Home
Mobile

Nothing Phone 3-ன் புது ப்ராமிஸ்.. 5 வருஷத்துக்கு வேற போன் வாங்குற அவசியமே இருக்காது!

வழக்கம் போல நத்திங் (Nothing) நிறுவனம் அதன் எக்கச்சக்கமான "பில்டப்புகள்" மூலம் நத்திங் போன் 3 (Nothing Phone 3) மாடல் மீதான எதிர்பார்ப்புகளை நாளுக்கு நாள் எகிற வைத்துக்கொண்டு இருக்கிறது. நேற்று இந்த ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் 8எஸ் ஜென் 4 சிப்செட் (Snapdragon 8s Gen 4 Chipset) இடம்பெறும் என்கிற விவரம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. அதன் வழியாக போன் 3 மாடலின் விலை நிர்ணயம் குறித்த ஐடியாவும் கிடைத்தது.

இதற்கிடையில் அம்சங்கள் மற்றும் வடிவமைப்பின் அடிப்படையில் நத்திங் பிராண்டின் முதல் "உண்மையான ஃபிளாக்ஷிப்" மாடலாக அறிமுகம் செய்யப்பட உள்ள நத்திங் போன் 3 ஸ்மார்ட்போன் ஆனது சாஃப்ட்வேர் சப்போர்ட்டிலும் ஏமாற்றமளிக்காது என்பதை உறுதிப்படுத்துமொரு தகவல் வெளியாகியுள்ளது.

Nothing Phone 3-ன் புது ப்ராமிஸ்.. 5 வருஷத்துக்கு Android அப்டேட்!

அதென்ன தகவல்? பொதுவாக ஒரு ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் 2 முக்கிய ஆண்ட்ராய்டு ஓஎஸ் அப்டேட்களையும், 3 வருட செக்யூரிட்டி பேட்ச்களையும் பெறுகிறது. ஆனால் பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்கள் பொதுவாக குறைந்தது 4 வருட ஆண்ட்ராய்டு அப்டேட்களையும், நீண்ட செக்யூரிட்டி பேட்ச்களையும் பெறுகின்றன

இந்த விஷயத்தில் - சாம்சங், ஆப்பிள் மற்றும் கூகுள் போன்ற சில பிராண்டுகள் இன்னும் ஒருபடி மேலே கொண்டு செல்கின்றன. ஆனால் நத்திங் நிறுவனம் சாஃப்ட்வேர் சப்போர்ட்டில் சொதப்பலாகவே உள்ளது. நினைவூட்டும் வண்ணம் நத்திங் போன் 2 ஸ்மார்ட்போனானது 3 வருட ஆண்ட்ராய்டு அப்டேட்களுடன் வந்தது. இருப்பினும் நத்திங் போன் 3 அப்படி இருக்கப்போவதில்லை.

Nothing Phone 3-ன் புது ப்ராமிஸ்.. 5 வருஷத்துக்கு Android அப்டேட்!

நத்திங்கின் இணை நிறுவனரான அகிஸ் எவாஞ்சலிடிஸ், நத்திங் நிறுவனம் ஏன் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 சிப்செட்டிற்கு பதிலாக ஸ்னாப்டிராகன் 8எஸ் ஜென் 4 சிப்செட்டை பயன்படுத்த முடிவு செய்தது என்பது குறித்த கேள்விக்கு எக்ஸ் பயனர் ஒருவருக்கு பதிலளித்தார்.

அவரது விளக்கம் - ஸ்னாப்டிராகன் 8எஸ் ஜென் 4 எவ்வாறு சிறந்த ஜிபியு, என்பியு, ஐபிஎஸ், கனெக்டிவிட்டி மற்றும் டீபால்ட் சாஃப்ட்வேர் அப்டேட்டை கொண்டுள்ளது என்பது பற்றி இருந்தது. ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 ஆனது 4 வருட ஆண்ட்ராய்டு அப்டேட்களையும், 4 வருட செக்யூரிட்டி பேட்ச்களையும் கொண்டு வரும் அதே வேளையில், ஸ்னாப்டிராகன் 8எஸ் ஜென் 4 ஆனது 5 வருட ஆண்ட்ராய்டு அப்டேட்களையும், 7 வருட செக்யூரிட்டி பேட்ச்களையும் வழங்கும்.

Nothing Phone 3-ன் புது ப்ராமிஸ்.. 5 வருஷத்துக்கு Android அப்டேட்!

ஆக ஸ்னாப்டிராகன் 8எஸ் ஜென் 4 சிப்செட் உடன் வரும் நத்திங் போன் 3 ஸ்மார்ட்போன் ஆனது 5 வருட ஆண்ட்ராய்டு அப்டேட்களையும், 7 வருட செக்யூரிட்டி பேட்ச்களையும் வழங்கலாம் என்பதை அவர் சூசகமாக கூறியுள்ளார். மேலும் "நத்திங் ஓஎஸ்ஸில் நாங்கள் செய்த அனைத்து மேம்படுத்தல்களும் நெக்ஸ்ட் லெவல் ஆக உள்ளது - சூப்பர் ஃபாஸ்ட் மற்றும் ஸ்மூத்" என்றும் அகிஸ் ட்வீட் செய்துள்ளார், நினைவூட்டம் வண்ணம் 2025 ஜூலை 1 ஆம் அன்று உலகளவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது

நத்திங் போன் 3 ஸ்மார்ட்போனில் இடம்பெறும் ஸ்னாப்டிராகன் 8எஸ் ஜென் 4 சிப்செட் (Qualcomm Snapdragon 8s Gen 4 chipset) ஆனது ஹை-எண்ட் ஸ்னாப்டிராகன் 8 எலைட் சிப்செட் ஆக இல்லையென்றாலும், நத்திங் போன் 2 ஸ்மார்ட்போனில் பயன்படுத்தப்படும் ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 சிப்செட்டை விட இது தீவிரமான செயல்திறன் ஆதாயங்களை வழங்கும் என்று கூறப்படுகிறது.

நத்திங் நிறுவனத்தின் சிஇஓ-வான கார்ல் பெய் கருத்துப்படி, நத்திங் போன் 2 உடன் ஒப்பிடும், நத்திங் போன் 3 மாடலில் 36% வேகமான சிபியு செயல்திறன், 88% ஜிபியு அதிகரிப்பு மற்றும் என்பியு செயல்திறனில் 60% முன்னேற்றம் ஆகியவற்றை எதிர்பார்க்கலாம். இது மென்மையான மற்றும் மிகவும் ரெஸ்பான்சிவ் ஆன அனுபவத்தை உறுதியளிக்கும்.

இதுதான் சிப்செட் என்றால்.. ஆக நத்திங் போன் 3 ஸ்மார்ட்போன் ஆனது முன்னர் கூற்பட்டபடி ரூ.1 லட்சத்திற்கு அருகிலான விலைக்கு அறிமுகம் செய்யப்பட வாய்ப்புகள் இல்லை. மாறாக நத்திங் போன் 3 ஸ்மார்ட்போன் ஆனது போட்டித்தன்மை உடனான விலை நிர்ணயத்தையே பெறும். அதாவது சுமார் $799 (ரூ.68,000) க்கு அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Nothing Phone 3 with Snapdragon 8s Gen 4 offer 5 years Android 7 years Security updates Report
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X