நீ வா ராசா.. 8ஜிபி ரேம்.. ஸ்னாப்டிராகன் சிப்செட்.. புதிய Nothing போன் ரெடி.. எந்த மாடல்?
கடந்த 2023-ம் ஆண்டு இந்தியாவில் நத்திங் போன் 2 மாடல் அறிமுகம் செய்யப்பட்டது. குறப்பாக இந்த போனுக்கு நல்ல வரவேற்பு இருந்தது. இதை தொடர்ந்து நத்திங் போன் 3 மாடலை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது நத்திங் (Nothing) நிறுவனம். அதாவது இந்த போன் விரைவில் அறிமுகம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கீக்பெஞ்ச் தளத்தில் இந்த நத்திங் போன் 3 மாடலின் விவரக்குறிப்புகள் வெளியாகி உள்ளது.
அதாவது கீக்பெஞ்ச் தளத்தில் A059 என்ற மாடல் நம்பர் உடன் இந்த நத்திங் போன் 3 காணப்பட்டுள்ளது. மேலும் இந்த போனின் வடிவமைப்பு மற்றும் மென்பொருள் வசதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது நத்திங் நிறுவனம். இப்போது ஆன்லைனில் வெளியான நத்திங் போன் 3 விவரக்குறிப்புகளைப் பார்க்கலாம்.

நத்திங் போன் 3 அம்சங்கள் (Nothing Phone 3 Specifications): சக்திவாய்ந்த குவால்காம் ஸ்னாப்டிராகன் 7எஸ் ஜென் 3 எஸ்ஒசி (Qualcomm Snapdragon 7s Gen 3 SoC) சிப்செட் உடன் நத்திங் போன் 3 மாடல் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த சிப்செட் ஆனது மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். மேலும் மேம்பட்ட கேமிங் அம்சங்கள் இந்த போனில் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேசமயம் NothingOS 3.0 சார்ந்த ஆண்ட்ராய்டு 15 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த நத்திங் போன் 3 அறிமுகம் செய்யப்படும். ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும். மேலும் 8ஜிபி ரேம், அமோலெட் டிஸ்பிளே, 5000mAh பேட்டரி, ஃபாஸ்ட் சார்ஜிங் உடன் இந்த புதிய போன் வெளிவரும் என்று கூறப்பட்டுள்ளது.
தற்போது நத்திங் போன் 3 மாடலின் சில அம்சங்கள் மட்டுமே வெளியாகி உள்ளது. கூடிய விரைவில் இந்த போனின் அனைத்து அம்சங்களும் வெளியாகும். மேலும் ஏற்கனவே வெளியான நத்திங் போன் 2 மாடலின் அம்சங்களைப் பார்க்கலாம்.
நத்திங் போன் 2 அம்சங்கள் (Nothing Phone 2 Specifications): டூயல் சிம் (நானோ) ஆதரவுடன் வரும் நத்திங் போன் 2 ஆனது ஆண்ட்ராய்டு 13 அடிப்படையிலான நத்திங் ஓஎஸ் 2.0 கொண்டு இயங்குகிறது. குவால்காம் 4என்எம் ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 சிப்செட்டை பேக் செய்கிறது. குறிப்பாக வீடியோ எடிட்டிங் மற்றும் கேமிங் ஆப்ஸ்களை இந்த போனில் தடையின்றி பயன்படுத்தலாம்.

கேமராக்களை பொறுத்தவரை, இதில் டூயல் ரியர் கேமரா செட்டப் உள்ளது. அதில் 1/1.56-இன்ச் சோனி IMX890 சென்சார் மற்றும் ஆப்டிகல் இமேஜ் ஸ்டேபிலைசேஷன் (OIS) மற்றும் எலக்ட்ரானிக் இமேஜ் ஸ்டேபிலைசேஷன் (EIS) உடனான 50 மெகாபிக்சல் மெயின் + 50 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் ஆங்கிள் கேமரா கொண்டுள்ளது இந்த நத்திங் போன் 2.
முன்பக்கத்தில் 32 மெகாபிக்சல் கேமரா மற்றும் பேக் பேனலில் எல்இடி லைட்ஸ் உடனான கிளிஃப் இன்டர்ஃபேஸ் உடன் வருகிறது நத்திங் போன் 2. மேலும் நத்திங் போன் 2 ஸ்மார்ட்போன் ஆனது 45W வயர்டு சார்ஜிங் மற்றும் 5W கியூஐ வயர்லெஸ் சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் 4700எம்ஏஎச் பேட்டரியை பேக் செய்கிறது. அதேபோல் 20ஹெர்ட்ஸ் வரையிலான அடாப்டிவ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.7-இன்ச் ஃபுல்-எச்டி எல்டிபிஓ ஓஎல்இடி டிஸ்பிளே கொண்டு வெளிவந்துள்ளது இந்த நத்திங் போன் 2 மாடல். தற்போது பிளிப்கார்ட் தளத்தில் ரூ.36,999 விலையில் இந்த போன் விற்பனை செய்யப்படுகிறது.
photo credit:turbotech365


Click it and Unblock the Notifications








