Home
Mobile

நாளை இந்தியாவில் அறிமுகமாகிறது புது Nothing போன்.. OLED டிஸ்பிளே.. 50எம்பி கேமரா.. எந்த மாடல்?

நத்திங் நிறுவனம் நாளை (ஜூலை 1) இந்தியாவில் நத்திங் போன் 3 (Nothing Phone 3) மாடலை அறிமுகம் செய்ய உள்ளது. குறிப்பாக இந்த போன் பிளிப்கார்ட் தளத்தில் விற்பனைக்கு வரும். அதுவும் நாளை இரவு 10 மணிக்கு இந்த போன் இந்தியாவில் அறிமுகமாகும் என்று தகவல் வெளியாகி உள்ளது.

குறிப்பாக இந்த நத்திங் போன் 3 மாடல் ஆனது தனித்துவமான வடிவமைப்பு மற்றும் தரமான அம்சங்களுடன் வெளிவரும். மேலும் ஆன்லைனில் கசிந்த இந்த போனின் முக்கிய விவரக்குறிப்புகள் மற்றும் விலை குறித்த தகவல்களை இந்த பதிவில் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

நாளை இந்தியாவில் அறிமுகமாகிறது புது Nothing போன்.. எந்த மாடல்?

நத்திங் போன் 3 அம்சங்கள் (Nothing Phone 3 specifications): 6.7-இன்ச் 1.கே ரெசல்யூஷன் எல்டிபிஒ ஒஎல்இடி (LTPO OLED) டிஸ்பிளே வசதியுடன் நத்திங் போன் 3 மாடல் அறிமுகமாகும். மேலும் இதன் டிஸ்பிளேவில் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த போன் சிறந்த திரை அனுபவத்தை வழங்கும்.

அதேபோல் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8எஸ் ஜென் 4 சிப்செட் (Snapdragon 8s Gen 4 chipset) வசதியுடன் இந்த புதிய நத்திங் போன் 3 மாடல் அறிமுகமாகும். எனவே இந்த ஸ்மார்ட்போனில் வீடியோ எடிட்டிங் ஆப்ஸ் மற்றும் கேமிங் ஆப்களை தடையின்றி பயன்படுத்தலாம். அதாவது இந்த போனுக்கு வழங்கப்பட்ட சிப்செட் ஆனது மேம்பட்ட செயல்திறன் வழங்கும்.

50எம்பி மெயின் கேமரா + 50எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 50எம்பி டெலிபோட்டோ கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப் கொண்டுள்ளது இந்த அசத்தலான நத்திங் போன் 3 மாடல். எனவே இந்த ஸ்மார்ட்போன் மூலம் அசத்தலான படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். குறிப்பாக மேம்பட்ட ஏஐ அம்சங்கள் இந்த போனில் உள்ளன.

மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 50எம்பி கேமரா உடன் இந்த புதிய நத்திங் போன் 3 மாடல் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு பல்வேறு கேமரா அம்சங்களும் இந்த போனில் உள்ளன. அதேபோல் இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor) வசதியும் இந்த போனில் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆண்ட்ராய்டு 15 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த நத்திங் போன் 3 மாடல் வெளிவரும். ஆனாலும் இந்த ஸ்மார்ட்போன் ஆனது 5 வருட ஆண்ட்ராய்டு அப்டேட்களையும், 7 வருட செக்யூரிட்டி பேட்ச்களையும் பெறும் என்று கூறப்படுகிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது நத்திங் நிறுவனம்.

நாளை இந்தியாவில் அறிமுகமாகிறது புது Nothing போன்.. எந்த மாடல்?

5150mAh பேட்டரி வசதியுடன் நத்திங் போன் 3 மாடல் அறிமுகமாகும். எனவே இந்த ஸ்மார்ட்போன் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 100W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. என்எப்சி ஆதரவு, இசிம் ஆதரவு, வைஃபை, ஜிபிஎஸ் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த போனில் உள்ளன.

ஆன்லைனில் வெளியான தகவலின்படி நத்திங் போன் 3 மாடல் ரூ.68,000 பட்ஜெட்டில் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து சிறப்பான அம்சங்களுடன் இந்த போன் வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

photo credit:turbotech365, flipkart

Best Mobiles in India

English summary
Nothing Phone 3 will be launched in India tomorrow: check price, specifications
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X