Home
Mobile

என்ன சார் இப்படி பண்ணிடீங்க.. அப்போ Nothing Phone 3 மாடல் அவுட்- ஆ.. அதே கேமரா.. அதே எசன்ஷியல் கீ!

கார்ல் பெய் தலைமையிலான நத்திங் (Nothing) நிறுவனம், ஒரு பிரீமியம் ஃபிளாக்ஷிப் போனை அறிமுகப்படுத்தி 2 ஆண்டுகள் ஆகிறது. நினைவூட்டும் வண்ணம் நத்திங் நிறுவனத்தின் கடைசி ஃபிளாக்ஷிப் போன் ஆன நத்திங் போன் 2 (Nothing Phone 2) மாடல் கடந்த ஜூலை 2023 இல் அறிமுகமானது.

சமீபத்தில் இந்நிறுவனம் நத்திங் போன் 3ஏ (Nothing Phone 3a) மற்றும் நத்திங் போன் 3ஏ ப்ரோ (Nothing Phone 3a Pro) ஆகிய மிட்-ரேன்ஜ் மாடல்களை அறிமுகம் செய்திருந்தது. மேலும் இந்நிறுவனத்தின் துணை பிராண்டான சிஎம்எப் அதன் பட்ஜெட் விலை மாடல் ஆன சிஎம்எப் போன் 2 ப்ரோ (CMF Phone 2 Pro) கடந்த வாரம் இந்தியாவில் அறிமுகம் செய்திருந்தது.

என்ன சார் இப்படி பண்ணிடீங்க.. அப்போ Nothing Phone 3 மாடல் அவுட்- ஆ!

ஆனால் நத்திங் நிறுவனத்தின் பிளாக்ஷிப் போன் ஆன நத்திங் போன் 3 (Nothing Phone 3) அறிமுகம் குறித்து எந்த அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகாமலேயே இருந்தது. இதற்கிடையில் நத்திங் பிராண்டின் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் இணை நிறுவனர் நத்திங் போன் 3 ஸ்மார்ட்போன் ஆனது 100% அமெரிக்க சந்தையில் அறிமுகமாகும் என்று கூறி, நத்திங் போன் 3 ஸ்மார்ட்போனின் அறிமுகத்தை உறுதிப்படுத்தியுள்ளார்.

எக்ஸ் பயனர் ஒருவரின் கேள்விக்கு பதில் அளித்த நத்திங்கின் தலைமை நிர்வாக அதிகாரி ஆன பதிலளித்த கார்ல் பெய், நத்திங் போன் 3 அமெரிக்க சந்தையில் வாங்க கிடைக்கும் என்பதை உறுதிப்படுத்தினார். ஆனால் துரதிர்ஷ்டவசமாக, நத்திங் போன் 3 குறித்து வேறு எந்த தகவலையும் அவர் வெளியிடவில்லை. இருப்பினும் இது நத்திங் போன் 3 ஸ்மார்ட்போனின் வெளியீடு மிகவும் விரைவில் நடக்கும் என்பதை இது குறிக்கிறது

முன்னதான வெளியான ஒரு லீக்ஸ் தகவல் ஆனது நத்திங் போன் 3 ஸ்மார்ட்போன் ஆனது ஜூலை 2025 இல் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவித்து இருந்ததும் இங்கே குறிப்பிடத்தக்கது. நத்திங் போன் 3 ஸ்மார்ட்போனின் அம்சங்கள் அல்லது வடிவமைப்பு குறித்து அதிக விவரங்கள் இல்லை என்றாலும் கூட இது கிளிப் எல்இடி இன்டர்பேஸ் உடன், நத்திங் நிறுவனத்தின் சிக்னேன்ச்சர் ஆன ட்ரான்ஸ்பரென்ட் பாடியை தக்க வைத்துக்கொள்ளும் என்று எதிர்பார்க்கலாம்.

மேலும் நத்திங் போன் 3ஏ ப்ரோ ஸ்மார்ட்போனின் உள்ளதை போலவே, நத்திங் போன் 3 ஸ்மார்ட்போனில் பிரத்யேக எசென்ஷியல் கீ பட்டன், ஹை ரெஃப்ரெஷ் ரேட் உடனான அமோலெட் டிஸ்பிளே மற்றும் அதே ப்ரைமரி கேமரா மற்றும் அல்ட்ரா வைட் ஆங்கிள் லென்ஸ்களை கொண்ட டெலிஃபோட்டோ ஷூட்டரை கொண்டுவர வாய்ப்புள்ளது.

நத்திங் போன் 3ஏ ப்ரோ ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்:
- பேக் பேனலில் கிளிஃப் லைட்டிங் செட்டப்
- 3000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.77 இன்ச் AMOLED டிஸ்பிளே
- ஸ்னாப்டிராகன் 7எஸ் ஜென் 3 சிப்செட்
- ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ்-ஐ அடிப்படையாக நத்திங் ஓஎஸ் 3.1

- சர்க்குலர் ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்
- 50 மெகாபிக்சல் ப்ரைமரி கேமரா
- 8 மெகாபிக்சல் அல்ட்ராவைடு கேமரா
- 50 மெகாபிக்சல் பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ சென்சார்
- 50 மெகாபிக்சல் செல்பீ கேமரா
- 50W பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு
- 7.5W ரிவர்ஸ் சார்ஜிங் ஆதரவு
- 5,000mAh பேட்டரி

நத்திங் போன் 3ஏ ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்:
- பேக் பேனலில் கிளிஃப் லைட்டிங் செட்டப்
- 3000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.77 இன்ச் AMOLED டிஸ்பிளே
- ஸ்னாப்டிராகன் 7எஸ் ஜென் 3 சிப்செட்
- ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ்-ஐ அடிப்படையாக நத்திங் ஓஎஸ் 3.1

- ஹாரிசாண்டல் ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்
- 50 மெகாபிக்சல் ப்ரைமரி கேமரா
- 8 மெகாபிக்சல் அல்ட்ராவைடு கேமரா
- புதிய 50 மெகாபிக்சல் டெலிஃபோட்டோ சென்சார்
- 32 மெகாபிக்சல் செல்பீ கேமரா
- 50W பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு
- 5,000mAh பேட்டரி

சிஎம்எப் போன் 2 ப்ரோ ஸ்மார்ட்போனின் அம்சங்கள்:
- டூயல் சிம் (நானோ+நானோ)
- ஆண்ட்ராய்டு 15 அடிப்படையிலான நத்திங் ஓஎஸ் 3.2
- 3 ஆண்டுகளுக்கு மேஜர் ஆண்ட்ராய்டு அப்டேட்ஸ்
- 6 ஆண்டுகளுக்கு செக்யூரிட்டி பேட்ச்கள்

- 6.77 இன்ச் FHD+ AMOLED டிஸ்பிளே
- 1080 × 2392 பிக்சல்ஸ் ரெசல்யூஷன்
- 120Hz வரை அடாப்டிவ் ரெஃப்ரெஷ் ரேட்
- 2160Hz PWM ப்ரெக்வன்சி
- 387ppi பிக்சல் டென்சிட்டி
- 480Hz டச் சாம்ப்ளிங் ரேட்
- 3000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ்
- HDR10+ ஆதரவு
- பாண்டா கிளாஸ் ப்ரொடெக்ஷன்

- ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 7300 ப்ரோ சிப்செட்
- 8ஜிபி வரை ரேம்
- ரேம் பூஸ்டர் அம்சத்தின் கீழ் ரேம்-ஐ 16ஜிபி வரை விரிவாக்க முடியும்.
- 2டிபி வரை மெமரி விரிவாக்கத்தை ஆதரிக்கும் 256ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ்
- தூசி மற்றும் தெறிப்பு எதிர்ப்பிற்கான ஐபி54 ரேட்டிங்
- இரண்டு மைக்ரோஃபோன்கள்
- ஒரு எசன்ஷியல் பட்டன் (இது ஸ்கிரீன்ஷாட்கள், புகைப்படங்கள் மற்றும் வாய்ஸ் நோட்கள் போன்ற டேட்டாவை அணுக உதவும் புதிய எசன்ஷியல் ஸ்பேஸ்-ஐ விரைவாக அணுக அனுமதிக்கிறது)

- ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்
- எப்/1.88 மற்றும் EIS உடன் 50 மெகாபிக்சல் 1/1.57-இன்ச் சென்சார்
- எப்f/1.88 அபெர்க்ஷர் உடனான 50 மெகாபிக்சல் டெலிஃபோட்டோ கேமரா
- எப்/2.2 அபெர்க்ஷர் மற்றும் 119.5-டிகிரி பீல்ட் ஆப் வியூ உடனான 8 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் கேமரா
- டெலிஃபோட்டோ கேமராவில் 2x ஆப்டிகல் ஜூம் மற்றும் 20x டிஜிட்டல் ஜூமிங் திறன் உள்ளது
- எப்/2.45 அபெர்க்ஷர் உடனான 16 மெகாபிக்சல் செல்பீ கேமரா
- மேம்படுத்தப்பட்ட கேமரா அவுட்புட்டிற்காக நத்திங் ட்ரூலென்ஸ் எஞ்சின் 3.0 (Nothing's TrueLens Engine 3.0) தொழில்நுட்பம்

- 33W பாஸ்ட் சார்ஜிங்
- 5W ரிவர்ஸ் வயர்டு சார்ஜிங்
- 5000mAh பேட்டரி
- சிங்கிள் சார்ஜில் அதிகபட்சமாக 47 மணிநேர அழைப்பு நேரத்தையும், 22 மணிநேரம் வரை யூட்யூப் ஸ்ட்ரீமிங் நேரத்தையும் வழங்கும் என்று விளம்பரப்படுத்தப்பட்டுள்ளது.
- ரீடெயில் பாக்ஸ்-ல் சார்ஜிங் அடாப்டர் மற்றும் ஒரு கேஸ்

- 5ஜி ஆதரவு
- வைஃபை 6
- ப்ளூடூத் 5.3
- யுஎஸ்பி டைப் சி போர்ட்
- - ஆப்டிகல் இன்-டிஸ்ப்ளே பிங்கர் பிரிண்ட் சென்சார்
- அளவீட்டில் 164×7.8×78மிமீ
- எடையில் 185 கிராம்

More from GizBot

Best Mobiles in India

English summary
Nothing Phone 3 to Pack same Camera Setup Essential Key button in Phone 3a Pro Report
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X