ஒருவேளை இருக்குமோ.. ரூ.1 லட்சம் கிட்ட விலை போகுமோ.. Nothing Phone 3 மாடலில் புது பட்டன்.. என்னவாக இருக்கும்?
2025 ஜூலை மாதம் இந்தியாவிலும், உலக சந்தைகளிலும் நத்திங் போன் 3 (Nothing Phone 3) அறிமுகப்படுத்தப்பட உள்ளது. சரியான வெளியீட்டு தேதி இன்னும் அறிவிக்கப்படாத நிலையில் கார்ல் பெய் தலைமையிலான நத்திங் நிறுவனம் நத்திங் போன் 3 ஸ்மார்ட்போனின் டிசைனை டீஸ் செய்துள்ளது. கூடவே இது நிறுவனத்தின் முதல் "ட்ரூ பிளாக்ஷிப்" ஸ்மார்ட்போனாக இருக்கும் என்றும் கூறியுள்ளது
மீண்டும் மீண்டும் "பிளாக்ஷிப்" என்கிற வார்த்தை பயன்படுத்தப்படுவதால் நத்திங் போன் 3 ஸ்மார்ட்போனின் விலை உண்மையாகவே ரூ.1 லட்சத்திற்கு அருகில் இருக்குமோ என்கிற சந்தேகத்தை அதிகரிக்கிறது. நினைவூட்டும் வண்ணம் கார்ல் பெய் முன்னதாக நத்திங் போன் 3 ஸ்மார்ட்போனின் விலையை டீஸ் செய்து இருந்தார்.

டிசைனை பொறுத்தவரை முந்தைய நத்திங் போன் 2 மற்றும் நத்திங் போன் 1 ஸ்மார்ட்போன்களை போலவே இதுவும் கஸ்டம் கிளிஃப் இன்டர்பேஸை தக்கவைத்துக்கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. லேட்டஸ்ட் டீஸரில் நத்திங் போன் 3 ஸ்மார்ட்போன் ஆனது டூயல் டோன் பினிஷ் உடனான பேக் பேனலின் ஒரு பகுதியை காட்டுகிறது.
அதாவது கடந்த ஏப்ரல் மாதம் இந்தியாவில் நத்திங் நிறுவனத்தின் துணை பிராண்டால் வெளியிடப்பட்ட சிஎம்எப் போன் 2 ப்ரோவின் ஆரஞ்சு மற்றும் ஒயிட் கலர் ஆப்ஷன்களில் உள்ளதை போன்ற டூயல் டோன் பினிஷ் உடனான பேக் பேனலை காட்டுகிறது. மேலும் இந்த டீசரில், பட்டன் போன்ற அம்சத்துடன் கூடிய ஒரு அமைப்புள்ள பகுதியையும் காண முடிகிறது. நத்திங் போன் 3 ஸ்மார்ட்போனில் உள்ள இந்த பட்டன் செயல்படுமா அல்லது அது வெறுமனே ஒரு பட்டனாக இருக்குமா என்பது தெளிவாக தெரியவில்லை.
முன்னரே குறிப்பிட்டபடி நத்திங் போன் 3 ஸ்மார்ட்போன் ஆனது நிறுவனத்தின் அதன் "முதல் ட்ரூ பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்" என்றும் இதில் "பிரீமியம் பொருட்கள்" இருக்கும் என்றும் நத்திங் நிறுவனம் கூறி இருந்தது. இந்த ஸ்மார்ட்போன் சாஃப்ட்வேர் மற்றும் செயல்திறன் மேம்படுத்தல்களுடன் வரும் என்றும் டீஸ் செய்யப்பட்டுள்ளது.
நத்திங் போன் 3 உண்மையிலேயே ரூ.1 லட்சத்திற்கு அறிமுகம் செய்யப்படுமா? சில வாரங்களுக்கு முன்பே நத்திங் போன் 3 ஸ்மார்ட்போன் "சுமார் 800 யூரோ" என்கிற விலையில் அறிமுகப்படுத்தப்படும் என்று கார்ல் பெய் உறுதிப்படுத்தி இருந்தார். அதாவது இந்திய ரூபாய் மதிப்பின்படி நத்திங் போன் 3 ஸ்மார்ட்போன் ஆனது சுமார் ரூ.90,500 க்கு அறிமுகமாகுமாம்.
ஆனால் இந்தியாவில் ரூ.1 லட்சத்திற்கு அருகாமையில் என்கிற விலை நிர்ணயம் - கொஞ்சம் சாத்தியமற்றது தான். ஐரோப்பிய சந்தைகளின் விலைகள் எப்படியும் சற்று அதிகமாகவே இருக்கும் ஆனால் இந்திய விலை நிர்ணயம் குறைவாகவே இருக்கும். மேலும், நத்திங் போன் 2 ஸ்மார்ட்போன் இந்தியாவில் ரூ.44,999 என்கிற ஆரம்ப விலையில் அறிமுகம் செய்யப்பட்டது. ஆக நத்திங் போன் 3 விலை "இரட்டிப்பாக".. வாய்ப்பில்லை. இது அதிகபட்சம் ரூ.60,000 பட்ஜெட்டில் (ரூ.59,999) அறிமுகம் செய்யப்படலாம்.
நத்திங் போன் 3 ஸ்மார்ட்போனில் என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்? நத்திங் போன் 3 ஸ்மார்ட்போனின் புதிய கேமரா செட்டப்பில் 3 கேமரா சென்சார்கள் இருக்கும். அவற்றில் ஒன்று லார்ஜ் பெரிஸ்கோப்-ஸ்டைல் டெலிஃபோட்டோ லென்ஸாக இருக்கலாம். நத்திங் போன் 3 மாடலில் ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப் இடம்பெறுவதில் எந்த ஆச்சரியமும் இல்லை. அதற்கு 2 காரணங்களை முன்வைக்கலாம்.
ஒன்று - நத்திங் போன் 2 ஸ்மார்ட்போனில் டூயல் ரியர் கேமரா செட்டப் தான் உள்ளது. ஆக நத்திங் போன் 3 ஸ்மார்ட்போனில் பெரிய அளவிலான கேமரா அப்கிரேட் தேவைப்படும். இரண்டாவது - நத்திங் போன் 3ஏ சீரீஸ் மற்றும் சிஎம்எப் போன் 2 ப்ரோ ஆகிய அனைத்துமே ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்பையே கொண்டுள்ளன. ஆக நத்திங்கின் அடுத்த ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் ஆன நத்திங் போன் 3 மாடலில், மற்ற மிட்-ரேன்ஜ் மாடல்களில் இருப்பதை விட நல்ல கேமரா செட்டப் இடம்பெறுவதில்லை எந்த ஆச்சரியமும் இல்லை.
பேட்டரியை பொறுத்தவரை இது 5000mAh க்கும் அதிகமான பேட்டரியை கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒப்பிடுகையில், நத்திங் போன் 2 ஸ்மார்ட்போன் 4700mAh பேட்டரியைக் கொண்டிருந்தது. அதே நேரத்தில் நத்திங் போன் 3ஏ ப்ரோ மற்றும் சிஎம்எப் போன் 2 ப்ரோ ஆகிய இரண்டும் அதிகபட்சமாக 5,000mAh பேட்டரியை கொண்டுள்ளன. ஆக நத்திங் போன் 3 சற்றே பெரிய பேட்டரி உடன் வரலாம்.


Click it and Unblock the Notifications








