மகாபிரபு நீங்களுமா.. 2025 இல் 2 புது Nothing போன்கள்.. பட்ஜெட் விலையில் AI அம்சங்கள், Action Buttonனு அசத்தல்!
ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் ஆனது, 2024 ஆம் ஆண்டு எப்போது முடியும்; 2025 ஆம் ஆண்டு எப்போது தொடங்கும் என பல்லை கடித்துக்கொண்டு காத்துகொண்டு இருக்கின்றன. 2025 ஜனவரி முதல் வாரம் தொடங்கி தொடர்ச்சியான முறையில் பல புதிய ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளன.
ஒன்பிளஸ் நிறுவனத்தின் ஒன்பிளஸ் 13 மற்றும் ஒன்பிளஸ் 13ஆர், சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எஸ்25 சீரீஸ், ரியல்மி நிறுவனத்தின் ரியல்மி 14 ப்ரோ சீரீஸ் ஆகிய ஸ்மார்ட்போன்களின் அறிமுகம் 2025 ஜனவரியில் திட்டமிடப்பட்டுள்ள நிலையில் ஷாவ்மீ (ஷாவ்மீ 15 அல்ட்ரா) மற்றும் ஒப்போ (ரெனோ 13 சீரீஸ்) ஆகிய நிறுவனங்களும் தத்தம் புதிய போன்களை 2025 தொடங்கியதும் அறிமுகம் செய்யப்பட உள்ளன.

தற்போது நத்திங் நிறுவனமும் இந்த பட்டியலில் சேர்ந்துள்ளது. இந்நிறுவனம் அதன் நத்திங் போன் 3 (Nothing Phone 3) ஸ்மார்ட்போனை 2025 ஆம் ஆண்டில் அறிமுகம் செய்யும் என்கிற தகவல் வெளியாகியுள்ளது. இது எப்போது அறிமுகமாகும்? என்ன மாதிரியான விலை நிர்ணயத்தை பெறும்? என்னென்ன முக்கிய அம்சங்களை பேக் செய்யும்? இதோ விவரங்கள்:
நத்திங் போன் 3 எப்போது அறிமுகமாகும்? இது இந்த ஆண்டின் துவக்கத்திலேயே வெளியிடப்பட்டு இருக்க வேண்டும். ஆரம்பத்தில் இதன் அறிமுகம் சில மாதங்கள் தாமதமாகும் என்று கூறப்பட்டது. பின்னர் நத்திங் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஆன கார்ல் பெய், 2025 வரை நத்திங் ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனை எதிர்பார்க்க வேண்டாம் என்று தெளிவுபடுத்தினார்.
இதற்கு பின்னால் ஏஐ (AI) என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயற்கை நுண்ணறிவு ஒருங்கிணைப்பு (Artificial intelligence integration) தொடர்பான பணிகள் இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது உண்மையாகும் பட்சத்தில் நத்திங் போன் 3 ஸ்மார்ட்போனின் இந்த தாமதம், மிகவும் நியாயமானதாக இருக்கும். இருப்பினும் தற்போது வரையிலாக இது 2025 இல் அறிமுகமாகும் என்கிற தகவல் மட்டுமே உள்ளது; சரியான தேதி குறித்த தகவல் இல்லை.
நத்திங் போன் 3 ஸ்மார்ட்போனில் என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்? இது ஆப்பிள் ஐபோன்களில் உள்ளதை போன்ற ஆக்ஷன் பட்டன் மற்றும் 6.5 இன்ச் டிஸ்பிளே உள்ளிட்ட புதிய அம்சங்களுடன் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நத்திங் போன் 3 ஆனது ஒரு ப்ரோ எடிஷன் உடன், அதாவது நத்திங் போன் 3 ப்ரோ என்கிற மாடலுடன் சேர்ந்து அறிமுகமாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது, இது பெரிய 6.7-இன்ச் டிஸ்பிளேவை கொண்டிருக்கும் என்று நம்பப்படுகிறது.
ஐபோனில் உள்ள ஆக்ஷன் பட்டனால் ஈர்க்கப்பட்டு நத்திங் போன் 3 மாடலில்இடம்பெறும் ஆக்ஷன் பட்டன் ஆனது தனிப்பயனாக்கக்கூடிய கட்டுப்பாடுகளை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது பயனர்கள் ஆப்களை தொடங்கவும், செட்டிங்ஸ்களை மாற்றவும் அல்லது தனிப்பயனாக்கப்பட்ட ஷார்ட்கட்களை உருவாக்கவும் உதவும்.
நத்திங் போன் 2 ஸ்மார்ட்போனில் (அதிக பிரீமியம் விலையுள்ள) ஸ்னாப்டிராகன் 8+ ஜென் 1 சிப்செட் உள்ளது.. ஆனால் பட்ஜெட் விலையை கருத்தில் கொண்டு நத்திங் போன் 3 ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் 8எஸ் ஜென் 3 அல்லது மீடியாடெக் டைமென்சிட்டி 9200 பிளஸ் போன்ற மிட்-ரேன்ஜ் சிப்செட்டை கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நத்திங் போன் 3 ஸ்மார்ட்போனின் விலை நிர்ணயம் எப்படி இருக்கும்? சிப்செட்டை வைத்து இந்த ஸ்மார்ட்போனின் சாத்தியமான விலை நிர்ணயத்தை நம்மால் அறிந்துகொள்ள முடியும். நத்திங் போன் 1 இந்தியாவில் ரூ.32,999 என்கிற ஆரம்ப விலையில் அறிமுகமானது, அதே சமயம் நத்திங் போன் 2 சற்று அதிக விலைகுறியுடன் வெளியாகி மார்க்கெட்டை கைப்பற்ற தவிறியது.
நத்திங் போன் 2 ஸ்மார்ட்போனின் பேஸிக் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.44,999 க்கு அறிமுகமானது. ஆனால் நத்திங் போன் 3 ஸ்மார்ட்போன் ஆனது மிட்-ரேன்ஜ் வரம்பிற்கு திரும்புவதற்கான அனைத்து சாத்தியகூறுகளையும் (மிட்-ரேன்ஜ் சிப்செட் பேக் செய்யப்பட உள்ளது; கூடவே விலை அதிகமான ப்ரோ மாடல் வருகிறது) பார்க்க முடிகிறது. ஆக நத்திங் போன் 3 ஆனது ரூ.42,0000-ஐ சுற்றிய பட்ஜெட்டில் வர அதிக வாய்ப்புள்ளது.


Click it and Unblock the Notifications








