இதுதான் புதிய Nothing போன்.. 50எம்பி கேமரா.. AMOLED டிஸ்பிளே.. எந்த மாடல்? எப்போது அறிமுகம்?
நத்திங் நிறுவனம் இந்தியாவில் நத்திங் போன் 3ஏ (Nothing Phone 3a) மாடலை வரும் மார்ச் 4-ம் தேதி அறிமுகம் செய்ய உள்ளது. இந்நிலையில் நத்திங் போன் 3ஏ போனின் படங்கள் வெளியாகி உள்ளது. அதன்படி இந்த போனில் ரிங் கேமரா டிசைனில் டிரிபிள் ரியர் செட்டப் மற்றும் கிளிப் எல்இடி (Glyph LED) டிசைன் உள்ளிட்ட பல அம்சங்கள் உள்ளன.
குறிப்பாக மற்ற நிறுவனங்கள் ஸ்மார்ட்போன்களை விட தனித்துவமான வடிவமைப்புடன் நத்திங் போன் 3ஏ மாடல் வெளிவரும் என்பதால் நல்ல வரவேற்பு இருக்கும். மேலும் ஆன்லைனில் ஏற்கனவே வெளியான இந்த நத்திங் போன் 3ஏ மாடலின் அம்சங்களை இப்போது சற்று விரிவாகப் பார்க்கலாம்.

நத்திங் போன் 3ஏ அம்சங்கள் (Nothing Phone 3a Specifications): OIS ஆதரவு கொண்ட 50எம்பி பிரைமரி கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 50எம்பி டெலிபோட்டோ லென்ஸ் என்கிற டூயல் ட்ரிபிள் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த நத்திங் போன் 3ஏ வெளிவரும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 50எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன்.
ஆக்டோ கோர் ஸ்னாப்டிராகன் 7எஸ் ஜென் 3 (Octa Core Snapdragon 7s Gen 3) சிப்செட் வசதியுடன் நத்திங் போன் 3ஏ போன் வெளிவரும் என்று கூறப்படுகிறது. குறிப்பாக இந்த சிப்செட் மேம்பட்ட செயல்திறன் வழங்கும். அதேபோல் கேமிங் பயனர்களைக் கவரும் வகையில் அட்ரினோ 720 ஜிபியு (Adreno 720 GPU) கிராபிக்ஸ் கார்டு உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் Nothing OS 3.1 சார்ந்த ஆண்ட்ராய்டு 15 (Android 15) இயங்குதள வசதியுடன் இந்த நத்திங் போன் 3ஏ போன் வெளிவரும். ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும். குறிப்பாக இந்த போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது நத்திங் நிறுவனம்.
12ஜிபி வரை ரேம் மற்றும் 256ஜிபி வரை மெமரி வசதி இந்த புதிய நத்திங் போனில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இன்-டிஸ்பிளே ஆப்டிகல் ஃபிங்கர்பிரிண்ட் ஸ்கேனர் (In-display Optical Fingerprint Sensor) வசதி இந்த போனில் உள்ளது. பின்பு யுஎஸ்பி டைப்-சி ஆடியோ (USB Type-C audio), ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள்(Stereo speakers), ஆதரவுடன் இந்த போன் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது.
அதேபோல் 5000mAh பேட்டரி வசதியுடன் நத்திங் போன் 3ஏ வெளிவரும் என்று கூறப்படுகிறது. எனவே இந்த ஸ்மார்ட்போனை வாங்கும் பயனர்களுக்கு சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 45W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது.

6.72-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் அமோலெட் டிஸ்பிளே (AMOLED display) உடன் அறிமுகம் செய்யப்படும். மேலும் இதன் டிஸ்பிளேவில் 2500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளது. பெரிய டிஸ்பிளே உடன் இந்த போன் வெளிவரும் என்பதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.
மேலும் 5ஜி எஸ்ஏ/என்எஸ்ஏ (5G SA/NSA), டூயல் 4ஜி வோல்ட்இ (Dual 4G VoLTE), வைஃபை 802.11ஏஎக்ஸ் ( Wi-Fi 6 802.11ax, ஜிபிஎஸ்,யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த நத்திங் போன் 3ஏ போனில் உள்ளன. குறிப்பாக இந்த போன் பட்ஜெட் விலையில் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது.
photo credit: nothing, flipkart


Click it and Unblock the Notifications