Home
Mobile

கண்ணா.. இனிமே தான் ஆட்டமே இருக்கு.. Nothing நிறுவனத்தின் அடுத்த போனும் அதன் விலையும்!

இந்தியா, அமெரிக்கா, ஐரோப்பா போன்ற சந்தைகளில், நத்திங் இயர் மற்றும் இயர் ஏ என்கிற 2 புதிய இயர்பட்ஸ் மாடல்களை அறிமுகம் செய்த நத்திங் நிறுவனத்தின் அடுத்த அறிவிப்பானது - சந்தேகத்திற்கு இடமின்றி நத்திங் போன் 3 ஸ்மார்ட்போன் ஆகத்தான் இருக்கும்!

நத்திங் போன் 3 (Nothing Phone 3) ஸ்மார்ட்போன் எப்போது அறிமுகமாகும்? என்னென்ன முக்கிய அம்சங்களை பேக் செய்யும்? என்ன விலைக்கு அறிமுகமாகும்? நத்திங் போன் 3 மாடலோடு சேர்த்து, வேறு என்னென்ன புதிய தயாரிப்புகளை நத்திங் நிறுவனம் அறிமுகம் செய்யும்? இதோ விவரங்கள்:

Nothing நிறுவனத்தின் அடுத்த போனும் அதன் விலையும்!

நத்திங் போன் 3 என்னென்ன அம்சங்களை பேக் செய்யும்? இது கடந்த ஜூலை 2023 இல் ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 சிப்செட் உடன் அறிமுகமான நத்திங் போன் 2 ஸ்மார்ட்போனின் அப்கிரேடட் வெர்ஷனாக இருக்கும் என்பதால்.. பெரும்பாலும் நத்திங் போன் 3 ஆனது ஸ்னாப்டிராகன் 8எஸ் ஜென் 3 சிப்செட் மூலம் இயக்கப்படலாம்.

ஒப்பீட்டளவில் இது ஒரு புதிய சிப்செட் ஆகும் மற்றும் சமீபத்தில் சீனாவில் அறிமுகமான ஷவமே சிவி 4 ப்ரோ (Xiaomi Civi 4 Pro), ரெட்மி டர்போ 3 (Redmi Turbo 3) மற்றும் ஐக்யூ இஸட்9 டர்போ (iQOO Z9 Turbo) போன்ற ஸ்மார்ட்போன்களிலும் கூட இந்த சிப்செட் தான் உள்ளது.சுவாரசியமாக ரெட்மி டர்போ 3 இந்தியாவில் போக்கோ எப்6 (POCO F6) ஆக அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Nothing நிறுவனத்தின் அடுத்த போனும் அதன் விலையும்!

கூடவே ஐக்யூ இஸட்9 டர்போ மாடலும் கூட இந்திய சந்தையில் வித்தியாசமான பிராண்டிங்குடன் அறிமுகம் செய்யப்பட வாய்ப்பு உள்ளது. ஆக நத்திங் போன் 3-க்கான போட்டியாளர்கள் ஏற்கனவே தயார் நிலையில் உள்ளன. இருப்பினும் சிப்செட் தவிர்த்து நத்திங் போன் 3-ன் மற்ற அம்சங்கள் குறித்து எந்த தகவலும் இல்லை.

நத்திங் போன் 3 என்ன விலைக்கு வரும்? நத்திங் போன் 3 ஸ்மார்ட்போனின் இந்திய விலை நிர்ணயமானது ரூ 40,000 - ரூ.45,000 க்குள் என்கிற பட்ஜெட்டில் இருக்கும். நினைவூட்டும் வண்ணம் நத்திங் போன் 2 ஸ்மார்ட்போன் ஆனது ரூ.44,999 க்கு அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால் தற்போது கடும் விலை வீழ்ச்சிகளுக்கு பின்னர் ரூ.37,999 க்கு வாங்க கிடைக்கிறது.

Nothing நிறுவனத்தின் அடுத்த போனும் அதன் விலையும்!

நத்திங் போன் 3 எப்போது அறிமுகமாகும்? பழைய நத்திங் போன் 2 ஆனது ஜூலை 2023 இல் அறிமுகம் ஆனதை போலவே நத்திங் போன் 3 மாடலும் இந்த ஆண்டு ஜூலை மாத வாக்கில் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எப்படி பார்த்தாலும் 2024 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டின் இறுதிக்குள் நத்திங் போன் 3 அறிமுகமாகி விடும்.

நத்திங் போன் 3 உடன் வேறு என்னென்ன புதிய தயாரிப்புகள் அறிமுகமாகும்? நத்திங் நிறுவனத்தின் துணை பிராண்ட் ஆன சிஎம்எஃப் அதன் முதல் ஸ்மார்ட்போனில் செயல்படுவதாக கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் "ஏ015" என்கிற மாடல் நம்பர் மற்றும் "டெட்ரிஸ்" என்கிற குறியீட்டு பெயரின் கீழ் பிஐஎஸ் சான்றிதழ் தளத்தில் காணப்பட்டுள்ளது. ஆக இது கூடிய விரைவில் இந்தியாவில் அறிமுகமாகும் என்று அர்த்தம்.

நத்திங் நிறுவனத்தின் புதிய இயர்பட்ஸ்களான நத்திங் இயர் (Nothing Ear) மற்றும் நத்திங் இயர் ஏ (Nothing Ear a) மாடல் களின் விலைகளை பொறுத்தவரை... நத்திங் இயர் மாடல் ரூ.11,999 க்கும், நத்திங் இயர் ஏ மாடல் ரூ.7,999 க்கும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இரண்டு இயர்பட்ஸ்களுமே பிளிப்கார்ட் (Flipkart) வழியாக வாங்க கிடைக்கின்றன.

நத்திங் இயர் மற்றும் நத்திங் இயர் ஏ ஆகிய இரண்டும் பிளாக் (Black) மற்றும் ஒயிட் (White) என்கிற வழக்கமான கலர் ஆப்ஷன்களில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளன. ஸ்பெஷலாக நத்திங் இயர் ஏ மாடலானது (மூன்றாவது நிறமாக) யெல்லோ (Yellow) கலர் ஆப்ஷனிலும் அறிமுகமாகி உள்ளது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
Nothing Phone 3 Expected Launch Date Price in India Specifications What We Know So Far
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X