Nothing Phone 3 அறிமுகம் எப்போது? iPhone-களை ஓவர்டேக் செய்யப்போகும் AI நத்திங் போன்? கார்ல் பெய் அடிச்ச மணி..
நத்திங் (Nothing) நிறுவனம், அதன் அடுத்த ஸ்மார்ட்போன் மாடலான நத்திங் போன் (3) - Nothing Phone (3) ஸ்மார்ட்போனை எப்போது அறிமுகம் செய்யவுள்ளது என்ற தகவல் இப்போது லீக் ஆகியுள்ளது. அதற்கு முன்பாக, நத்திங் நிறுவனத்தின் CEO கார்ல் பெய் (Carl Pei) பல தசாப்தங்களாக பின்பற்றப்படும் ஸ்மார்ட்போன் பன்பை எப்படி மாற்றவுள்ளார் என்பது பற்றிய தகவல்களும் வெளியாகியுள்ளது. நத்திங் போன் 3 வருகை பற்றிய விபரங்களை இந்த பதிவின் மூலம் அறிந்துகொள்ளலாம்.
நத்திங் நிறுவனம் அதன் நத்திங் போன் 2 - Nothing Phone (2) சாதனத்தை கடந்த ஆண்டு ஜூலை மாதம் அறிமுகம் செய்தது. இந்த சாதனத்தை தொடர்ந்து அதிகம் எதிர்பார்க்கப்பட்ட சாதனமாக திகழும் அடுத்த தலைமுறை நத்திங் போன் 3 - Nothing Phone (3) சாதனத்தின் அறிமுகம் இந்த ஜூலை 2024 ஆம் ஆண்டு எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், சமீபத்தில் வெளியான தகவல் நத்திங் ரசிகர்களுக்கு வருத்தத்தை வழங்கியுள்ளது.

நத்திங் போன் (3) - Nothing Phone (3):
சமீபத்தில் ஒரு கலந்தாய்வு நிகழ்வில் பேசிய நத்திங் (Nothing) நிறுவனத்தின் நிறுவுனர் மற்றும் CEO ஆன கார்ல் பெய் (Carl Pei) பேசிய தகவல்கள் நத்திங் போன் 3 இன் வருகை பற்றிய விபரங்களை சொல்லாமல் சொல்லியுள்ளது. கார்ல் பெய் கூறிய தகவல்களில் முக்கியமான கவனத்தை ஈர்த்த தகவல் என்றால், அது நத்திங் நிறுவனத்தின் அடுத்தகட்ட திட்டங்கள் பற்றியானது தான்.
நத்திங் நிறுவனம் நிகழும் ஆண்டில் ஏஐ (AI) என்று அழைக்கப்படும் ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ஸ் (Artificial Intelligence) தொழில்நுட்பத்தை சொந்தமாக உருவாக்க திட்டமிட்டுள்ளதாக கூறியுள்ளது. வரவிருக்கும் நத்திங் நிறுவனத்தின் புதிய தயாரிப்புகளில் ஏஐ அம்சத்தை வழங்கவுள்ளதாக நத்திங் நிறுவன தலைவர் கார்ல் பெய் தெரிவித்திருக்கிறார். இது ஒரு புறம் நத்திங் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை தந்திருக்கிறது.
வரும் காலத்தில் ஸ்மார்ட்போன்களில் ஏஐ அம்சம் இருப்பது ஒரு முக்கியமான கருவியாக பார்க்கப்படப்போகிறது. தற்போதுள்ள பல ஏஐ அம்சங்கள் மக்களுக்கு பயனளிக்கும் வகையில் எளிமையாக இருந்தாலும், இன்னும் பல ஏஐ அம்சங்கள் மக்களுக்கு குழப்பத்தை விளைவிக்கின்றன. இப்படி குழப்பமில்லா எளிமையான ஏஐ அம்சத்தை எல்லோருக்கும் வழங்கும் நோக்கத்தில் நத்திங் நிறுவனம் இப்போது செயல்பட்டுக் கொண்டிருப்பதாக கார்ல் பெய் தெரிவித்திருக்கிறார். இது ஐபோனை மிஞ்சும் அளவிற்கு இருக்குமென்று வதந்திகள் பரவிவருகிறது.
நத்திங் போன் (3) அறிமுகம் எப்போது? கார்ல் பெய் அடிச்ச மணி:
அதேபோல், பல தசாப்தங்களாக மாற்றங்கள் எதுவும் இல்லாமல் கண்முடித்தனமாக பின்பற்றப்பட்டு வரும் ஸ்மார்ட்போன் பயனர் அனுபவங்களை நத்திங் மாற்றவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதற்காக நத்திங் நிறுவனம் சில பிரத்தியேகமான மேம்படுத்தல்களை அதன் அடுத்த ஸ்மார்ட்போன் சாதனமான நத்திங் போன் 3 இல் அறிமுகம் செய்யவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த மேம்படுத்தல்களை வெற்றிகரமானதாக மாற்ற நத்திங் நிறுவனம் இந்த ஆண்டு முழுக்க பணியாற்றவுள்ளதாக மணி அடித்தார் போல் கார்ல் பெய் கூறியுள்ளார்.
இந்த தகவலை வைத்து பார்க்கையில், நத்திங் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட அதன் அடுத்த ஸ்மார்ட்போன் சாதனமாக நத்திங் போன் 3 - Nothing Phone (3) ஸ்மார்ட்போன் 2025 ஆம் ஆண்டில் அறிமுகம் செய்யப்படும் என்பது தெளிவாகியுள்ளது. ஆகையால், இந்த ஜூலை 2024 இல் நத்திங் நிறுவனம் எந்த புதிய சாதனத்தையும் அறிமுகம் செய்யாது என்று கார்ல் பெய் சொல்லாமல் சொல்லியிருக்கிறார் என்பது கவனிக்கத்தக்கது.


Click it and Unblock the Notifications








