Home
Mobile

ஜூலை 1 குறிச்சாச்சு.. டாட் மேட்ரிக்ஸ் பேனல்.. பிரீமியமாக வருது நத்திங் போன் 3.. பிளிப்கார்ட் விற்பனை உறுதி!

இந்தியா மட்டுமல்லாமல், உலகளவில் இருக்கும் நத்திங் பிரியர்களும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. பிரீமியம் மாடலாக களமிறங்க இருக்கும் நத்திங் போன் 3 (Nothing Phone 3) ஆனது ஜூலை 1ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இந்திய மற்றும் குளோபல் மார்கெட்டில் ஒரே நேரத்தில் வெளியாகிறது. ஏற்கனவே, விற்பனை விவரங்களும் உறுதியாகி இருப்பதால், நத்திங் பிரியர்கள் படுகுஷியில் இருக்கின்றனர். இந்த நத்திங் போன் 3 போனில் என்னென்ன எதிர்பார்க்கலாம்?

ஜூலை 1 மாலை 6 மணிக்கு லண்டனில் நடக்கும் இவென்ட்டில் நத்திங் போன் 3 வெளியாக இருக்கிறது. அதே தேதியில் இந்திய நேரப்படி இரவு 10:30 மணிக்கு வெளியாகிறது. ஏற்கனவே, பிளிப்கார்ட் (Flipkart) தளத்தில் விற்பனைக்கு வருவது உறுதியாகி இருப்பதால், மைக்ரோசைட் ஓப்பன் செய்யப்பட்டுள்ளது. ஆனால், பீச்சர்கள் எதையும் நத்திங் நிறுவனம் உறுதி செய்யவில்லை.

ஜூலை 1 குறிச்சாச்சு.. டாட் மேட்ரிக்ஸ் பேனல்.. பிரீமியமாக நத்திங்!

இருப்பினும், முந்தைய மாடல்களில் கிடைத்ததை போல இந்த நத்திங் போன் 3 மாடலில் கிளைப் எல்இடி (Glyph LED) இடம்பெறாது என்பதை அந்த நிறுவனம் உறுதி செய்துள்ளது. இருப்பினும், டாட் மேட்ரிக்ஸ் பேட்டன்ஸ் (Dot Matrix Pattens) கொண்ட பேக் பேனல் கிடைக்கும் என்பதும் டிசைன் மூலம் உறுதியாகி இருக்கிறது. ஆகவே, பேக் பேனலில் நோட்டிபிகேஷன் கிடைக்கலாம்.

பிளாக்சிப் மாடலாக வெளியாக இருக்கிறது. ஆகவே, பிரீமியம் பில்ட் குவாலிட்டி மற்றும் சாப்ட்வேர் அப்கிரேட்களை எதிர்பார்க்கலாம். மேற்கண்ட விவரங்களை மட்டுமே நத்திங் நிறுவனம் அதிகார்ப்பூர்வமாக உறுதி செய்துள்ளது. இருப்பினும், ரேம் + மெமரி மற்றும் விலை விவரங்கள் மார்கெட்டில் கசிந்துள்ளன. இதுகுறித்த விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

இந்த நத்திங் போன் 3 மாடலில் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மற்றும் 16 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்கள் வெளியாக இருக்கிறது. இதில் 12 ஜிபி ரேம் வேரியண்ட்டின் விலை ரூ.68,681ஆகவும், 16 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.77,284ஆகவும் இருக்கிறது. 12 ஜிபி ரேம் + 512 ஜிபி வேரியண்ட் இப்போது, 16 ஜிபி ரேம் வேரியண்ட்டாக அப்கிரேட் செய்யப்பட்டுள்ளது.

இந்த விலை விவரங்களே மார்கெட்டில் கசிந்துள்ளன. ஆனால், நத்திங் நிறுவனம் உறுதி செய்யவில்லை. அதேபோல பீச்சர்களையும் மார்கெட்டில் கசிந்ததை வைத்து பார்க்கும்போது, இந்த போன் முந்தைய வெர்ஷன்களில் இருந்து டிசைனில் மட்டுமல்லாமல், பர்ஃபாமென்ஸ் மற்றும் குவாலிட்டியும் அப்கிரேட் செய்யப்பட்டு வெளியாக இருப்பது தெரிகிறது.

நத்திங் போன் 3 அம்சங்கள் (Nothing Phone 3 Specifications): இப்போது, பார்க்கப்போகும் பீச்சர்களும் உறுதி செய்யப்படாதவை மட்டுமே. 6.7 இன்ச் அமோலெட் (AMOLED) டிஸ்பிளே கிடைக்க இருக்கிறது. 1.5K ரெசொலூஷன் மற்றும் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் வர இருக்கிறது. ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8 எலைட் (Octa Core Snapdragon 8 Elite) சிப்செட் கிடைக்க இருக்கிறது.

50 எம்பி மெயின் கேமரா + 50 எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 50 எம்பி டெலிபோட்டோ கேமரா கொண்ட டிரிபிள் ரியர் கேமரா சிஸ்டம் (Triple Rear Camera System) கிடைக்க இருக்கிறது. இந்த நத்திங் போன் 3 மாடலில் 32 எம்பி செல்பீ ஷூட்டர் கிடைக்க இருக்கிறது. 50W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 25W வயர்லெஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 5000mAh பேட்டரி கிடைக்கிறது.

நத்திங்ஓஎஸ் 4 (NothingOS 4) மற்றும் ஆண்ட்ராய்டு 16 ஓஸ் (Android 16 OS) வர இருப்பதாக கூறப்படுகிறது. பிளாக் மற்றும் ஒயிட் ஆகிய கலர்களில் வர இருக்கிறது. இந்த பீச்சர்கள் மட்டுமே மார்கெட்டில் கசிந்துள்ளன. ஜூலை 1ஆம் தேதிக்கு முன்னதாக ஒவ்வொரு பீச்சர்களும் அதிகாரப்பூர்வமாக வெளியாக வாய்ப்புள்ளது. ஆகவே, வரிசையாக அப்டேட்கள் இருக்கும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Nothing Phone 3 To Launch July 1 in India Will Be Sale Via Flipkart Expected Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X