கண்ணா 2 லட்டு வேணுமா.. Nothing-ன் 2 புதிய போன்கள்.. ஒன்னு ரூ.12,000 மாடல்.. இன்னொன்னு Action Button உடன்!
நத்திங் போன் 2ஏ ஸ்மார்ட்போனின் மீதான டிமாண்ட் இன்னும் குறைந்த பாடில்லை. நினைவூட்டும் வண்ணம் நத்திங் நிறுவனத்தின் இந்த மூன்றாவது ஸ்மார்ட்போனின் முதல் நாள் விற்பனையிலேயே 1 லட்சம் யூனிட்கள் விற்று தீர்ந்தன. இதற்கு முக்கிய காரணம் நத்திங் போன் 2ஏ-வின் விலை நிர்ணயம் தான்!
அறிமுக சலுகையாக ரூ.19,999 க்கு வாங்க கிடைத்த நத்திங் போன் 2ஏ (Nothing Phone 2a) தற்போது பிளிப்கார்ட் வழியாக ரூ.23,999 க்கு விற்பனை செய்யப்படுகிறது. இருப்பினும் இன்னமும் இது நல்ல முறையில் தான் விற்பனை ஆகிறது. இந்த சூழலை அப்படியே தக்கவைத்து கொள்ளும் நோக்கத்தின்கீழ் நத்திங் நிறுவனமானது மேலும் 2 புதிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்யவுள்ளது.

நத்திங் நிறுவனத்தின் சிஇஓ-வாண கார்ல் பெய் எக்ஸ் தளம் வழியாக பகிர்ந்த ஒரு புதிய படத்தின்படி, நத்திங் நிறுவனமானது ஒரு புதிய நத்திங் போனில் பணியாற்றி வருகிறது. குவிக் செட்டிங்ஸ் மெனுவை மறுவடிவமைப்பு செய்யும் படங்களையும், அதை பற்றி மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதையும் கார்ல் பெய் எக்ஸ் தளம் வழியாக பகிர்ந்துள்ளார்.
கார்ல் பெய் பகிர்த்துள்ள புகைப்படத்தில் உள்ள நத்திங் போனில் ஒரு புதிய பட்டனையும் காண முடிகிறது. அதுவொரு ஆக்ஷன் பட்டன் (Action Button) ஆக இருக்கலாம் என்றும், குறிப்பிட்ட மாடல் ஆனது நத்திங் போன் 3 (Nothing Phone 3) ஸ்மார்ட்போனாக இருக்கலாம் என்று ஊகிக்கப்படுகிறது.
இதுதவிர்த்து கார்ல் பெய் பகிர்ந்த படத்தில் உள்ள நத்திங் ஸ்மார்ட்போனின் வலது பக்கத்தில் பவர் பட்டனையும் மற்றும் இடது பக்கத்தில் வால்யூம் கீஸ்களையும் காண முடிகிறது. அதாவது நத்திங் போன் 2 மற்றும் நத்திங் போன் 2ஏ ஆகிய இரண்டலுமே உள்ளது போலவே தான் உள்ளது. ஆனால் பவர் பட்டனுக்கு சற்று கீழே கூடுதலாக ஒரு பட்டன் உள்ளது.
இது ஐபோன் 15 சீரிஸில் உள்ள ஆக்ஷன் பட்டன் போன்ற ஒரு பட்டனாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. நினைவூட்டும் வண்ணம் ரியல்மி 12 ஸ்மார்ட்போனில் கூட 'டைனமிக் பட்டன்' உள்ளது. இவைகள் அடிப்படையில் ஷார்ட்கட் பட்டன்கள் ஆகும். மேலும் குறிப்பிட்ட செயல்களை செய்ய நீங்கள் இந்த பட்டன்களை கஸ்டமைஸும் செய்யலாம்.
நத்திங் போன் 3 ஸ்மார்ட்போன் ஒருபக்கம் இருக்க, நத்திங் நிறுவனமானது ரூ.12,000 க்கு சூப்பர்-பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன் ஒன்றையும் அறிமுகம் செய்ய உள்ளது. ஆனால் அது சிஎம்எப்பிராண்டின் கீழ் சிஎம்எப் போன் 1 என்கிற பெயரின்கீழ் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனின் ஆரம்ப விலை ரூ.12,000 க்குள் இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
நத்திங் போன் 2ஏ-வின் விலை விவரங்கள்: இந்த ஸ்மார்ட்போனின் பேஸிக் 8ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.23,999 க்கும், 8ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.25,999 க்கும், ஹை-எண்ட் 12ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.27,999 க்கும் பிளிப்கார்ட் வலைத்தளம் வழியாக வாங்க கிடைக்கிறது.
நத்திங் போன் 2ஏ ஸ்மார்ட்போனின் விரிவான அம்சங்கள்: வடிவமைப்பை பொறுத்தவரை, இதன் பேக் பேனலில், ஒரு சர்குலர் ஐலேண்டில், கிடைமட்டமாக நிலைநிறுத்தப்பட்டுள்ள 2 கேமராக்களை கொண்டுள்ளது. இதுதவிர்த்து பேக் பேனலில் மூன்று கிளிஃப் எல்இடி ஸ்ட்ரிப்ஸ்களையும் (Glyph LED strips) கொண்டுள்ளது. இது தூசி மற்றும் நீர்-எதிர்ப்பு திறனுக்கான ஐபி54 ரேட்டிங் உடன் வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
நத்திங் போன் 2ஏ-வில் ஃபுல்எச்டி பிளஸ் ரெசல்யூஷன், 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 1300 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் எச்டிஆர்10 சப்போர்ட் உடனான 6.7-இன்ச் பிளாட் ஓஎல்இடி டிஸ்பிளே உள்ளது. டிஸ்பிளேவில் உள்ள பஞ்ச்-ஹோல் கட்அவுட்டில் 32எம்பி செல்பீ கேமரா உள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் இன்-டிஸ்பிளே ஃ பிங்கர் பிரிண்ட் ஸ்கேனரும் உள்ளது.
கேமராக்களை பொறுத்தவரை இதில் டூயல் ரியர் கேமரா செட்டப்பை கொண்டுள்ளது. அதில் ஓஐஎஸ் ஆதரவு உடனான 50எம்பி மெயின் கேமரா சென்சார் + 50எம்பி அல்ட்ரா-வைட்-ஆங்கிள் கேமரா உள்ளது. ப்ராசஸரை பொறுத்தவரை, இது மீடியாடெக் டைமன்சிட்டி7200 ப்ரோ சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. இது 12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி வரையிலான இன்டர்னல் ஸ்டோரேஜுடன் இணைக்கப்பட்டுள்ளது.
பேட்டரியை பொறுத்தவரை, 45W ஃபாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் 5,000mAh பேட்டரியை பேக் செய்கிறது. நத்திங் நிறுவனமானது இந்த ஸ்மார்ட்போனிற்கு 3 வருட ஓஎஸ் அப்டேட்கள் மற்றும் 4 வருட செக்யூரிட்டி அப்டேட்கள் கிடைக்கும் என்று உறுதி அளித்துள்ளது. இப்போதைக்கு இது ஆண்ட்ராய்டு 14 அவுட் ஆஃப் தி பாக்ஸ் அடிப்படையிலான நத்திங் ஓஎஸ் 2.5 கொண்டு இயங்கும்.


Click it and Unblock the Notifications








