Home
Mobile

வொர்த்து வர்மா.. வெயிட் பண்ணலாம்.. Nothing Phone 3 அறிமுக தேதியை அறிவித்த கார்ல் பெய்!

2025 ஆம் ஆண்டு தொடங்கியதில் இருந்து இதுவரையிலாக நத்திங் நிறுவனம் 2 போன்களை மட்டுமே அறிமுகம் செய்துள்ளது. அவைகள் நத்திங் போன் 3ஏ மற்றும் நத்திங் 3ஏ ப்ரோ ஸ்மார்ட்போன்கள் ஆகும். மேலும் வருகிற ஏப்ரல் 28 ஆம் தேதி நத்திங் நிறுவனத்தின் துணை நிறுவனம் ஆன சிஎம்எப் ஆனது அதன் இரண்டாவது ஸ்மார்ட்போன் ஆன சிஎம்எப் போன் 2 ப்ரோ மாடலை அறிமுகம் செய்யவுள்ளது.

லான்ச் டைம்லைன்: இதற்கிடையில் நத்திங் நிறுவனத்தின் அடுத்த பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் ஆன நத்திங் போன் 3 (Nothing Phone 3) எப்போது அறிமுகமாகும் என்கிற லான்ச் டைம்லைன் குறித்த விவரங்கள் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளது. எக்ஸ் தளம் வழியாக நத்திங் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஆன கார்ல் பெய், நத்திங் போன் 3 ஸ்மார்போனின் லான்ச் டைம்லைன்-ஐ உறுதிப்படுத்தி உள்ளார்.

Nothing Phone 3 அறிமுக தேதியை அறிவித்த கார்ல் பெய்!

நத்திங் போன் 3 எப்போது அறிமுகப்படுத்தப்படும்? ஒரு பயனரின் கேள்விக்கு பதிலளித்த கார்ல் பெய், இது 2025 ஆம் ஆண்டின் மூன்றாவது காலாண்டில் அறிமுகப்படுத்தப்படும் என்று குறிப்பிட்டார். இதன் பொருள் நத்திங் போன் 3 ஸ்மார்ட்போன் ஆனது 2025 ஆம் ஆண்டு ஜூலை மற்றும் செப்டம்பர் மாதங்களுக்கு இடையில் அறிமுகப்படுத்தப்படும்.

அதே காலகட்டத்தில்: நினைவுகூரத்தக்க வகையில், நத்திங் போன் 2 ஸ்மார்ட்போன் ஆனது கடந்த 2023 ஆம் ஆண்டு ஜூலை 11 ஆம் தேதி அறிமுகமானது. ஆக அதே காலகட்டத்தில் நத்திங் போன் 3 ஸ்மார்ட்போனும் வெளியிடப்படலாம். இருப்பினும் வார் நத்திங் போன் 3 ஸ்மார்ட்போனின் ஹார்ட்வேர் விவரங்கள் குறித்து எதுவும் பகிரவில்லை.

Nothing Phone 3 அறிமுக தேதியை அறிவித்த கார்ல் பெய்!

எதிர்பார்க்கப்படும் அம்சங்களை பொறுத்தவரை.. நத்திங் போன் 3ஏ சீரீஸ் ஸ்மார்ட்போன்களில் அறிமுகம் செய்யப்பட்ட எசென்ஷியல் ஸ்பேஸ் இந்த ஸ்மார்ட்போனிலும் இடம்பெறலாம். இதுதவிர்த்து நத்திங் போன் 3 மாடல் ஆனது ஸ்னாப்டிராகன் 8 எலைட் சிப்செட் அல்லது ஸ்னாப்டிராகன் 8எஸ் ஜென் 4 சிப்செட் மூலம் இயக்கப்படலாம். நத்திங் போன் 2 இந்தியாவில் ரூ.44,999க்கு அறிமுகப்படுத்தப்பட்டது. ஆகையால் இதன் விலை ரூ.50,000 க்கு அருகே செல்ல அதிக வாய்ப்புள்ளது.

நத்திங் போன் 2 ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்: டூயல் சிம் (நானோ) ஆதரவுடன் வரும் நத்திங் போன் 2 ஆனது ஆண்ட்ராய்டு 13 அடிப்படையிலான நத்திங் ஓஎஸ் 2.0 கொண்டு இயங்குகிறது. இது 120ஹெர்ட்ஸ் வரையிலான அடாப்டிவ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.7-இன்ச் ஃபுல்-எச்டி எல்டிபிஓ ஓஎல்இடி டிஸ்பிளேவை கொண்டுள்ளது.

Nothing Phone 3 அறிமுக தேதியை அறிவித்த கார்ல் பெய்!

குவால்காம் 4என்எம் ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 சிப்செட்டை பேக் செய்கிறது. கேமராக்களை பொறுத்தவரை, இதில் டூயல் ரியர் கேமரா செட்டப் உள்ளது. அதில் 1/1.56-இன்ச் சோனி IMX890 சென்சார் மற்றும் ஆப்டிகல் இமேஜ் ஸ்டேபிலைசேஷன் (OIS) மற்றும் எலக்ட்ரானிக் இமேஜ் ஸ்டேபிலைசேஷன் (EIS) உடனான 50 மெகாபிக்சல் மெயின் + 50 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் ஆங்கிள் கேமரா உள்ளது.

முன்பக்கத்தில் 32 மெகாபிக்சல் கேமரா மற்றும் பேக் பேனலில் எல்இடி லைட்ஸ் உடனான கிளிஃப் இன்டர்ஃபேஸ் உடன் வரும் நத்திங் போன் 2 ஸ்மார்ட்போன் ஆனது 45W வயர்டு சார்ஜிங் மற்றும் 5W கியூஐ வயர்லெஸ் சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் 4700எம்ஏஎச் பேட்டரியை பேக் செய்கிறது.

Nothing Phone 3 அறிமுக தேதியை அறிவித்த கார்ல் பெய்!

சிஎம்எப் போன் 2 ப்ரோ ஸ்மார்ட்போனில் என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்? இது மீடியாடெக் டைமன்சிட்டி 7300 ப்ரோ (MediaTek Dimensity 7300 Pro) சிப்செட் மூலம் இயக்கப்படும் என்பதை சிஎம்எப் நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது. நினைவூட்டும் வண்ணம் சிஎம்எப் போன் 1 (CMF Phone 1) ஸ்மார்ட்போனில் டைமன்சிட்டி 7300 (Dimensity 7300) சிப்செட் இருந்தது.

ஆகையால் சிஎம்எப் போன் 2 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது டைமன்சிட்டி 7400 (Dimensity 7400) சிப் உடன் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது, ஆனால் சிஎம்எப் நிறுவனம், டைமன்சிட்டி 7300 சிப்பின் ப்ரோ வெர்ஷனை தேர்வு செய்துள்ளது. இது சிஎம்எப் போன் 1 ஸ்மார்ட்போனில் உள்ள டைமன்சிட்டி 7300 சிப் உடன் ஒப்பிடும்போது 10% வேகமான சிபியு மற்றும் 5% வேகமான கிராபிக்ஸ் இம்ப்ரூவ்மென்ட்டை உறுதி செய்கிறது.

Nothing Phone 3 அறிமுக தேதியை அறிவித்த கார்ல் பெய்!

மேலும், மீடியாடெக் டைமன்சிட்டி 7300 ப்ரோ சிப் ஆனது 6வது ஜெனரஷன் என்பியு-வை பயன்படுத்தும் என்றும், இது 4.8 டாப்ஸ் ஏஐ செயல்திறன், பிஜிஎம்ஐ-யில் 120 பிரேம்ஸ் பெர் செகண்ட் கேமிங், நெட்வொர்க்கில் 53% மேம்பாடுகள் மற்றும் 1000 ஹெர்ட்ஸ் டச் சாம்பிளிங் ரேட் ஆகியவற்றை வழங்கும் என்றும் சிஎம்எப் நிறுவனம் கூறியுள்ளது.

சிஎம்எப் போன் 2 ப்ரோ ஸ்மார்ட்போன் இந்தியாவில் என்ன விலைக்கு அறிமுகம் செய்யப்படலாம்? பெரும்பாலும் இது ரூ.22,000 க்குள் என்கிற பட்ஜெட்டில் அறிமுகம் செய்யப்படலாம். இன்னும் சரியாக சொல்ல வேண்டும் என்றால் ரூ.21,999 க்கு வரலாம். நினைவூட்டும் வண்ணம் சிஎம்எப் போன் 1 ஸ்மார்ட்போன் ரூ.14,999 க்கு அறிமுகமானது.

Nothing Phone 3 அறிமுக தேதியை அறிவித்த கார்ல் பெய்!

நத்திங் போன் 3ஏ ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்:
- பேக் பேனலில் கிளிஃப் லைட்டிங் செட்டப்
- 3000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.77 இன்ச் AMOLED டிஸ்பிளே
- ஸ்னாப்டிராகன் 7எஸ் ஜென் 3 சிப்செட்
- ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ்-ஐ அடிப்படையாக நத்திங் ஓஎஸ் 3.1

- ஹாரிசாண்டல் ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்
- 50 மெகாபிக்சல் ப்ரைமரி கேமரா
- 8 மெகாபிக்சல் அல்ட்ராவைடு கேமரா
- புதிய 50 மெகாபிக்சல் டெலிஃபோட்டோ சென்சார்
- 32 மெகாபிக்சல் செல்பீ கேமரா
- 50W பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு
- 5,000mAh பேட்டரி

நத்திங் போன் 3ஏ ஸ்மார்ட்போனின் இந்திய விலை விவரங்கள்: 8ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் - ரூ.22,999 க்கு வாங்க கிடைக்கிறது. இதேபோல 8ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் - ரூ.24,999 க்கு வாங்க கிடைக்கிறது. இரண்டுமே வங்கி சலுகை விலையாகும். இந்த ஸ்மார்ட்போன் ஒயிட், பிளாக் மற்றும் ப்ளூ ஆகிய மூன்று கலர் ஆப்ஷன்களில் பிளிப்கார்ட் வழியாக வாங்க கிடைக்கிறது.

நத்திங் போன் 3ஏ ப்ரோ ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்:
- பேக் பேனலில் கிளிஃப் லைட்டிங் செட்டப்
- 3000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.77 இன்ச் AMOLED டிஸ்பிளே
- ஸ்னாப்டிராகன் 7எஸ் ஜென் 3 சிப்செட்
- ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ்-ஐ அடிப்படையாக நத்திங் ஓஎஸ் 3.1

- சர்க்குலர் ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்
- 50 மெகாபிக்சல் ப்ரைமரி கேமரா
- 8 மெகாபிக்சல் அல்ட்ராவைடு கேமரா
- 50 மெகாபிக்சல் பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ சென்சார்
- 50 மெகாபிக்சல் செல்பீ கேமரா
- 50W பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு
- 7.5W ரிவர்ஸ் சார்ஜிங் ஆதரவு
- 5,000mAh பேட்டரி

நத்திங் போன் 3ஏ ப்ரோ ஸ்மார்ட்போனின் இந்திய விலை விவரங்கள்: 8 ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் - ரூ.27,999 (வங்கி சலுகைகள் உட்பட). 8ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் - ரூ.29,999 (வங்கி சலுகைகள் உட்பட). 12ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் - ரூ.31,999 (வங்கி சலுகைகள் உட்பட). இந்த ஸ்மார்ட்போன் க்ரே மற்றும் பிளாக் ஆகிய 2 கலர் ஆப்ஷன்களில் பிளிப்கார்ட் வழியாக வாங்க கிடைக்கிறது.

Best Mobiles in India

English summary
Nothing Phone 3 Launch timeline Confirmed By CEO Carl Pei What to Expect
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X