Home
Mobile

ஜூலை 15 முதல் SALE.. ஒரிஜினல் விலை கிடக்குது.. ஆபர் விலையில் Nothing Phone 3 வாங்குவது எப்படி?

விலை நிர்ணயம் அடிப்படையில் மட்டுமின்றி அது பேக் செய்துள்ள தரமான அம்சங்கள் அடிப்படையிலும் சலசலப்புகளை கிளப்பிய நத்திங் போன் 3 (Nothing Phone 3) ஸ்மார்ட்போன் ஆனது ஜூலை 15 ஆம் தேதி முதல் இந்திய சந்தையில் விற்பனைக்கு வர உள்ளது.

நத்திங் போன் 3 ஸ்மார்ட்போனின் அசல் அறிமுக விலை என்ன? விற்பனைக்கான ஆபர் விலை என்ன? ஜூலை 15 ஆம் தேதிக்குள் செய்யப்படும் ப்ரீ-ஆர்ட்ர் சலுகைகள் என்னென்ன? நத்திங் போன் 3 ஸ்மார்ட்போனில் என்னென்ன அம்சங்கள் உள்ளன? வாருங்கள் விரிவாக பார்க்கலாம்:

ஜூலை 15 முதல் SALE.. ஆபர் விலையில் Nothing Phone 3!

நத்திங் போன் 3 ஸ்மார்ட்போனின் அசல் விலையும், ஆபர் விலையும்: அசல் வியை பொறுத்தவரை, நத்திங் போன் 3 ஸ்மார்ட்போனின் 12ஜிபி ரேம் + 256ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.79,999 க்கும் மற்றும் 16ஜிபி ரேம் + 512ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.89,999 க்கும் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.

ஆனால் பேஸிக் 12ஜிபி ரேம் ஆப்ஷன் ஆனது பேங்க் ஆபர் மற்றும் எக்ஸ்சேஞ் ஆபர் உடன் சேர்துது ரூ.62,999 என்கிற ஆபர் விலையிலும், மறுகையில் உள்ள 16ஜிபி ரேம் ஆப்ஷன் ஆனது பேங்க் ஆபர் மற்றும் எக்ஸ்சேஞ் ஆபர் உடன் சேர்துது ரூ.72,999 என்கிற ஆபர் விலையிலும் வாங்க கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜூலை 15 க்குள் ப்ரீ -ஆர்டர் செய்தால் என்னென்ன ஆபர் கிடைக்கும்? நத்திங் போன் 3 ஸ்மார்ட்போனை முன்பதிவு செய்யும் வாடிக்கையாளர்கள் தங்கள் நத்திங் போன் 3 உடன் ரூ.14,999 மதிப்புள்ள நத்திங் இயர் (Nothing Ear) இயர்பட்ஸ் ஆனது இலவசமாக பெறுவார்கள் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது

மேலும் ஜூலை 15 ஆம் தேதிக்குள் நத்திங் போன் 3 ஸ்மார்ட்போனை முன்பதிவு செய்த அல்லது ஜூலை 15 ஆம் தேதி ஸ்மார்ட்போனை வாங்கும் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் 1 வருட கூடுதல் நீட்டிக்கப்பட்ட உத்தரவாதம் கிடைக்கும் என்றும் நத்திங் நிறுவனம் அறிவித்துள்ளது. மேலும் முன்னணி வங்கிகளில் 24 மாதங்கள் வரை நோ காஸ்ட் இஎம்ஐ விருப்பங்களும் அணுக கிடைக்கும்.

நத்திங் போன் 3 ஸ்மார்ட்போனின் விரிவான அம்சங்கள்: டிஸ்பிளேவை பொறுத்தவரை இது 6.67-இன்ச் பிளெக்சிபில் AMOLED பேனலை கொண்டுள்ளது. இந்த டிஸ்பிளே 1.5K ரெசல்யூஷன் , 4500 நிட்ஸ் (HDR) மற்றும் 1600 நிட்ஸ் (HMB) வரையிலான பீக் ப்ரைட்னஸ், 1000 ஹெர்ட்ஸ் டச் சம்ப்ளிங், 2160 ஹெர்ட்ஸ் PWM டிம்மிங், 92.89% ஸ்க்ரீன்-டூ-பாடி ரேஷியோ ஆகிய அம்சங்களையும் கொண்டுள்ளது.

சிப்செட்டை பொறுத்தவரை நத்திங் போன் 3 ஸ்மார்ட்போன் ஆனது மேம்பட்ட 4என்எம் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வடிவமைக்கப்பட்ட ஸ்னாப்டிராகன் 8எஸ் ஜென் 4 சிப்செட்டை கொண்டுள்ளது. இது மேம்படுத்தப்பட்ட பிரைம் செயல்திறன் கொண்ட குவால்காம்-ன் கிரியோ CPU கட்டமைப்பு மற்றும் அதிநவீன குவால்காம் அட்ரினோ ஆகியவற்றைக் கொண்டுள்ளது.

கேமராக்களை பொறுத்தவரை நத்திங் போன் 3 ஸ்மார்ட்போனில் ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப் உள்ளது. அதில் 50எம்பி ஓஐஎஸ் ப்ரைமரி கேமரா + 50எம்பி ஓஐஎஸ் பெரிஸ்கோப் கேமரா + 50எம்பி அல்ட்ரா-வைட் கேமரா உள்ளது. முன்பக்கத்தில் 50எம்பி செல்பீ கேமரா உள்ளது. இதன் கேமரா செட்டப்பில் ட்ரூலென்ஸ்எஞ்சின் 4 மற்றும் 4கே அல்ட்ரா எக்ஸ்டிஆர் வீடியோ சிஸ்டம் ஆகிய அம்சங்களும் உள்ளன.

பேட்டரியை பொறுத்தவரை நத்திங் போன் 3 ஸ்மார்ட்போனில் இதுவரை இல்லாத அளவுக்கு மிகப்பெரிய 5500mAh சிலிக்கான் கார்பன் செல் பேக் செய்யப்பட்டுள்ளது. இது 65W பாஸ்ட் வயர்டு சார்ஜிங் மூலம், இது வெறும் 54 நிமிடங்களில் முழுமையாக சார்ஜ் ஆகும். கூடவே இது 15W வயர்லெஸ் சார்ஜிங் ஆதரவையும் கொண்டுள்ளது.

நத்திங் போன் 3 ஸ்மார்ட்போனில் கவனிக்கப்பட வேண்டிய மற்ற அம்சங்களை பொறுத்தவரை, பேக் பேனலில் இதுவொரு மைக்ரோ-எல்இடி டிஸ்பிளேவை கொண்டுள்ளது. அது கிளிப் மேட்ரிக்ஸ் (Glyph Matrix) என்று அழைக்கப்படுகிறது. இது ஐபி68 ரேட்டிங் உடன் வருகிறது. கடைசியாக ஆண்ட்ராய்டு 15 (Android 15) அடிப்படையிலான நத்திங் ஓஎஸ் 3.5 உடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ள நத்திங் போன் 3 ஸ்மார்ட்போனிற்கு 5 ஆண்டுகள் முக்கிய ஆண்ட்ராய்டு அப்டேட்கள் மற்றும் 7 ஆண்டுகளுக்கு செக்யூரிட்டி அப்டேட்கள் கிடைக்கும் என்றும் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Nothing Phone 3 Sale in India on July 15 Check Out Offer Discount Details
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X