சாரே கொல மாஸ்.. 16GB ரேம் உடன் புதிய Nothing போன்.. ஜூலை 1 அறிமுகம்.. என்ன விலை?
நத்திங் (Nothing) நிறுவனம் அதன் அடுத்த பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் ஆன நத்திங் போன் 3 (Nothing Phone 3) மாடலை எப்போது அறிமுகம் செய்யும் என்கிற வெளியீட்டு தேதியை அறிவித்த வேகத்தில்.. நத்திங் போன் 3 ஸ்மார்ட்போனை பற்றிய பல சுவாரசியமான விவரங்கள் வெளியாகி கொண்டே இருக்கின்றன.
நத்திங் போன் 3 ஸ்மார்ட்போன் ஆனது 2025 ஆம் ஆண்டு ஜூலை 1 ஆம் தேதி அன்று அறிமுகம் செய்யப்படும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. நத்திங் போன் 3 ஸ்மார்ட்போனின் அதிகாரப்பூர்வ டீசர்கள் ஒருபக்கம் இருக்க, இந்த ஸ்மார்ட்போனை பற்றிய 2 சுவாரசியமான லீக்ஸ்களும் வெளியாகி உள்ளன: ஒன்று - நத்திங் போன் 3 ஸ்மார்ட்போனின் ஹைஎண்ட் ஸ்டோரேஜ் ஆப்ஷன் குறித்த லீக். இன்னொன்று - ரேம் குறித்த இந்திய விலை நிர்ணயம் குறித்த லீக்!

டிப்ஸ்டர் @MysteryLupin வழியாக கிடைத்த தகவலின்படி நத்திங் போன் 3 ஸ்மார்ட்போன் ஆனது 12 ஜிபி ரேம் + 256 ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷனுடன் சேர்த்து புதிய 16 ஜிபி ரேம் + 512 ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷனிலும் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது நத்திங் போன் 3 மாடல் ஆனது 12 ஜிபி ரேம் + 512 ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷனில் அறிமுகம் செய்யப்படாமல் போகலாம்
விலையை பொறுத்தவரை நத்திங் போன் 3 ஸ்மார்ட்போனின் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி ஸ்டோரேஜ் ஆனது 899 அமெரிக்க டாலர்களுக்கு (அதாவது இந்திய ரூபாய் மதிப்பின்படி சுமார் ரூ.76,865 க்கு) அறிமுகம் செய்யப்படலாம். 16ஜிபி ரேம் ஆப்ஷன் ஆனது 100 அமெரிக்க டாலர்கள் என்கிற அளவிலான அதிகரிப்பை பெற்று, இந்திய ரூபாய் மதிப்பின்படி சுமார் ரூ.76,865 க்கு அறிமுகம் செய்யப்படலாம்!
நினைவூட்டும் வண்ணம் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி ஸ்டோரேஜை கொண்ட நத்திங் போன் 2 (Nothing Phone 2) ஸ்மார்ட்போன் ஆனது இந்தியாவில் ரூ.49,999 க்கு அறிமுகப்படுத்தப்பட்டது. அமெரிக்கவில் நத்திங் போன் 3 ஸ்மார்ட்போனின் விலை உயர்வு சுமார் 12.5 சதவீதமாக இருக்கும் என்பதால், நத்திங் போன் 3 ஸ்மார்ட்போனின் இந்திய விலை நிர்ணயம் ரூ. 60,000க்கும் குறைவான விலையில் தான் இருக்கும்!
நத்திங் நிறுவனம் அதன் முதல் ட்ரூ பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் ஆன நத்திங் போன் 3-ஐ தொடர்ந்து நத்திங் ஹெட்போன் 1 (Nothing Headphone 1) என அழைக்கப்படும் அதன் முதல் ஓவர் இயர் ஹெட்போன்களையும் அறிமுகம் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது செப்டம்பர் 30, 2025 அன்று அறிமுகம் செய்யப்படலாம். பிரீமியம் ஆடியோ பிரிவில் களமிறங்கும் இதன் விலை $299 ஆக (சுமார் ரூ.25,560) இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாகா வெளியான நத்திங் போன் 3 தொடர்பான ஒரு டீஸர், நத்திங் நிறுவனம் அதன் ஐகானிக் எல்இடி டிசைனை (LED Design), அதாவது கிளிஃப் டிசைனை (Glyph Design), நத்திங் போன் 3 மாடலில் சேர்க்காமல் போகலாம் என்று பரிந்துரைக்கிறது. குறிப்பிட்ட எக்ஸ் தள பதிவானது "நாங்கள் கிளிஃப் இன்டர்பேஸ்-ஐ 'கில்' செய்கிறோம் (We killed the Glyph Interface) என்று கூறுகிறது.
நினைவூட்டும் வண்ணம் கிளிஃப் இன்டர்பேஸ் (Glyph Interface) என்பது அடிப்படையில் நத்திங்கின் லைட்டிங் அமைப்பாக செயல்படும், நத்திங் ஸ்மார்ட்போன்களின் பின்புறத்தில் உள்ள எல்இடி-களின் தொகுப்பாகும் (LED Series). இந்த எல்இடி டிசைன் ஆனது நத்திங் போன்களை மற்ற ஸ்மார்ட்போன்களிடம் இருந்து தனித்து காட்டுவதற்கு பெயர்போனது. இது உண்மையாகும் பட்சத்தில், எல்இடி கிளிஃப் இன்டர்பேஸ் இல்லாத ஒரு நத்திங் ஸ்மார்ட்போனை வாடிக்கையாளர்கள் எப்படி ஏற்றுக்கொள்கிறார்கள் என்பதை பார்க்க மிகவும் சுவாரசியமாக இருக்கும். Source: @MysteryLupin


Click it and Unblock the Notifications