Home
Mobile

சார் இனி எப்படி விளம்பரம் பண்ணுவீங்க.. Nothing Phone 3 க்கு வந்த சத்திய சோதனை.. வெயிட் பண்ணவங்க வெறி!

ஜூன் 2025 இல் அறிமுகம் செய்யப்படப்போவதால்.. நத்திங் போன் 3 (Nothing Phone 3) ஸ்மார்ட்போனை பற்றிய சில சுவாரசியமான டீசர்கள்.. எதிர்பார்ப்பை கிளப்பும் அம்சங்கள் தொடர்பான தகவல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நேரத்தில்.. அம்புட்டு நத்திங் பிராண்ட் ரசிகர்களுக்கும் ஏமாற்றம் அளிக்கும்படியாக ஒரு டீசர் வெளியாகியுள்ளது.

நத்திங் போன் 3 தொடர்பான ஒரு சமீபத்திய டீஸர் வழியாக, நத்திங் நிறுவனம் அதன் ஐகானிக் ஆன.. விளம்பரத்திற்கு பெரிதும் பயன்படும் எல்இடி டிசைனை (LED Design), அதாவது கிளிஃப் டிசைனை (Glyph Design) தவிர்க்கலாம் என்பது போல் தெரிகிறது. எக்ஸ் தளம் வழியாக பகிரப்பட்ட நத்திங் நிறுவனத்தின் ஒரு சிறிய வீடியோ டிரெய்லர் ஆனது பழைய நத்திங் பிளாக்ஷிப் ஸ்மார்ட்போனை ஒன்றை காட்டுகிறது.

Nothing Phone 3 க்கு வந்த சத்திய சோதனை!

இருப்பினும், அந்த எக்ஸ் பதிவானது "நாங்கள் கிளிஃப் இன்டர்பேஸ்-ஐ 'கில்' செய்கிறோம் (We killed the Glyph Interface) என்று கூறுகிறது. நினைவூட்டும் வண்ணம் கிளிஃப் இன்டர்பேஸ் (Glyph Interface) என்பது அடிப்படையில் நத்திங்கின் லைட்டிங் அமைப்பாக செயல்படும், நத்திங் ஸ்மார்ட்போன்களின் பின்புறத்தில் உள்ள எல்இடி-களின் தொகுப்பாகும் (LED Series). இந்த எல்இடி டிசைன் ஆனது நத்திங் போன்களை மற்ற ஸ்மார்ட்போன்களிடம் இருந்து தனித்து காட்டுவதற்கு பெயர்போனது.

இந்த எல்இடி செட்டப் வெறும் லுக்கை மட்டும் வழங்கவில்லை. பல்வேறு பயனுள்ள செயல்பாடுகளையும் வழங்கின. அழைப்புகள், செய்திகள் அல்லது வேறு சில வகையான அறிவிப்புகளை (Notifications) பெறும்போதெல்லாம் இது ஒளிரும். மேலும் இந்த முழு கிளிஃப் எல்இடியையும் பயனர்களால் கஸ்டமைஸ் (Customize) செய்ய முடியும்.

ஆனால் நெக்ஸ்ட் ஜெனெரஷன் ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனிற்கான (Next Generation Flagship Smartphone) மேம்பட்ட டிசைன் லேங்குவேஜிற்காக.. நத்திங் போன் 3 ஸ்மார்ட்போன் ஆனது "பிரீமியம் மெட்டீரியல்களை" (Premium Materials) கொண்டிருக்கும் என்று நத்திங் நிறுவனம் ஏற்கனவே கூறி இருந்தது. அதன் விளைவாகவே நத்திங் போன் 3 ஸ்மார்ட்போனில் கிளிஃப் இன்டர்பேஸ் இடம்பெறலாம் போகலாம் என்பது போல் தெரிகிறது.

நத்திங் நிறுவனம் அதன் நத்திங் போன் 3 ஸ்மார்ட்போனை பற்றி பேசும்போதெல்லாம் மீண்டும் மீண்டும் "பிளாக்ஷிப்" (Flagship) என்கிற வார்த்தை பயன்படுத்தப்படுவதால் நத்திங் போன் 3 ஸ்மார்ட்போனின் விலை (Nothing Phone 3 Price) உண்மையாகவே ரூ.1 லட்சத்திற்கு அருகில் செல்லுமோ என்கிற சந்தேகம் நாளுக்கு நாள் அதிகரிக்கும் வேளையில்.. கிளிஃப் இன்டர்பேஸ்-ஐ "தூக்குவது" அந்த சந்தேகத்தை மேலும் வலுப்படுத்துகிறது.

முன்னதாக வெளியான ஒரு லேட்டஸ்ட் டீஸரில் நத்திங் போன் 3 ஸ்மார்ட்போன் ஆனது டூயல் டோன் பினிஷ் (Dual Tone Finish) உடனான பேக் பேனலின் ஒரு பகுதியை காட்டியது. அதாவது கடந்த ஏப்ரல் மாதம் இந்தியாவில் நத்திங் நிறுவனத்தின் துணை பிராண்டால் வெளியிடப்பட்ட சிஎம்எப் போன் 2 ப்ரோவின் (CMF Phone 2 Pro) ஆரஞ்சு மற்றும் ஒயிட் கலர் ஆப்ஷன்களில் உள்ளதை போன்ற டூயல் டோன் பினிஷ் உடனான பேக் பேனலை காட்டுகிறது.

மேலும் இந்த டீசரில், பட்டன் போன்ற அம்சத்துடன் கூடிய ஒரு அமைப்புள்ள பகுதியையும் காண முடிகிறது. நத்திங் போன் 3 ஸ்மார்ட்போனில் உள்ள இந்த பட்டன் செயல்படுமா அல்லது அது வெறுமனே ஒரு பட்டனாக இருக்குமா என்பது தெளிவாக தெரியவில்லை. சில வாரங்களுக்கு முன்பு, நத்திங் போன் 3 ஸ்மார்ட்போன் "சுமார் 800 யூரோ" என்கிற விலையில் அறிமுகப்படுத்தப்படும் என்று கார்ல் பெய் உறுதிப்படுத்தி இருந்தார். அதாவது இந்திய ரூபாய் மதிப்பின்படி சுமார் ரூ.90,500 ஆகும்!

நத்திங் போன் 3 ஸ்மார்ட்போனில் வேறு என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம் (Nothing Phone 3 Specifications Expected)?
- புதிய கேமரா செட்டப்பில் 3 கேமரா சென்சார்கள்
- அதில் ஒன்று லார்ஜ் பெரிஸ்கோப்-ஸ்டைல் டெலிஃபோட்டோ லென்ஸ்
- 5000mAh க்கும் அதிகமான பேட்டரியை கொண்டிருக்கலாம்

More from GizBot

Best Mobiles in India

English summary
Nothing Phone 3 to Launch Without Brand Iconic LED design Glyph Interface
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X