Home
Mobile

புதுசா Top Camera, Glyph Matrix டிசைன் கொடுக்கும் போதே தோணுச்சு.. Nothing Phone 3-ன் அடேங்கப்பா ஐரோப்பிய விலை!

ஜூலை 1 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட உள்ள நத்திங் போன் 3 (Nothing Phone 3) ஸ்மார்ட்போன் ஆனது பழைய நத்திங் போன் 2 ஸ்மார்ட்போனை போலவே இருக்கும் என்று நீங்கள் நினைத்தால், உங்கள் எதிர்பார்ப்புகள் ஏமாற்றத்தில் முடியலாம். ஏனென்றால் எதிர்பார்த்தபடி அல்லது நாம் கற்பனை செய்தது போல - நத்திங் போன் 3 இல்லை.

இந்த ஸ்மார்ட்போன் ஒரு "அசாதாரணமான" டாப் கேமரா கொண்ட ரியர் கேமரா செட்டப்பை கொண்டுள்ளது. இது எப்படி பார்த்தாலும் விசித்திரமாகவே தெரிகிறது. இது கவனத்தை ஈர்க்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது போல் தெரிந்தாலும் - கவனத்தை ஏற்குமா என்பது தான் இங்கே கேள்வி. இதற்கிடையில் நத்திங் போன் 3 ஸ்மார்ட்போனின் ஐரோப்பிய சந்தைக்கான விலை ஆன்லைனில் லீக் ஆகி.. இன்னும் அதி ககவனத்தை ஈர்த்துள்ளது.

Nothing Phone 3-ன் அடேங்கப்பா ஐரோப்பிய விலை!

எக்ஸ் பயனர் ஆஆன ர்சீன் லூபினின் (Arsène Lupin) முந்தைய லீக்கின்படி, நத்திங் போன் 3 ஸ்மார்ட்போன் ஆனது 2 ஸ்டோரேஜ் ஆப்ஷன்களில் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது: ஒன்று 12GB ரேம் மற்றும் 256GB ஆப்ஷன்; இன்னொன்று - 16GB ரேம் மற்றும் 512GB ஸ்டோரேஜ் ஆப்ஷன். அமெரிக்காவில் இவ்விரு வேரியண்ட்களின் விலைகளும் முறையே $799 (சுமார் ரூ.68,300) மற்றும் $899 (சுமார் ரூ.76800) ஆக இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

டாப்-எண்ட் வேரியண்ட்-கான யுகே விலை ஆனது அமெரிக்க சந்தையுடன் பொருந்தும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் பிரெஞ்சு வெளியீடான டீலாப்ஸிலிருந்து (Dealabs) கிடைத்துள்ள ஒரு லீக் தகவல் ஆனது, ஐரோப்பிய சந்தைகளில் உள்ள வாடிக்கையாளர்கள் நத்திங் போன் 3 ஸ்மார்ட்போனை வாங்க "மற்றவர்களை" விட அதிகமாக செலுத்த வேண்டியிருக்கலாம் என்று கூறுகிறது.

ஐரோப்பியாவில் நத்திங் போன் 3 ஸ்மார்ட்போனின் பேஸிக் ஆப்ஷன் €849 க்கு ஆரம்பிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது; மறுகையில் உள்ள 16ஜிபி ரேம் ஆப்ஷனின் விலை €949 வரை செல்லலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. மேற்கண்ட எல்லா விலைகளும் லீக் ஆன மற்றும் எதிர்பார்க்கப்படும் விலைகள் தான் என்பதால், அவைகளை மேலோட்டமாக எடுத்துக்கொள்வது நல்லது.

இந்தியாவில் நத்திங் போன் 3 ஸ்மார்ட்போனின் விலை எப்படி இருக்கும்? இந்திய சந்தையை பொறுத்தவரை நத்திங் போன் 3 ஸ்மார்ட்போன் ஆனது போட்டித்தன்மை கொண்ட விலை நிர்ணயத்தையே பெறும். இந்த ஸ்மார்ட்போனின் பேஸிக் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.68,000-ஐ சுற்றிய விலையில் அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நினைவூட்டும் வண்ணம் கடந்த பல வாரங்களுக்கு முன்பிருந்தே நத்திங் நிறுவனம் அதன் நத்திங் போன் 3 ஸ்மார்ட்போனை "மிகைப்படுத்த" தொடங்கி இருந்தது. குறிப்பாக நத்திங் போன் 3 ஸ்மார்ட்போனில் என்ன சிப்செட் இடம்பெறும் என்று அறிவிக்கும் டீஸர் வெளியாகும் வரையிலாக, மக்கள் மத்தியில் நத்திங் போன் 3 மாடலின் மீதான எதிர்பார்ப்பு நன்றாகவே இருந்தது.

ஆனால் நத்திங் நிறுவனம் அதன் போன் 3 மாடலில் குவால்காம் நிறுவனத்தின் முதன்மை சிப்செட் ஆன ஸ்னாப்டிராகன் 8 எலைட் (Snapdragon 8 Elite) சிப்செட்டிற்கு பதிலாக ஸ்னாப்டிராகன் 8எஸ் ஜென் 4 சிப்செட் இடம்பெறும் என்று அறிவிக்கப்பட்டதும் - இந்த மாடலை வாங்க காத்திருந்த மக்கள் மத்தியில் பெரிய ஏமாற்றம் ஏற்பட்டது.

இதோடு நத்திங் போன் 3 மாடலில் பழைய கிளிஃப் இன்டர்பேஸ்-க்கு பதிலாக புதிய கிளிஃப் மேட்ரிக்ஸ் இடம்பெறும் என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவும் சிலருக்கு ஏமாற்றமாக இருக்கலாம். நத்திங் நிறுவனத்தின் டிசைன் ஹெட் ஆன ஆடம் பேட்ஸ்-ன் கூற்றுப்படி, நத்திங் போன் 3 ஸ்மார்ட்போனில் உள்ள கிளிஃப் மேட்ரிக்ஸ் ஆனது கிளிஃப் இன்டர்பேஸ்-ன் கஸ்டமைசேஷனை தக்கவைத்து கொள்ளவும், அதை மிகவும் திறமையாக மாற்றவும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Nothing Phone 3 Europe Price Will Higher Than Other Markets Report
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X