16GB ரேம், Android 15 ஓஎஸ் உடன் வருது.. Nothing Phone 3-ன் விலை பழைய மாடலை விட டபுள்-ஆ?
நத்திங் போன் 3 (Nothing Phone 3) ஸ்மார்ட்போன் ஆனது 2025 ஜூலை 1 ஆம் தேதி அன்று இந்தியா உட்பட உலகளவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்நிலையில், ஒரு தரப்படுத்தல் தளம் (Benchmarking Site) வழியாக நத்திங் போன் 3 ஸ்மார்ட்போனின் பல முக்கிய அம்சங்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
கீக்பெஞ்ச் லிஸ்டிங்கில் (Geekbench Listing) காணப்பட்டுள்ள நத்திங் போன் 3 ஸ்மார்ட்போன் ஆனது, இது ஆக்டா-கோர் சிப்செட் உடன் வருவதை உறுதிப்படுத்துகிறது. நத்திங் நிறுவனம் இது ஸ்னாப்டிராகன் 8எஸ் ஜென் 4 சிப்செட் (Snapdragon 8s Gen 4 SoC) உடன் அறிமுகம் செய்யப்படும் என்பதை உறுதிப்படுத்தி விட்டது என்பதால் - இது ஏற்கனவே தெரிந்த தகவல் தான்!

தெரியாமல் இருந்து தற்போது தெரிந்துள்ள விவரங்கள் என்னவென்றால்? நத்திங் போன் 3 ஸ்மார்ட்போன் ஆனது 16ஜிபி ரேம் உடன் பட்டியலிடப்பட்டுள்ளது. ஆக்டா-கோர் சிப்செட் ஆனது தோராயமாக 14.91 ஜிபி ரேம் உடன் இணைக்கப்படலாம். இது 16 ஜிபி வரை (Up to 16GB RAM) என்கிற நிர்ணயத்தை அடையலாம்.
ஆக நத்திங் நிறுவனம் ஆனது முதல் முறையாக 16ஜிபி வரை ரேம் கொண்ட பிளாக்ஷிப் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்யு உள்ளது. மேலும் நத்திங் போன் 3 ஸ்மார்ட்போன் ஆனது ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) கொண்டு இயங்குவதாகவும் பட்டியலிடப்பட்டு உள்ளது.
நத்திங் போன் 3 டபுள் விலை (Nothing Phone 3 Price Expected)? ஆரம்பத்தில் (அறிமுக தேதி உறுதி செய்யப்படுவதற்கு முன்) நத்திங் நிறுவனத்தின் சிஇஓ-வான கார்ல் பெய் இதன் விலை சுமார் GBP 800 (தோராயமாக ரூ.90,000) இருக்கும் என்று கூறி இருந்தார். இது தற்போதைய பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் ஆன நத்திங் போன் 2 மாடலை விட இரண்டு மடங்கு விலையாகும். நினைவூட்டும் வண்ணம் நத்திங் போன் 2 ஸ்மார்ட்போனின் பேஸிக் 8ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.44,999 க்கு அறிமுகமானது.
ஆரம்பத்தில் நத்திங் போன் 3 ஸ்மார்ட்போனின் விலை எதிர்பார்த்த வாடிக்கையாளர்களின் மத்தியில் கவலைகளை ஏற்படுத்தியது. பின்னர் இது குவால்காமின் ஹை-எண்ட் ஸ்னாப்டிராகன் 8 எலைட் சிப்செட் உடன் வராது மாறாக ஸ்னாப்டிராகன் 8எஸ் ஜென் 4 சிப்செட் (Qualcomm Snapdragon 8s Gen 4 chipset) உடன் வரும் என்பது உறுதி செய்யப்பட்ட பின்னர் இந்தியாவில் இது ரூ.90,000 க்கு வராது என்பதை புரிந்துகொள்ள முடிந்தது. மாறாக இது சுமார் $799 (ரூ.68,000) க்கு அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நத்திங் போன் 3 பெர்பார்மென்ஸ் (Nothing Phone 3 Performance Expected) எப்படி இருக்கும்? நத்திங் நிறுவனத்தின் சிஇஓ-வான கார்ல் பெய் கருத்துப்படி, நத்திங் போன் 2 உடன் ஒப்பிடும், நத்திங் போன் 3 மாடலில் 36% வேகமான சிபியு செயல்திறன், 88% ஜிபியு அதிகரிப்பு மற்றும் என்பியு செயல்திறனில் 60% முன்னேற்றம் ஆகியவற்றை எதிர்பார்க்கலாம். இது மென்மையான மற்றும் மிகவும் ரெஸ்பான்சிவ் ஆன அனுபவத்தை உறுதியளிக்கும்.
மேலும் நத்திங் போன் 3 மாடலுக்கான பெஞ்ச்மார்க் மதிப்பெண்கள் (Benchmark Scores) ஆனது, செயல்திறன் அடிப்படையில் இந்த ஸ்மார்ட்போனில் இருந்து என்ன எதிர்பார்க்கலாம் என்பது பற்றிய ஒரு யோசனையையும் நமக்கு தருகின்றன.
ஆண்ட்ராய்டு AArch64 தரப்படுத்தல் சோதனைக்கான கீக்பெஞ்ச் 6.4.0 இல், இந்த ஸ்மார்ட்போன் முறையே 2,067 சிங்கிள் மற்றும் 6,577 மல்டி கோர் மதிப்பெண்களை பதிவு செய்துள்ளது. "பேப்பரில்" எல்லாம் நன்றாகத்தான் உள்ளது; உண்மையான பெர்பார்மென்ஸ் அறிமுகம் செய்யப்பட்ட பின்னரே தெரிய வரும்!


Click it and Unblock the Notifications