படுத்தே விட்டான் அய்யா.. ரூ.45,000 விலை குறைப்பு.. அடிமட்ட விலைக்கு வந்த Nothing-ன் லேட்டஸ்ட் போன்!
நத்திங் நிறுவனம் ஒரு சிறப்பு விளம்பர சலுகையை அறிவித்துள்ளது. வரவிருக்கும் பிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் விற்பனையின் போது, நத்திங் நிறுவனத்தின் லேட்டஸ்ட் பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் ஆன நத்திங் போன் 3 (Nothing Phone 3) மாடல் ஆனது 56% தள்ளுபடி விலையில், அதாவது பாதிக்கும் குறைவான விலையில் வாங்க கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
நினைவூட்டும் வண்ணம் நத்திங் போன் 3 ஸ்மார்ட்போன் ஆனது ரூ.79,999 என்கிற விலைக்கு இந்தியாவில் அறிமுகமானது. ஆனால் வருகிற செப்.23 தொடங்கும் பிளிப்கார்ட் சிறப்பு விற்பனையில் இது ரூ.45,000 தள்ளுபடியை பெற்று வெறும் ரூ.34,999 க்கு வாங்க கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த சலுகை வங்கி தள்ளுபடிகள் மற்றும் எக்ஸ்சேன்ஜ் சலுகைகள் ஆகியவற்றை உள்ளடக்கும் என்பதை நினைவில் கொள்வும். நத்திங் போன் 1 மற்றும் நத்திங் போன் 2 ஸ்மார்ட்போனை வைத்திருக்கும் உரிமையாளர்களுக்கு, அதை எக்ஸ்சேன்ஜ் செய்வதன் மூலம் நல்ல டிஸ்கவுண்ட்டை பெறலாம்
மேலும் ஏற்கனவே நத்திங் ஸ்மார்ட்போனை வைத்துள்ள பயனர்கள் தங்களுடைய தனித்துவமான தள்ளுபடி குறியீட்டை (Unique Discount Code) பெற நத்திங் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்திலோ அல்லது பிளிப்கார்ட்டிலோ தங்களுடைய ஐஎம்இஐ (IMEI) நம்பரை உள்ளிட வேண்டும். அதன்மூலம் பெரிய அளவிலான எக்ஸ்சேன்ஜ் சலுகையில் கீழ் புதிய நத்திங் போன் 3 மாடலை வாங்கவும்.
நத்திங் போன் 3 ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்: டிஸ்பிளேவை பொறுத்தவரை இது 6.67-இன்ச் பிளெக்சிபில் AMOLED பேனலை கொண்டுள்ளது. இந்த டிஸ்பிளே 1.5K ரெசல்யூஷன் , 4500 நிட்ஸ் (HDR) மற்றும் 1600 நிட்ஸ் (HMB) வரையிலான பீக் ப்ரைட்னஸ், 1000 ஹெர்ட்ஸ் டச் சம்ப்ளிங், 2160 ஹெர்ட்ஸ் PWM டிம்மிங், 92.89% ஸ்க்ரீன்-டூ-பாடி ரேஷியோ ஆகிய அம்சங்களையும் கொண்டுள்ளது.
சிப்செட்டை பொறுத்தவரை நத்திங் போன் 3 ஸ்மார்ட்போன் ஆனது மேம்பட்ட 4என்எம் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வடிவமைக்கப்பட்ட ஸ்னாப்டிராகன் 8எஸ் ஜென் 4 சிப்செட்டை கொண்டுள்ளது. இது மேம்படுத்தப்பட்ட பிரைம் செயல்திறன் கொண்ட குவால்காம்-ன் கிரியோ CPU கட்டமைப்பு மற்றும் அதிநவீன குவால்காம் அட்ரினோ ஆகியவற்றைக் கொண்டுள்ளது.
பழைய நத்திங் போன் 2 ஸ்மார்ட்போனுடன் ஒப்பிடும்போது இது ஜிபியு, மல்டி டாஸ்கிங், இமேஜ் ப்ராசஸிங் மற்றும் கிராபிக்ஸ் ஹேண்ட்லிங்கில் குறிப்பிடத்தக்க மேம்பாடுகளை வழங்கும். சிபியு சக்தியில் 36% அதிகரிப்பு, 88% ஜிபியு மேம்படுத்தல், ஏஐ தொடர்பான பணி செயலாக்கத்தில் 60% அதிகரிப்பு என நத்திங் போன் 3 ஸ்மார்ட்போன் ஆனது மல்டி டாஸ்கிங் முதல் மிக மென்மையான மொபைல் கேமிங் வரை சிரமமில்லாத அனுபவங்களை செயல்படுத்தும்.
கேமராக்களை பொறுத்தவரை நத்திங் போன் 3 ஸ்மார்ட்போனில் ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப் உள்ளது. அதில் 50எம்பி ஓஐஎஸ் ப்ரைமரி கேமரா + 50எம்பி ஓஐஎஸ் பெரிஸ்கோப் கேமரா + 50எம்பி அல்ட்ரா-வைட் கேமரா உள்ளது. முன்பக்கத்தில் 50எம்பி செல்பீ கேமரா உள்ளது. இதன் கேமரா செட்டப்பில் ட்ரூலென்ஸ்எஞ்சின் 4 மற்றும் 4கே அல்ட்ரா எக்ஸ்டிஆர் வீடியோ சிஸ்டம் ஆகிய அம்சங்களும் உள்ளன.
பேட்டரியை பொறுத்தவரை நத்திங் போன் 3 ஸ்மார்ட்போனில் இதுவரை இல்லாத அளவுக்கு மிகப்பெரிய 5500mAh சிலிக்கான் கார்பன் செல் பேக் செய்யப்பட்டுள்ளது. இது 65W பாஸ்ட் வயர்டு சார்ஜிங் மூலம், இது வெறும் 54 நிமிடங்களில் முழுமையாக சார்ஜ் ஆகும். கூடவே இது 15W வயர்லெஸ் சார்ஜிங் ஆதரவையும் கொண்டுள்ளது.


Click it and Unblock the Notifications