Home
Mobile

பேக் ஃபையர் ஆன Chipset.. நம்பிக்கை கொடுக்கும் Nothing Phone 3 டிஸ்பிளே, கேமரா, பேட்டரி!

நத்திங் நிறுவனம் 2025 ஆம் ஆண்டிற்காக சில பெரிய திட்டங்களை கொண்டுள்ளது போல் தெரிகிறது. யுகே-வை தளமாக கொண்ட இந்த நிறுவனம் ஏற்கனவே 2 மிட்-ரேன்ஜ் ஸ்மார்ட்போன்களை (நத்திங் போன் 3ஏ நத்திங் போன் 3ஏ ப்ரோ) வெளியிட்டுள்ளது மற்றும் அதன் முதல் பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் ஆக நத்திங் போன் 3 (Nothing Phone 3) மாடலை விரைவில் (ஜூலை 1) அறிமுகப்படுத்த உள்ளது.

நத்திங் நிறுவனத்தின் கூற்றுப்படி, நத்திங் போன் 3 ஸ்மார்ட்போன் ஆனது, நத்திங் நிறுவனம் இதுவரை வெளியிட்ட சிறந்த தயாரிப்பாக இருக்கும். ரசிகர்களிடமிருந்து வரும் அனைத்து கருத்துகளையும், ஸ்மார்ட்போன்மேம்பாடு தொடர்பாக நத்திங் நிறுவனத்திற்கு உள்ள அனைத்து அறிவையும் கணக்கில் எடுத்துக்கொண்டு இந்த பிளாக்ஷிப் வடிவமைக்கப்பட்டுள்ளது.

Nothing Phone 3 மாடலின் டிஸ்பிளே, கேமரா, பேட்டரி லீக்!

கடந்த பல வாரங்களுக்கு முன்பிருந்தே நத்திங் நிறுவனம் அதன் நத்திங் போன் 3 ஸ்மார்ட்போனை "மிகைப்படுத்த" தொடங்கி இருந்தது. குறிப்பாக நத்திங் போன் 3 ஸ்மார்ட்போனில் என்ன சிப்செட் இடம்பெறும் என்று அறிவிக்கும் டீஸர் வெளியாகும் வரையிலாக, மக்கள் மத்தியில் நத்திங் போன் 3 மாடலின் மீதான எதிர்பார்ப்பு நன்றாகவே இருந்தது.

ஆனால் நத்திங் நிறுவனம் அதன் போன் 3 மாடலில் குவால்காம் நிறுவனத்தின் முதன்மை சிப்செட் ஆன ஸ்னாப்டிராகன் 8 எலைட் (Snapdragon 8 Elite) சிப்செட்டிற்கு பதிலாக ஸ்னாப்டிராகன் 8எஸ் ஜென் 4 சிப்செட் இடம்பெறும் என்று அறிவிக்கப்பட்டதும் - இந்த மாடலை வாங்க காத்திருந்த மக்கள் மத்தியில் பெரிய ஏமாற்றம் ஏற்பட்டது.

Nothing Phone 3 மாடலின் டிஸ்பிளே, கேமரா, பேட்டரி லீக்!

ஆனால் நத்திங் போன் 3 ஸ்மார்ட்போனில் உள்ள ஒரே பெரிய குறைபாடு - அதன் சிப்செட் ஆக மட்டுமே இருக்கும் என்பது போல் தெரிகிறது. ஏனென்றால் லேட்டஸ்ட் லீக் ஒன்று - நத்திங்கின் முந்தைய மாடல்களை விட நத்திங் போன் 3 ஆனது உண்மையில் பல மேம்படுத்தல்களை கொண்டிருக்கும் என்பதை காட்டுகிறது

நத்திங் போன் 3 ஸ்மார்ட்போனில் இடம்பெறலாம் என்று கூறப்படும் முக்கிய அம்சங்கள்:
டிஸ்பிளே: 6.7-இன்ச், 1.5கே ரெசல்யூஷன், ஓஎல்இடி எல்பிடிஓ பேனல்
ரியர் கேமரா: 50ம்பி + 50எம்பி (3எக்ஸ் பெரிஸ்கோப்) + 50எம்பி (அல்ட்ரா-வைட்)
செல்பீ கேமரா: 50எம்பி
பேட்டரி: 5150எம்ஏஎச், 100W வயர்டு சார்ஜிங் (வயர்லெஸ் மற்றும் ரிவர்ஸ் வயர்லெஸ் சார்ஜிங்)
கனெக்டிவிட்டி: என்எப்சி ஆதரவு, இசிம் ஆதரவு
ஓஎஸ்: ஆண்ட்ராய்டு 15 அடிப்படையிலான நத்திங் ஓஎஸ் 3.5

Nothing Phone 3 மாடலின் டிஸ்பிளே, கேமரா, பேட்டரி லீக்!

நத்திங் நிறுவனம் சிப்செட்டை உறுதிப்படுத்திய பிறகு, நத்திங் போன் 3 ஸ்மார்ட்போன் ஆனது ஆசஸ் ஆர்ஓஜி சீரீஸ் போன்களை போன்ற ரியர் பேனலில் ஒரு புதிய எல்இடி எலிமெண்ட் இருக்கும் என்பதையும் உறுதிப்படுத்தி உள்ளது

நத்திங் நிறுவனம் இதை "கிளிஃப் மேட்ரிக்ஸ்" இன்டர்பேஸ் என்று அழைக்கிறது. இது முந்தைய நத்திங் ஃபோன் 2 மற்றும் ஃபோன் 1 மாடல்களிலிருந்து வேறுபடும் என்பதையும் வெளிப்படுத்திஉள்ளது கிளிஃப் எல்இடி இன்டர்பேஸ்-க்கு பதிலாக, நத்திங் போன் 3 மாடலின் பேக் பேனலின் மேல் வலது மூலையில் டாட்-மேட்ரிக்ஸ் பேனல் அமைந்துள்ளது போல் தெரிகிறது.

இந்த கிளிஃப் மேட்ரிக்ஸ் ஆனது அனிமேஷன்கள், கால் நோட்டிஃபிகேஷன்கள், பேட்டரி ஸ்டேட்டஸ், நேரம் மற்றும் பிற ரீமைண்டர்களை காண்பிக்க வாய்ப்புள்ளது. ஆசஸ் நிறுவனத்தின் கேமிங் அடிப்படையிலான ஆர்ஓஜி போன்கள் ஆனது அனிமேஷன்கள் மற்றும் இன்டராக்சன்களுக்காக மினி-எல்இடிகளுடன் கூடிய டாட் மேட்ரிக்ஸ் செட்டப்பை பேக் பேனலில் கொண்டுள்ளது.

இதையே நத்திங் நிறுவனமும் பின்பற்றலாம். இதுதவிர்த்து நத்திங் போன் 3 ஸ்மார்ட்போனின் வடிவமைப்பு பற்றிய கூடுதல் விவரங்கள் இப்போதைக்கு தெரியவில்லை,. ஜூலை 1 நடக்கும் வெளியீட்டிற்கு முன்னதாக கூடுதல் டீஸர்களை வெளியாகும் என்று எதிர்பார்க்கலாம். Photo Courtesy: @MaxJmb | Twitter

More from GizBot

Best Mobiles in India

English summary
Nothing Phone 3 Display Camera Battery Specifications leaked ahead Launch on July 1
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X