Home
Mobile

ஆக இதுதான் உண்மையான விலை.. Nothing Phone 3 மாடலின் Chipset அறிவிப்பு.. ஸ்பீட், பெர்பார்மென்ஸ் பிச்சுக்கும்!

ஒருவழியாக.. நத்திங் போன் 3 (Nothing Phone 3) ஸ்மார்ட்போனின் விலை விவரம் குறித்த குழப்பங்களுக்கு நத்திங் நிறுவனமே முற்றுப்புள்ளி வைத்துள்ளது. வருகிற 2025 ஜூலை 1 ஆம் தேதி அறிமுகப்படுத்தப்படவுள்ள நத்திங் போன் 3 ஸ்மார்ட்போனில் என்ன சிப்செட் இடம்பெறும் என்பதை நத்திங் நிறுவனம் அதிகாரப்பூரவமாக அறிவித்துள்ளது

எக்ஸ் போஸ்ட் ஒன்றின் வழியாக, நத்திங் போன் 3 ஸ்மார்ட்போன் ஆனது குவால்காமின் ஸ்னாப்டிராகன் 8எஸ் ஜென் 4 சிப்செட் ( Qualcomm Snapdragon 8s Gen 4 chipset) கொண்டு இயங்கும் என்பதை நத்திங் நிறுவனம் உறுதிப்படுத்தி உள்ளது. இது ஹை-எண்ட் ஸ்னாப்டிராகன் 8 எலைட் சிப்செட் ஆக இல்லையென்றாலும், நத்திங் போன் 2 ஸ்மார்ட்போனில் பயன்படுத்தப்படும் ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 சிப்செட்டை விட இது தீவிரமான செயல்திறன் ஆதாயங்களை கொண்டுள்ளது.

ஆக இதுதான் உண்மையான விலை.. Nothing Phone 3 மாடலின் Chipset அறிவிப்பு!

இந்த புதிய சிப் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 சிப்செட்டிற்கு இணையான செயல்திறனை வழங்குகிறது. குறிப்பிடத்தக்க வைகையில் சாம்சங் கேலக்ஸி எஸ்24 அல்ட்ரா மற்றும் ஒன்பிளஸ் 12 போன்ற ஸ்மார்ட்போன்களில் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 சிப்செட் தான் உள்ளது.

மேலும் செயல்திறனை மையமாகக் கொண்ட ஐக்யூ நியோ 10 ஸ்மார்ட்போனையும் கூட ஸ்னாப்டிராகன் 8எஸ் ஜென் 4 சிப்செட் தான் இயக்குகிறது. எனவே நத்திங் போன் 3 ஸ்மார்ட்போனை வாங்குபவர்கள் ஸ்பீட் அல்லது ரெஸ்பான்ஸ் குறித்து அதிகம் கவலைப்பட வேண்டியதில்லை.

ஆக இதுதான் உண்மையான விலை.. Nothing Phone 3 மாடலின் Chipset அறிவிப்பு!

மேலும் நத்திங் நிறுவனத்தின் சிஇஓ-வான கார்ல் பெய் கருத்துப்படி, நத்திங் போன் 2 உடன் ஒப்பிடும், நத்திங் போன் 3 மாடலில் 36% வேகமான சிபியு செயல்திறன், 88% ஜிபியு அதிகரிப்பு மற்றும் என்பியு செயல்திறனில் 60% முன்னேற்றம் ஆகியவற்றை எதிர்பார்க்கலாம். இது மென்மையான மற்றும் மிகவும் ரெஸ்பான்சிவ் ஆன அனுபவத்தை உறுதியளிக்கும்.

ஆக மொத்தம் நத்திங் போன் 3 ஸ்மார்ட்போன் ஆனது முன்னர் கூற்பட்டபடி ரூ.1 லட்சத்திற்கு அருகிலான விலைக்கு அறிமுகம் செய்யப்பட வாய்ப்புகள் இல்லை. மாறாக நத்திங் போன் 3 ஸ்மார்ட்போன் ஆனது போட்டித்தன்மை உடனான விலை நிர்ணயத்தையே பெறும். அதாவது சுமார் $799 (ரூ.68,000) க்கு அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆக இதுதான் உண்மையான விலை.. Nothing Phone 3 மாடலின் Chipset அறிவிப்பு!

நத்திங் போன் 3 ஸ்மார்ட்போனின் டிசைனை பொறுத்தவரை, டிப்ஸ்டர் மேக்ஸ் ஜம்போர் (Max Jambor) வழியாக நத்திங் போன் 3 ஸ்மார்ட்போனின் முழு போட்டோவும் ஆன்லைனில் லீக் ஆகி இருந்தது. அதை பார்த்த உடனேயே 2 விஷயங்களை டக்கென்று புரிந்துகொள்ள முடிகிறது. ஒன்று - நத்திங் போன் 3 ஸ்மார்ட்போன் ஆனது முன்னதாக அறிமுகம் செய்யப்பட்ட நத்திங் போன் 3ஏ ப்ரோ (Nothing Phone 3a Pro) மாடலில் நாம் பார்த்த அதே கேமரா ஐலேண்ட் டிசைனை (Camera Island Design) கொண்டுள்ளது.

அதாவது கிட்டத்தட்ட போன் 3ஏ ப்ரோ மாடலில் உள்ள ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்பை (Triple Rear Camera Setup) கொண்டுள்ளது; ஆனால் எல்இடி பிளாஷ் (LED Flash) ஆனது வெளிப்படையாக தெரியாமல் சற்றே மறைக்கப்பட்டது போன்ற வடிவமைப்பை பெற்றுள்ளது. இரண்டாவது - (முன்னரே கூறப்பட்டபடி) நத்திங் போன் 3 ஸ்மார்ட்போனின் பின்புறத்தில் க்ளிஃப் இன்டர்ஃபேஸை எல்இடி லைட் செட்டப் (Glyph Interface LED Setup) இடம்பெறவில்லை.

நத்திங் போன் 3 ஸ்மார்ட்போனில் வேறு என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்?
- 6.77-இன்ச் எல்டிபிஓ அமோலெட் டிஸ்பிளே
- 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்
- 3000 நிட்ஸ் வரையிலான பீக் பிரைட்னஸ்
- 12ஜிபி வரையிலான ரேம்
- 512ஜிபி வரையிலான இன்டர்னல் ஸ்டோரேஜ்
- 50எம்பி ப்ரைமரி சென்சார் உடனான ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்
- 32எம்பி செல்பீ கேமரா
- 50W வயர்டு மற்றும் 20W வயர்லெஸ் சார்ஜிங்
- 5000mAh பேட்டரி

More from GizBot

Best Mobiles in India

English summary
Nothing Phone 3 With Snapdragon 8s Gen 4 Chipset Confirmed So What Will Be The Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X