கார்ல் பெய் இப்போதான் நீங்க ட்ராக்ல வரீங்க.. Nothing Phone 3 இவ்ளோ சீக்கிரம் வருதா.. அதுவும் இந்த பட்ஜெட்ல!
பெரிய அளவிலான எதிர்பார்ப்புகளை கிளப்பி பல்பு வாங்கிய நத்திங் போன் 1 மற்றும் கண்டுகொள்ளாமல் விடப்பட்டு பின்னர் வாடிக்கையாளர்கள் மத்தியில் ஓரளவு வரவேற்பை பெற்ற நத்திங் போன் 2 ஆகிய ஸ்மார்ட்போன்களின் அப்கிரேடட் வெர்ஷன் ஆன நத்திங் போன் 3 (Nothing Phone 3) மாடலின் லான்ச் டைம்லைன், விலை மற்றும் அம்சங்கள் குறித்த தகவல்கள் லீக் ஆகியுள்ளன.
நத்திங் போன் 3 ஸ்மார்ட்போனில் என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்?
- டூயல் சிம்
- 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.67-இன்ச் AMOLED டிஸ்பிளே
- ஸ்னாப்டிராகன் 8எஸ் ஜென் 3 சிப்செட்
- 50 எம்பி ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்
- 5000mAh பேட்டரி
- 100W பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு
- 5ஜி ஆதரவு
- வைஃபை
- என்எப்சி

நத்திங் போன் 3 இந்தியாவில் என்ன விலைக்கு அறிமுகம் செய்யப்படலாம்? விலை விவரங்கள் குறித்து நம்பகமான லீக் எதுவும் வெளியாகவில்லை. இருப்பினும், முந்தைய மாடல்களின் அடிப்படையில் (அதாவது நத்திங் போன் 1 - ரூ.32,999 மற்றும் நத்திங் போன் 2 - ரூ.44,999), நத்திங் போன் 3 ஸ்மார்ட்போனின் இந்திய விலை ரூ.45,000 - ரூ.50,000 க்குள் இருக்க அதிக வாய்ப்புள்ளது
நத்திங் போன் 3 எப்போது அறிமுகம் ஆகலாம்? டிப்ஸ்டர் அபிஷேக் யாதவ் வழியாக கிடைத்த சமீபத்திய லீக்கின்படி, நத்திங் போன் 3 ஸ்மார்ட்போன் ஆனது வருகிற 2025 ஜூலை மாதத்தில் அறிமுகம் செய்யப்படலாம். இது கடந்த பல மாதங்களாக நிலவும் லீக்ஸ் தகவல்களுடன்ஒற்று ஒற்றுப்போகிறது.
அறியாதோர்களுக்கு, 2025 ஆம் ஆண்டில் நத்திங் நிறுவனமானது முதலில் நத்திங் போன் 3 மாடலை தான் அறிமுகம் செய்யும் என்றும், அதன் பின்னரே நத்திங் போன் 3ஏ மற்றும் நத்திங் போன் 3ஏ ப்ரோ ஆகிய மாடல்களை அறிமுகம் செய்யும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அப்படி நடக்கவில்லை; போன் 3ஏ மற்றும் போன் 3ஏ ப்ரோ மாடல்களே முதலில் வெளிவந்துள்ளன.
நத்திங் போன் 3ஏ முக்கிய அம்சங்கள்: டிஸ்பிளேவை பொறுத்தவரை நத்திங் போன் 3ஏ ஸ்மார்ட்போன் ஆனது 1080 x 2392 பிக்சல்ஸ், 120ஹெர்ட்ஸ் ரெப்ரெஸ் ரேட், 3000 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ் மற்றும் பாண்டா கிளாஸ் ப்ரொடெக்ஷன் உடனான 6.77-இன்ச் அமோஎல்இடி எப்எச்டி பிளஸ் டிஸ்பிளேவை கொண்டுள்ளது.
சிப்செட்டை பொறுத்தவரை இது 4என்எம் குவால்காம் ஸ்னாப்டிராகன் 7எஸ் ஜென் 3 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. இது 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி வரையிலான ஸ்டோரேஜுடன் வருகிறது. கேமராக்களை பொறுத்தவரை நத்திங் போன் 3ஏ ஸ்மார்ட்போனில் ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப் உள்ளது
இதில் OIS + EIS ஆதரவு உடனான 50ம்பி சாம்சங் ப்ரைமரி சென்சார் + 50எம்பி சாம்சங் டெலிஃபோட்டோ லென்ஸ் (2எக்ஸ் ஆப்டிகல் ஜூம், 4எக்ஸ் இன்-சென்சார் ஜூம், 30எக்ஸ் அல்ட்ரா ஜூம்) + 8எம்பி சோனி அல்ட்ரா-வைட் கேமரா உள்ளது. முன்பக்கத்தில் 32எம்பி சாம்சங் செல்பீ கேமரா உள்ளது.
பேட்டரியை பொறுத்தவரை நத்திங் போன் 3ஏ ஸ்மார்ட்போன் ஆனது 50W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு உடனான 5000mAh பேட்டரியை கொண்டுள்ளது. இது 19 நிமிடங்களில் 50% பேட்டரியை சார்ஜ் செய்யும் என்றும், 56 நிமிடங்களில் நத்திங் போன் 3ஏ ஸ்மார்ட்போனை முழுமையாக சார்ஜ் செய்யும் என்றும் கூறப்படுகிறது.
கவனிக்கப்பட வேண்டிய மற்ற அம்சங்களை பொறுத்தவரை இது ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ்-ஐ அடிப்படையாக கொண்ட நத்திங்ஓஎஸ் 3.1 கொண்டு இயங்குகிறது. இதற்கு 3 வருட ஆண்ட்ராய்டு அப்டேட்கள் மற்றும் 4 வருட செக்யூரிட்டி பேட்ச்கள் கிடைக்கும் என்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கனெக்டிவிட்டி ஆப்ஷன்களை பொறுத்தவரைநத்திங் போன் 3ஏ ஸ்மார்ட்போன் ஆனது 5ஜி, என்எப்சி, வைஃபை 6 மற்றும் ப்ளூடூத் 5.4 ஆகியவைகளை கொண்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் ஐபி64 ரேட்டிங்கையும் கொண்டுள்ளது, இது தூசி மற்றும் நீர் எதிர்ப்பை வழங்கும். கடைசியாக இது இன்-டிஸ்பிளே பிங்கர் பிரிண்ட் சென்சாரையும் கொண்டுள்ளது.
நத்திங் போன் 3ஏ ஸ்மார்ட்போனின் விலை விவரங்கள்: நத்திங் போன் 3ஏ ஸ்மார்ட்போன் ஆனது பிளாக், ஒயிட் மற்றும் ப்ளூ ஆகிய 3 கலர்களில் வாங்க கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போனின் 8ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.24,999 க்கும், 8ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.26,999 க்கும் விற்பனை செய்யப்படுகிறது.


Click it and Unblock the Notifications








