Home
Mobile

Carl Pei க்கு கட்டம் சரியில்ல போல.. 1 லட்ச ரூபாய் Nothing போன்.. இதுக்கு தான் இவ்ளோ பில்ட்டப்-ஆ!

நத்திங் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஆன கார்ல் பெய், நத்திங் போன் 3 (Nothing Phone 3) ஸ்மார்ட்போனின் விலை நிர்ணயம் எப்படி இருக்கும் என்கிற ஷாக்கிங் தகவலை வெளியிட்ட சில நாட்களில், நத்திங் போன் 3 ஸ்மார்ட்போனின் கேமரா மற்றும் பேட்டரி குறித்த விவரங்கள் வெளியாகி உள்ளன.

முன்னதாக ஆண்ட்ராய்டு என்கிற யூடியூப் சேனல் வெளியிட்ட வீடியோவில், நத்திங் போன் 3 ஸ்மார்ட்போன் ஆனது "சுமார் 800 யூரோ" என்கிற விலையில் அறிமுகப்படுத்தப்படும் என்று கார்ல் பெய் உறுதிப்படுத்தி உள்ளார். அதாவது இந்திய ரூபாய் மதிப்பின்படி சுமார் ரூ.90,500 ஆகும். ​​

1 லட்ச ரூபாய் Nothing போன்.. இதுக்கு தான் இவ்ளோ பில்ட்டப்-ஆ!

ஸ்மார்ட் பிரிக்ஸ்-ன் சமீபத்திய அறிக்கை நத்திங் போன் 3 ஸ்மார்ட்போன் ஆனது "கணிசமாக" மறுவடிவமைப்பு செய்யப்பட்ட கேமரா செட்டப்பை கொண்டிருக்கும் என்று கூறுகிறது. இது முந்தைய மாடல்களை விட குறிப்பிடத்தக்க மேம்படுத்தலை குறிக்கிறது. இந்த புதிய கேமரா செட்டப்பில் 3 கேமரா சென்சார்கள் இருக்கும். அவற்றில் ஒன்று லார்ஜ் பெரிஸ்கோப்-ஸ்டைல் டெலிஃபோட்டோ லென்ஸாக இருக்கலாம்.

நத்திங் போன் 3 மாடலில் ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப் இடம்பெறுவதில் எந்த ஆச்சரியமும் இல்லை . ஏனென்றால் நத்திங் போன் 3ஏ சீரீஸ் மற்றும் சிஎம்எப் போன் 2 ப்ரோ ஆகியவைகள் ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்பையே கொண்டுள்ளன. ஆக நத்திங்கின் ஒரு ஃபிளாக்ஷிப் போன் ஆனது நிறுவனத்தின் பிரதான ஃபோன்களை விட சிறந்த கேமரா திறன்களை கொண்டுவருவது எதிர்பார்த்தது தான். நினைவூட்டும் வண்ணம் நத்திங் போன் 2 ஸ்மார்ட்போனில் டூயல் ரியர் கேமரா செட்டப் தான் உள்ளது.

நத்திங் போன் 3 ஸ்மார்ட்போனின் பேட்டரி லைஃப்பை பொறுத்தவரை, நத்திங் நிறுவனம் இந்த ஸ்மார்ட்போனில் 5000mAh க்கும் அதிகமான பேட்டரியை கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒப்பிடுகையில், நத்திங் போன் 2 ஸ்மார்ட்போன் 4700mAh பேட்டரியைக் கொண்டிருந்தது. அதே நேரத்தில் நத்திங் போன் 3ஏ ப்ரோ மற்றும் சிஎம்எப் போன் 2 ப்ரோ ஆகிய இரண்டும் அதிகபட்சமாக 5,000mAh பேட்டரியை கொண்டுள்ளன. ஆக நத்திங் போன் 3 சற்றே பெரிய பேட்டரி உடன் வருவதில் எந்த ஆச்சரியமும் இல்லை,

நத்திங் போன் 3 ஸ்மார்ட்போனில் வேறு என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்? இம்மாதம் தொடக்கம் வரையிலாக நத்திங் நிறுவனத்தின் பிளாக்ஷிப் போன் ஆன நத்திங் போன் 3 அறிமுகம் குறித்து எந்த அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகாமலேயே இருந்தது. பின்னர் நத்திங் பிராண்டின் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் இணை நிறுவனர் நத்திங் போன் 3 ஸ்மார்ட்போன் ஆனது 100% அமெரிக்க சந்தையில் அறிமுகமாகும் என்று கூறி, நத்திங் போன் 3 ஸ்மார்ட்போனின் அறிமுகத்தை உறுதிப்படுத்தினார்.

எக்ஸ் பயனர் ஒருவரின் கேள்விக்கு பதில் அளித்த நத்திங்கின் தலைமை நிர்வாக அதிகாரி ஆன பதிலளித்த கார்ல் பெய், நத்திங் போன் 3 அமெரிக்க சந்தையில் வாங்க கிடைக்கும் என்பதை உறுதிப்படுத்தினார். ஆனால் துரதிர்ஷ்டவசமாக, நத்திங் போன் 3 குறித்து வேறு எந்த தகவலையும் அவர் வெளியிடவில்லை. இருப்பினும் இது நத்திங் போன் 3 ஸ்மார்ட்போனின் வெளியீடு மிகவும் விரைவில் நடக்கும் என்பதை இது குறிக்கிறது.

முன்னதான வெளியான ஒரு லீக்ஸ் தகவல் ஆனது நத்திங் போன் 3 ஸ்மார்ட்போன் ஆனது ஜூலை 2025 இல் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவித்து இருந்ததும் இங்கே குறிப்பிடத்தக்கது. நத்திங் போன் 3 ஸ்மார்ட்போனின் அம்சங்கள் அல்லது வடிவமைப்பு குறித்து அதிக விவரங்கள் இல்லை என்றாலும் கூட இது கிளிப் எல்இடி இன்டர்பேஸ் உடன், நத்திங் நிறுவனத்தின் சிக்னேன்ச்சர் ஆன ட்ரான்ஸ்பரென்ட் பாடியை தக்க வைத்துக்கொள்ளும் என்று எதிர்பார்க்கலாம்.

மேலும் நத்திங் போன் 3ஏ ப்ரோ ஸ்மார்ட்போனின் உள்ளதை போலவே, நத்திங் போன் 3 ஸ்மார்ட்போனில் பிரத்யேக எசென்ஷியல் கீ பட்டன், ஹை ரெஃப்ரெஷ் ரேட் உடனான அமோலெட் டிஸ்பிளே மற்றும் அதே ப்ரைமரி கேமரா மற்றும் அல்ட்ரா வைட் ஆங்கிள் லென்ஸ்களை கொண்ட டெலிஃபோட்டோ ஷூட்டரை கொண்டுவர வாய்ப்புள்ளது.

இந்தியாவில் நத்திங் போன் 3 ஸ்மார்ட்போன் ஆனது ரூ.1 லட்சத்திற்கு அருகாமையில் என்கிற விலையின் கீழ் அறிமுகமாகும் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை. ஏனென்றால் ஐரோப்பிய சந்தைகளின் விலைகள் எப்படியும் சற்று அதிகமாக இருப்பதால், இந்தியாவில் இந்த ஸ்மார்ட்போனின் விலை குறைவாகவே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.மேலும், நத்திங் போன் 2 ஸ்மார்ட்போன் இந்தியாவில் ரூ.44,999 என்கிற ஆரம்ப விலையில் அறிவிக்கப்பட்டது. எனவே, நத்திங் நிறுவனம் இந்தியாவில் நத்திங் போன் 3 விலையை இரட்டிப்பாக அதிகரிக்க முடியாது!

More from GizBot

Best Mobiles in India

English summary
Nothing Phone 3 Camera Battery Details Leaked After Carl Pei Confirms The Price is Almost Rs 1 Lakh
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X