Home
Mobile

விற்பனைக்கு வந்து 10 நாள் ஆகல.. ரூ.20,000 டிஸ்கவுண்ட்.. Nothing Phone 3 க்கு வந்த சத்திய சோதனை!

இதென்ன டா நத்திங் போன் 3 (Nothing Phone 3) ஸ்மார்ட்போனுக்கு வந்த சத்திய சோதனை என்று கூறும்படியாக.. இந்திய சந்தையில் விற்பனைக்கு வந்த பத்தே நாட்களில் நத்திங் நிறுவனத்தின் லேட்டஸ்ட் ஸ்மார்ட்போன் ஆன நத்திங் போன் 3 மாடல் மீது ரூ.20,000 வரை டிஸ்கவுண்ட் கிடைக்கிறது.

ஜூலை 15 ஆம் தேதி அதன் அதிகாரப்பூர்வ விற்பனை தொடங்கிய நத்திங் போன் 3 ஸ்மார்ட்போன் ஆனது அதன் அறிமுக விலையை விட ரூ.20,000 குறைவாக வாங்க கிடைக்கிறது. இந்த சலுகை பிளிப்கார்ட் (Flipkart) வலைதளத்தில் நேரலையில் உள்ளது மற்றும் இது வரையறுக்கப்பட்ட நேர விளம்பர சலுகையாகவும் உள்ளது.

ரூ.20,000 டிஸ்கவுண்ட்.. Nothing Phone 3 க்கு வந்த சத்திய சோதனை!

இந்த சலுகை இரண்டு பகுதிகளாக கிடைக்கிறது: நீங்கள் ஐசிஐசிஐ (ICICI) மற்றும் ஐடிஎப்சி (IDFC) கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தினால் உடனடியாக ரூ.10,000 தள்ளுபடியும், உங்கள் பழைய ஸ்மார்ட்போனை எக்ஸ்சேன்ஜ் செய்யும்போது எக்ஸ்சேஞ்ச் போனஸாக ரூ.10,000 தள்ளுபடியும் கிடைக்கும். இந்த தள்ளுபடிகளை ஒன்றிணைத்தால், நத்திங் போன் 3 ஸ்மார்ட்போனின் இறுதி ஆபர் விலையை ரூ.59,999 ஆக குறைக்கலாம்.

நத்திங் போன் 3 ஸ்மார்ட்போனின் அசல் அறிமுக விலை விவரங்கள்: நத்திங் போன் 3 ஸ்மார்ட்போனின் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.79,999 க்கும் மற்றும் 16 ஜிபி ரேம் + 512 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.89,999 க்கும் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.

நத்திங் போன் 3 ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்: டிஸ்பிளேவை பொறுத்தவரை இது 6.67-இன்ச் பிளெக்சிபில் AMOLED பேனலை கொண்டுள்ளது. இந்த டிஸ்பிளே 1.5K ரெசல்யூஷன் , 4500 நிட்ஸ் (HDR) மற்றும் 1600 நிட்ஸ் (HMB) வரையிலான பீக் ப்ரைட்னஸ், 1000 ஹெர்ட்ஸ் டச் சம்ப்ளிங், 2160 ஹெர்ட்ஸ் PWM டிம்மிங், 92.89% ஸ்க்ரீன்-டூ-பாடி ரேஷியோ ஆகிய அம்சங்களையும் கொண்டுள்ளது.

சிப்செட்டை பொறுத்தவரை நத்திங் போன் 3 ஸ்மார்ட்போன் ஆனது மேம்பட்ட 4என்எம் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வடிவமைக்கப்பட்ட ஸ்னாப்டிராகன் 8எஸ் ஜென் 4 சிப்செட்டை கொண்டுள்ளது. இது மேம்படுத்தப்பட்ட பிரைம் செயல்திறன் கொண்ட குவால்காம்-ன் கிரியோ CPU கட்டமைப்பு மற்றும் அதிநவீன குவால்காம் அட்ரினோ ஆகியவற்றைக் கொண்டுள்ளது.

பழைய நத்திங் போன் 2 ஸ்மார்ட்போனுடன் ஒப்பிடும்போது இது ஜிபியு, மல்டி டாஸ்கிங், இமேஜ் ப்ராசஸிங் மற்றும் கிராபிக்ஸ் ஹேண்ட்லிங்கில் குறிப்பிடத்தக்க மேம்பாடுகளை வழங்கும். சிபியு சக்தியில் 36% அதிகரிப்பு, 88% ஜிபியு மேம்படுத்தல், ஏஐ தொடர்பான பணி செயலாக்கத்தில் 60% அதிகரிப்பு என.. நத்திங் போன் 3 ஸ்மார்ட்போன் ஆனது மல்டி டாஸ்கிங் முதல் மிக மென்மையான மொபைல் கேமிங் வரை சிரமமில்லாத அனுபவங்களை செயல்படுத்தும்

கேமராக்களை பொறுத்தவரை நத்திங் போன் 3 ஸ்மார்ட்போனில் ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப் உள்ளது. அதில் 50எம்பி ஓஐஎஸ் ப்ரைமரி கேமரா + 50எம்பி ஓஐஎஸ் பெரிஸ்கோப் கேமரா + 50எம்பி அல்ட்ரா-வைட் கேமரா உள்ளது. முன்பக்கத்தில் 50எம்பி செல்பீ கேமரா உள்ளது. இதன் கேமரா செட்டப்பில் ட்ரூலென்ஸ்எஞ்சின் 4 மற்றும் 4கே அல்ட்ரா எக்ஸ்டிஆர் வீடியோ சிஸ்டம் ஆகிய அம்சங்களும் உள்ளன.

பேட்டரியை பொறுத்தவரை நத்திங் போன் 3 ஸ்மார்ட்போனில் இதுவரை இல்லாத அளவுக்கு மிகப்பெரிய 5500mAh சிலிக்கான் கார்பன் செல் பேக் செய்யப்பட்டுள்ளது. இது 65W பாஸ்ட் வயர்டு சார்ஜிங் மூலம், இது வெறும் 54 நிமிடங்களில் முழுமையாக சார்ஜ் ஆகும். கூடவே இது 15W வயர்லெஸ் சார்ஜிங் ஆதரவையும் கொண்டுள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Nothing Phone 3 gets Rs 20000 Discount in Flipkart How This Offer Works
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X