இதெல்லாம் நமக்கு தேவையா கோபி.. சத்தமின்றி Nothing நிறுவனம் செய்த செயல்.. 3000 ரூவா மேட்டர்!
ஆசையாக வாங்க வந்த கஸ்டமர்களை "என்னது.. இந்த போனுக்கு இவ்ளோ விலையா?" என்று கூறி, வேறு பிராண்டுகளின் ஸ்மார்ட்போன்களுக்கு 'ஜம்ப்' அடிக்க வைக்கும் நத்திங் (Nothing) நிறுவனமானது.. "இந்த நிலைமையில இதெல்லாம் நமக்கு தேவையா கோபி" என்று சொல்லும் படியான ஒரு வேலையை பார்த்துள்ளது.
கார்ல் பெய் தலைமையிலான நத்திங் நிறுவனமானது, அதன் பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன் ஒன்றின் விலையை திடீரென, கடுமையாக உயர்த்தியுள்ளது. அது நத்திங் போன் 3ஏ லைட் (Nothing Phone 3a Lite) ஸ்மார்ட்போன் ஆகும். இந்தியாவில் இந்த ஸ்மார்ட்போனின் விலை உயர்த்தப்பட்டுள்ளதாக, நம்பகமான டிப்ஸ்டர் ஒருவர் தகவல் வெளியிட்டுள்ளார்.

ஒரே போன் ஆனால் 2 வெவ்வேறு விலைகள்: டிப்ஸ்டர் சஞ்சு சௌத்ரியின் (Sanju Choudhary) கூற்றுப்படி, நத்திங் போன் 3ஏ லைட் ஸ்மார்ட்போன் மீதான இந்த விலை உயர்வு புதிய ஸ்டாக்கிற்கு பொருந்தும், அதே நேரத்தில் பழைய ஸ்டாக் முந்தைய விலையிலேயே விற்கப்படும்.
அப்படி என்ன விலை? நத்திங் போன் 3ஏ லைட் ஸ்மார்ட்போனின் 8ஜிபி ரேம் + 128ஜிபி வேரியண்டின் விலை ரூ.21,999 இலிருந்து ரூ.24,999 ஆக உயர்ந்துள்ளது. இதேபோல 8ஜிபி ரேம் + 256ஜிபி வேரியண்டின் விலை ரூ.23,999 இலிருந்து ரூ.26,999 ஆக உயர்ந்து உள்ளது.
அதாவது நத்திங் போன் 3ஏ லைட் ஸ்மார்ட்போனின் விலை ரூ.3,000 உயர்ந்துள்ளது. முன்னரே குறிப்பிட்டபடி இது புதிய பேட்ச்களுக்கு மட்டுமே பொருந்தும். ஒரு விற்பனையாளரிடம் பழைய ஸ்டாக் இன்னும் இருந்தால், நீங்கள் அசல் விலையையே (அதாவது பழைய விலையையே) காணலாம். எனவே, நீங்கள் இந்த ஸ்மார்ட்போனை எங்கு பார்க்கிறீர்கள் என்பதை பொறுத்து, ஒரே போன் இரண்டு வெவ்வேறு விலைகளில் பட்டியலிடப்பட்டிருக்கலாம்.
இந்த விலை உயர்வுக்கு பின்னால் உள்ள காரணம் என்ன ஏற்கனவே பல நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்களின் விலை உயர்விற்கு என்ன காரணமோ, அதுதான் இதற்கும் காரணம் - மெமரியின் விலை உயர்வு (Mermory Price Hike). இது தொழில்துறை முழுவதும் நடந்து வரும் நிகழ்வுகளுடன் ஒத்துப்போகிறது.
மெமரி பாகங்களின் விலை அதிகரித்து வருகிறது, அதை சமாளிக்க ஸ்மார்ட்போன் பிராண்டுகள் மெதுவாக விலைகளை மாற்றியமைத்து வருகின்றன. மேலும் இந்த விலை உயர்வு இனிவரும் புதிய வெளியீடுகளை பற்றியது மட்டுமல்ல. ஒரு ஸ்மார்ட்போன் சந்தையில் சிறிது காலம் இருந்த பிறகும் கூட ()அதாவது ஏற்கனவே அறிமுகமாகி இருந்தாலும் கூட) விலைகள் உயர்த்தப்பட்டு வருகிறது.
நத்திங் போன் 3ஏ லைட் ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்:
- 120Hz வரை ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.77-இன்ச் FHD+ (1080 × 2392 பிக்சல்ஸ்) பிளெக்சிபில் AMOLED டிஸ்பிளே
- ஆக்டா கோர் 4nm மீடியாடெக் டைமன்சிட்டி 7300 ப்ரோ சிப்செட்
- பேக் பேனலில் கிளிஃப் லைட் நோட்டிபிகேஷன் இன்டிகேட்டர்
- ட்ரிபிள்-ரியர் கேமரா யூனிட்
- 1/1.57-இன்ச் சாம்சங் சென்சார் (f/1.88), ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (OIS) மற்றும் எலக்ட்ரானிக் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (EIS) கொண்ட 50 மெகாபிக்சல் பிரைமரி ஷூட்டர்
- 119.5-டிகிரி பீல்ட் ஆப் வியூ கொண்ட 8-மெகாபிக்சல் அல்ட்ராவைடு கேமரா (f/2.2)
- 16-மெகாபிக்சல் (f/2.45) செல்பீ கேமரா
- இன்-டிஸ்பிளே பிங்கர் பிரிண்ட் சென்சார்
- தூசி மற்றும் ஸ்பிளாஸ் எதிர்ப்பிற்கான IP54 ரேட்டிங்
- முன் மற்றும் பின் பக்க பேனல்களுக்கு பாண்டா கிளாஸ் (Panda Glass) ப்ரொடெக்ஷன்
- 5W வயர்டு ரிவர்ஸ் சார்ஜிங் ஆதரவு மற்றும் 33W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 5,000mAh பேட்டரி


Click it and Unblock the Notifications








