளது. மேலும் இந்த புதிய போன் பட்ஜெட் விலையில் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Nothing Phone 3a Lite India launch announced: check specifications
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X