கனவுல கூட கிடைக்காது.. ரூ.38,000 விலை குறைப்பு.. 5500mAh பேட்டரி.. OIS கேமரா.. AMOLED டிஸ்பிளே.. எந்த மாடல்?
அமேசான் தளத்தில் நடக்கும் பிரைம் டே எர்லி டீல் (Prime Day Early Deal) என்னும் சிறப்பு விற்பனையில் நேரடியாக ரூ.38,000 விலை குறைப்பில் நத்திங் போன் 3 (Nothing Phone 3) ஸ்மார்ட்போன் கிடைக்கிறது. எந்த கிரெடிட் கார்டுகளும் தேவையில்லை என்பதால், விற்பனையில் மிகப்பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.
அமேசான் பிரைம் டே விற்பனை ஜூலை 4ஆம் தேதி தொடங்குகிறது. இருப்பினும், பிரைம் டே எர்லி டீலில் பல்வேறு ஸ்மார்ட்போன்கள் தள்ளுபடி மற்றும் விலை குறைப்பில் கிடைக்கின்றன. இதில் அதிகமான விலை குறைப்பில் அல்ட்ரா பிரீமியம் டிசைன் மற்றும் பீச்சர்களை கொண்ட நத்திங் போன் 3 ஸ்மார்ட்போன் விற்பனைக்கு கிடைக்கிறது.

இந்திய மார்கெட்டில் ரூ.79,999 விலைக்கு 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் வெளியாகியது. இந்த விலையில் இருந்து நேரடியாக ரூ.38,000 விலை குறைப்பு செய்யப்பட்டு அமேசான் தளத்தில் இப்போது வாங்கி கொள்ள கிடைக்கிறது. கூடுதலாக கிரெடிட் கார்டு டிஸ்கவுண்ட், ஈஎம்ஐ டிஸ்கவுண்ட் மற்றும் எக்ஸ்சேஞ்ச் சலுகைகள் வருகிறது.
நத்திங் போன் 3 சிறப்பம்சங்கள் (Nothing Phone 3 Specifications): ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8எஸ் ஜென் 4 4என்எம் (Octa Core Snapdragon 8s Gen 4 4nm) சிப்செட் மற்றும் அட்ரிநோ 825 ஜிபியு (Adreno 825 GPU) கிராபிக்ஸ் கார்டை இந்த நத்திங் போன் 3 ஸ்மார்ட்போன் கொடுத்துள்ளது. ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) கொண்ட மாடலாக இருக்கிறது.
நத்திங் ஓஎஸ் 3.5 (Nothing OS 3.5) கொடுக்கப்பட்டு உள்ளது. 5 ஜெனரேஷன் ஆண்ட்ராய்டு ஓஎஸ் அப்டேட்கள் (Android OS Updates) கிடைக்கின்றன. 7 வருடங்களுக்கு செக்யூரிட்டி அப்டேட்களும் கிடைக்கின்றன. லேட்டஸ்ட் மேனுபேக்சரிங் மாடல்களில் ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் கிடைக்க வாய்ப்புள்ளது. கார்னிங் கொரில்லா கிளாஸ் 7ஐ (Corning Gorilla Glass 7i) உள்ளது.
6.67 இன்ச் (2800 x 1260 பிக்சல்கள்) அமோலெட் (AMOLED) டிஸ்பிளேவை கொடுத்துள்ளது. மேலும், 1.5K ரெசொலூஷன் மற்றும் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் கிடைக்கிறது. 1000Hz டச் சாம்பிளிங் ரேட் கிடைக்கிறது. எச்டிஆர்10பிளஸ் (HDR10+), 4500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கொடுக்கப்பட்டு இருக்கிறது. 2160Hz PWM டிம்மிங் ஃபிரிகொன்சி கிடைக்கிறது.
ஓம்னிவிஷன் ஓவி50எச் சென்சாருடன் 50 எம்பி மெயின் கேமரா மற்றும் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (OIS) கிடைக்கிறது. 50 எம்பி அல்ட்ரா வைடு கேமராவில் சாம்சங் ஜேஎன்1 சென்சார் கிடைக்கிறது. 50 எம்பி டெலிபோட்டோ கேமராவையும் இந்த நத்திங் போன் 3 கொடுக்கிறது. இதில் சாம்சங் ஜேஎன்5 சென்சார் மற்றும் 60X டிஜிட்டல் ஜூம் உள்ளது.
மேலும், ஆட்டோ போகஸ் மற்றும் 10செ.மீ மேக்ரோ கிடைக்கிறது. 4K வீடியோ ரெக்கார்டிங் கிடைக்கிறது. 50 எம்பி செல்பீ கேமராவுக்கும் 4K வீடியோ ரெக்கார்டிங் கிடைக்கிறது. இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor) மற்றும் IP68 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் கொடுக்கப்பட்டு இருக்கிறது.
ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் கிடைக்கின்றன. 8.99 எம்எம் தடிமன் கொண்ட பாடியில் 5500mAh பேட்டரியை கொடுக்கிறது. இந்த பேட்டரிக்கு 65W ஃபாஸ்ட் சார்ஜிங், 15W வயர்லெஸ் சார்ஜிங் மற்றும் 5W ரிவர்ஸ் வயர்லெஸ் சார்ஜிங் கிடைக்கிறது. 218 கிராம் எடை கொடுத்துள்ளது. பிளாக் மற்றும் ஒயிட் ஆகிய கலர்களில் மட்டுமே விற்பனைக்கு கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications