ரூ.1 லட்சம் இல்லீங்க.. கம்மி தான்.. விலையை வெளியிட்ட கையோடு Nothing Phone 3 அறிமுகம் அறிவிப்பு!
நத்திங் (Nothing) நிறுவனத்திடம் இருந்து மிகவும் எதிர்பார்க்கப்படும் அடுத்த ஸ்மார்ட்போன் ஆன நத்திங் போன் 3 மாடல் எப்போது அறிமுகமாகும் (Nothing Phone 3 Launch Timeline) மற்றும் அது என்ன மாதிரியான மேம்பாடுகளை (Nothing Phone 3 Upgrades) கொண்டுவரும் என்கிற விவரங்கள் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
நத்திங் போன் 3 எப்போது அறிமுகமாகும்? நத்திங் நிறுவனம் அதன் நத்திங் போன் 3 ஸ்மார்ட்போனை வருகிற ஜூன் 2025 இல் அறிமுகம் செய்வதை உறுதி படுத்தியுள்ளது. சரியான வெளியீட்டு தேதி குறித்த விவரங்களை பகிரவில்லை. வரும் நாட்களில் அதுகுறித்த விவரங்கள் வெளிப்படுத்தப்படலாம் என்று எதிர்பார்க்கலாம்.

லான்ச் டைம்லைன் -ஐ அறிவித்த கையோடு நத்திங் போன் 3 ஸ்மார்ட்போனில் என்ன மாதிரியான மேம்பாடுகளை எதிர்பார்க்கலாம் என்கிற சில விவரங்களையும் நத்திங் நிறுவனம் பகிர்ந்துள்ளது. அதன்படி நத்திங் போன் 3 ஸ்மார்ட்போன் ஆனது பிரீமியம் மெடீரியல்களை கொண்டு பில்ட் செய்யப்படும்; பெர்பார்மென்ஸ்-ஐ மேம்படுத்தும் சில முக்கிய அப்கிரேட்களை பெறும்; சாஃப்ட்வேர் துறையிலும் நியாயமான முன்னேற்றங்கள் இருக்கும் என்று நத்திங் கூறியுள்ளது.
ஒட்டுமொத்தமாக நத்திங் போன் 3 ஆனது எல்லாவற்றையும் ஒருங்கிணைக்கும் ஒரு ஸ்மார்ட்போன் ஆக இருக்கும் என்று நத்திங் குறிப்பிடுகிறது. சமீபத்தில் நத்திங் போன் 3 ஸ்மார்ட்போனின் விலை குறித்த பகீர் தகவல் வெளியாகி இருந்ததும் குறிப்பிடத்தக்கது. நத்திங் போன் 3 ஸ்மார்ட்போன் "சுமார் 800 யூரோ" என்கிற விலையில் அறிமுகப்படுத்தப்படும் என்று கார்ல் பெய் உறுதிப்படுத்தி உள்ளார்.
அதாவது இந்திய ரூபாய் மதிப்பின்படி நத்திங் போன் 3 ஸ்மார்ட்போன் ஆனது சுமார் ரூ.90,500 க்கு அறிமுகமாகுமாம். ஆனால் இந்தியாவில் ரூ.1 லட்சத்திற்கு அருகாமையில் என்கிற விலை நிர்ணயம் - கொஞ்சம் சாத்தியமற்றது தான். ஐரோப்பிய சந்தைகளின் விலைகள் எப்படியும் சற்று அதிகமாகவே இருக்கும் ஆனால் இந்திய விலை நிர்ணயம் குறைவாகவே இருக்கும்.
மேலும், நத்திங் போன் 2 ஸ்மார்ட்போன் இந்தியாவில் ரூ.44,999 என்கிற ஆரம்ப விலையில் அறிமுகம் செய்யப்பட்டது. ஆக நத்திங் போன் 3 விலை "ஒரே அடியாக".. "இரட்டிப்பாக".. வாய்ப்பில்லை. இது அதிகபட்சம் ரூ.60,000 பட்ஜெட்டில் (ரூ.59,999) அறிமுகம் செய்யப்படலாம். நத்திங் போன் 3 ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள் ஒவ்வொன்றாக வெளிப்படுத்தப்படும் போது - விலை குறித்த எங்களது வியூகங்கள் இன்னும் சரியானதாக இருக்கும்.
நத்திங் போன் 3 ஸ்மார்ட்போனில் என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்? ஸ்மார்ட் பிரிக்ஸ்-ன் சமீபத்திய அறிக்கையின்படி, நத்திங் போன் 3 ஸ்மார்ட்போன் ஆனது "கணிசமாக" மறுவடிவமைப்பு செய்யப்பட்ட கேமரா செட்டப்பை கொண்டிருக்கும். முன்னதாக வந்த மாடல்களை விட குறிப்பிடத்தக்க அப்கிரேட்-ஐ கொண்டிருக்கும்.
நத்திங் போன் 3 ஸ்மார்ட்போனின் புதிய கேமரா செட்டப்பில் 3 கேமரா சென்சார்கள் இருக்கும். அவற்றில் ஒன்று லார்ஜ் பெரிஸ்கோப்-ஸ்டைல் டெலிஃபோட்டோ லென்ஸாக இருக்கலாம். நத்திங் போன் 3 மாடலில் ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப் இடம்பெறுவதில் எந்த ஆச்சரியமும் இல்லை. அதற்கு 2 காரணங்களை முன்வைக்கலாம்.
ஒன்று - நத்திங் போன் 2 ஸ்மார்ட்போனில் டூயல் ரியர் கேமரா செட்டப் தான் உள்ளது. ஆக நத்திங் போன் 3 ஸ்மார்ட்போனில் பெரிய அளவிலான கேமரா அப்கிரேட் தேவைப்படும். இரண்டாவது - நத்திங் போன் 3ஏ சீரீஸ் மற்றும் சிஎம்எப் போன் 2 ப்ரோ ஆகிய அனைத்துமே ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்பையே கொண்டுள்ளன. ஆக நத்திங்கின் அடுத்த ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் ஆன நத்திங் போன் 3 மாடலில், மற்ற மிட்-ரேன்ஜ் மாடல்களில் இருப்பதை விட நல்ல கேமரா செட்டப் இடம்பெறுவதில்லை எந்த ஆச்சரியமும் இல்லை.
பேட்டரியை பொறுத்தவரை இது 5000mAh க்கும் அதிகமான பேட்டரியை கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒப்பிடுகையில், நத்திங் போன் 2 ஸ்மார்ட்போன் 4700mAh பேட்டரியைக் கொண்டிருந்தது. அதே நேரத்தில் நத்திங் போன் 3ஏ ப்ரோ மற்றும் சிஎம்எப் போன் 2 ப்ரோ ஆகிய இரண்டும் அதிகபட்சமாக 5,000mAh பேட்டரியை கொண்டுள்ளன. ஆக நத்திங் போன் 3 சற்றே பெரிய பேட்டரி உடன் வரும் என்பதில் எந்த வேண்டாம். மற்ற முக்கிய அம்சங்கள் குறித்து எந்த விவரங்களும் இல்லை!


Click it and Unblock the Notifications








