Nothing படுத்தே விட்டான் ஐயா.. ரூ.37000 நேரடி விலை குறைப்பு.. எந்த பேங்க் கார்டும் இல்லாம அடிமட்ட விலையில்!
லண்டனை சேர்ந்த நிறுவனமான நத்திங், கடந்த ஜூலை 2025 இல் இந்தியாவில் அதன் நத்திங் ஃபோன் 3 (Nothing Phone 3) மாடலை அறிமுகப்படுத்தி இருந்தது. அறிமுகமான ஒரு வருடத்திற்கும் குறைவான காலத்தில், இந்த பிளாக்ஷிப் போனின் விலை இந்தியாவில் ரூ.37,000 வரை குறைந்துள்ளது.
எதிர்பார்த்ததை விட டபுள் மடங்கு விலையில் அறிமுகம் செய்யப்பட்டதின் விளைவாகவே, இன்றும் ஸ்மார்ட்போன் சந்தையில் வாங்க கிடைக்கும் மிக அழகான போன்களில் ஒன்றான நத்திங் போன் 3 மாடல் இப்போது தான் சரியான விலைக்கு வந்துள்ளது என்றும் கூறலாம், அடிமட்ட விலைக்கு வந்துள்ளது என்றும் கூட கூறலாம்.

OPINION: சிறந்த மென்பொருள் மற்றும் கேமரா அனுபவத்தை விரும்புபவருக்கு, இந்த நத்திங் போன் 3 ஸ்மார்ட்போன் இன்றும் ஒரு சிறந்த மதிப்புள்ள போனாக உள்ளது. நிச்சயமாக, இந்த போனில் சிறந்த சிப்செட் உங்களுக்கு கிடைக்காது, ஆனால் கேமிங் செய்வதற்கும், நீண்ட நேரம் வீடியோக்களை பதிவு செய்வதற்கும் (நீங்கள் ஒரு கிரியேட்டர் ஆக இருந்தால்) இந்த போன் போதுமானதாக இருக்கும்
மேலும் இது ஒரு பெரிய மற்றும் மிகவும் மென்மையான டிஸ்பிளேவையும் கொண்டுள்ளது. அனைத்து பிராண்டுகளும் தங்கள் ஃபோன்களின் விலையை உயர்த்தி வரும் ஒரு காலகட்டத்தில், இந்தியாவில் நத்திங் போன் 3 ஸ்மார்ட்போனின் விலை எவ்வளவு குறைந்து உள்ளது என்பதை முதலில் பார்ப்போம்.
நத்திங் போன் 3 ஸ்மார்ட்போனின் அசல் அறிமுக விலை: நத்திங் போன் 3 ஸ்மார்ட்போனின் 12ஜிபி ரேம் + 256ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.79,999 க்கும் மற்றும் 16ஜிபி ரேம் + 512ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.89,999 க்கும் அறிமுகம் செய்யப்பட்டு இருந்தது.
நத்திங் போன் 3 ஸ்மார்ட்போனின் குறைக்கப்பட்ட புதிய விலை: தற்போது அமேசான் இந்தியா வலைத்தளத்தில் 12ஜிபி ரேம் + 256ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் கொண்ட பிளாக் கலர் வேரியண்ட் ரூ.42,999 க்கும் மற்றும் ஒயிட் கலர் வேரியண்ட் ரூ.44,999 க்கும் வாங்க கிடைக்கிறது. மேலும் 16ஜிபி ரேம் + 512ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் உடனான பிளாக் கலர் வேரியண்ட் ரூ.51,999 க்கும் மற்றும் ஒயிட் கலர் வேரியன் ரூ.54,999 க்கும் வாங்க கிடைக்கிறது
நத்திங் போன் 3 ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்: டிஸ்பிளேவை பொறுத்தவரை இது 6.67-இன்ச் பிளெக்சிபில் AMOLED பேனலை கொண்டுள்ளது. இந்த டிஸ்பிளே 1.5K ரெசல்யூஷன் , 4500 நிட்ஸ் (HDR) மற்றும் 1600 நிட்ஸ் (HMB) வரையிலான பீக் ப்ரைட்னஸ், 1000 ஹெர்ட்ஸ் டச் சம்ப்ளிங், 2160 ஹெர்ட்ஸ் PWM டிம்மிங், 92.89% ஸ்க்ரீன்-டூ-பாடி ரேஷியோ ஆகிய அம்சங்களையும் கொண்டுள்ளது.
சிப்செட்டை பொறுத்தவரை நத்திங் போன் 3 ஸ்மார்ட்போன் ஆனது மேம்பட்ட 4என்எம் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வடிவமைக்கப்பட்ட ஸ்னாப்டிராகன் 8எஸ் ஜென் 4 சிப்செட்டை கொண்டுள்ளது. இது மேம்படுத்தப்பட்ட பிரைம் செயல்திறன் கொண்ட குவால்காம்-ன் கிரியோ CPU கட்டமைப்பு மற்றும் அதிநவீன குவால்காம் அட்ரினோ ஆகியவற்றைக் கொண்டுள்ளது.
பழைய நத்திங் போன் 2 ஸ்மார்ட்போனுடன் ஒப்பிடும்போது இது ஜிபியு, மல்டி டாஸ்கிங், இமேஜ் ப்ராசஸிங் மற்றும் கிராபிக்ஸ் ஹேண்ட்லிங்கில் குறிப்பிடத்தக்க மேம்பாடுகளை வழங்கும். சிபியு சக்தியில் 36% அதிகரிப்பு, 88% ஜிபியு மேம்படுத்தல், ஏஐ தொடர்பான பணி செயலாக்கத்தில் 60% அதிகரிப்பு என.. நத்திங் போன் 3 ஸ்மார்ட்போன் ஆனது மல்டி டாஸ்கிங் முதல் மிக மென்மையான மொபைல் கேமிங் வரை சிரமமில்லாத அனுபவங்களை செயல்படுத்தும்.
கேமராக்களை பொறுத்தவரை நத்திங் போன் 3 ஸ்மார்ட்போனில் ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப் உள்ளது. அதில் 50எம்பி ஓஐஎஸ் ப்ரைமரி கேமரா + 50எம்பி ஓஐஎஸ் பெரிஸ்கோப் கேமரா + 50எம்பி அல்ட்ரா-வைட் கேமரா உள்ளது. முன்பக்கத்தில் 50எம்பி செல்பீ கேமரா உள்ளது. இதன் கேமரா செட்டப்பில் ட்ரூலென்ஸ்எஞ்சின் 4 மற்றும் 4கே அல்ட்ரா எக்ஸ்டிஆர் வீடியோ சிஸ்டம் ஆகிய அம்சங்களும் உள்ளன.
பேட்டரியை பொறுத்தவரை நத்திங் போன் 3 ஸ்மார்ட்போனில் இதுவரை இல்லாத அளவுக்கு மிகப்பெரிய 5500mAh சிலிக்கான் கார்பன் செல் பேக் செய்யப்பட்டுள்ளது. இது 65W பாஸ்ட் வயர்டு சார்ஜிங் மூலம், இது வெறும் 54 நிமிடங்களில் முழுமையாக சார்ஜ் ஆகும். கூடவே இது 15W வயர்லெஸ் சார்ஜிங் ஆதரவையும் கொண்டுள்ளது.


Click it and Unblock the Notifications