Home
Mobile

சைலன்ட் ஆக சம்பவம் செஞ்ச Nothing.. புதிய CE போன் அறிமுகம்.. டிசம்பர் 13 அன்று எக்ஸ்க்ளூஸிவ் சேல்!

நத்திங் (Nothing) நிறுவனம் ஒரு புதிய "சிஇ" ஸ்மார்போனை அறிமுகம் செய்துள்ளது. அது நத்திங் போன் 3ஏ கம்யூனிட்டி எடிஷன் ஸ்மார்ட்போன் ஆகும். பெயர் குறிப்பிடுவது போலவே - இதுவொரு லிமிடெட் ஸ்பெஷல் எடிஷன் ஸ்மார்ட்போன் ஆகும் மற்றும் இது நத்திங் கம்யூனிட்டி எடிஷன் திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட ஸ்மார்ட்போன் ஆகும்.

இந்த ஸ்மார்ட்போனை உருவாக்க நத்திங் நிறுவனத்திற்கு உலகளாவிய சமூகத்தின் பங்களிப்புகள் தேவைப்பட்டது. அதன் பிறகு வடிவமைப்பு மற்றும் மென்பொருள் பிரிவுகளில் வெற்றியாளர்கள் அறிவிக்கப்பட்டனர். அதன் அடிப்படையில், அதாவது நத்திங் சமூகத்தால் தேர்ந்தெடுக்கப்பட்ட தனிப்பயனாக்கப்பட்ட மென்பொருள் பிட்களுடன், தனிப்பயன் வன்பொருள் வடிவமைப்புடன் உருவானது.

சைலன்ட் ஆக சம்பவம் செஞ்ச Nothing.. புதிய CE போன் அறிமுகம்!

நத்திங் போன் 3ஏ கம்யூனிட்டி எடிஷன் ஸ்மார்ட்போனின் விலை மற்றும் விற்பனை: இந்த ஸ்மார்ட்போன் சிங்கிள் 12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷனின் கீழ் மட்டுமே அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் இதன் விலை ரூ.28,999 என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது

ஒருவேளை நீங்கள் இந்த லிமிடெட் எடிஷன் ஸ்மார்ட்போனை வாங்க விரும்பினால் மிகவும் வேகமாக செயல்பா வேண்டும். ஏனெனில் இந்நிறுவனத்திடம் 1000 யூனிட்கள் மட்டுமே உள்ளன. மேலும் இது உலகளாவிய சந்தைக்கும் அனுப்பப்படும், ஆக இது ஒரு உண்மையான கலெக்டரின் டிவைஸ் ஆக இருக்கும்.

இந்தியாவில் வாங்குவது எப்படி? வருகிற டிசம்பர் 13 அன்று பெங்களூருவில் ஒரு பிரத்யேக டிராப் ஈவென்ட் நடக்க உள்ளது. அங்கு ரசிகர்கள் நத்திங் போன் 3ஏ கம்யூனிட்டி எடிஷன் ஸ்மார்ட்போனை வாங்கலாம். இது வரையறுக்கப்பட்ட வெளியீடு என்பதால், கிடைக்கும் தன்மை மிகவும் குறைவாகவே இருக்கும்.

இந்த ஸ்பெஷல் எடிஷனில் என்ன ஸ்பெஷல்? வடிவமைப்பில் தான் எல்லாமே உள்ளது. ஹார்ட்வேர் ஆனது ஸ்டாண்டர்ட் நத்திங் போன் 3ஏ ஸ்மார்ட்போனில் இருப்பதை போலவே உள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் வெளிப்புறத்திற்கான வெற்றிகரமான கருத்தை சமர்ப்பித்தவர் எம்ரே கய்கனாசி. அவரது வடிவமைப்பு 90களின் பிற்பகுதி மற்றும் 2000களின் முற்பகுதி தொழில்நுட்பத்திலிருந்து உத்வேகம் பெறுகிறது.

முன்னதாக அறிமுகமான நத்திங் போன் 3ஏ ஸ்மார்ட்போனின் அம்சங்கள்:
- 1,080x2,392 பிக்சல்ஸ் ரெசல்யூஷன், 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், கேமிங் பயன்முறையில் 1,000Hz வரை டச் சாம்ப்ளிங் ரேட், 2,160Hz PW, 3000 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ் மற்றும் பாண்டா கிளாஸ் ப்ரொடெக்ஷன் உடனான 6.7-இன்ச் பிளேக்ஸிபிள் AMOLED டிஸ்பிளே

- 4என்எம் ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 7எஸ் ஜென் 3 சிப்செட்
- 12GB வரை ரேம் மற்றும் 256GB வரை இன்டர்னல் ஸ்டோரேஜ்
- மூன்று வருட OS மேம்படுத்தல்கள் மற்றும் ஆறு வருட செக்யூரிட்டி அப்டேட்களை பெறும் என்று உறுதியளிக்கப்பட்டுள்ளது.

- ட்ரிபிள் ரியர் கேமரா யூனிட்
- 50-மெகாபிக்சல் சாம்சங் 1/1.57-இன்ச் பிப்ரைமரி சென்சார் (f/1.88 அபெர்க்ஷர், OIS மற்றும் EIS ஆதரவு)
- 50-மெகாபிக்சல் சோனி 1/2.74-இன்ச் டெலிஃபோட்டோ சென்சார் (எப் /2.0 அபெர்க்ஷர் மற்றும் EIS, 2x ஆப்டிகல், 4x இன்-சென்சார் மற்றும் 30x டிஜிட்டல் ஜூம் ஆகியவற்றிற்கான ஆதரவு
- 8-மெகாபிக்சல் அல்ட்ராவைட் ஆங்கிள் கேமரா
- 32-மெகாபிக்சல் செல்பீ கேமரா

- 50W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 5,000mAh பேட்டரி
- 19 நிமிடங்களில் 1 முதல் 50 சதவீதம் வரை சார்ஜ் ஆகும்
- 56 நிமிடங்களில் 100 சதவீதம் வரை சார்ஜ் ஆகும்
இன்-டிஸ்பிளே பிங்கர் பிரிண்ட் சென்சார்
- தூசி மற்றும் ஸ்பிளாஸ் எதிர்ப்பிற்கான IP64 ரேட்டிங்
- 5ஜி, 4ஜி, ப்ளூடூத் 5.4, Wi-Fi, GPS, NFC உடன் Google Pay ஆதரவு மற்றும் USB Type-C போர்ட்
- 8.35மிமீ ஸ்லிம் டிசைன் மற்றும் 201 கிராம் எடை

More from GizBot

Best Mobiles in India

English summary
Nothing Phone 3a Community Edition launched in India Exclusive Sale on December 13
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X