சுண்டி இழுக்கும் டிசைன்.. 50MP கேமரா.. 45W சார்ஜிங்.. புது நத்திங் போன் ரெடி.. எந்த மாடல்?
நத்திங் நிறுவனம் தனது நத்திங் போன் 2ஏ ஸ்மார்ட்போனை இந்தியாவில் மார்ச் 5-ம் தேதி அறிமுகம் செய்ய உள்ளது. குறிப்பாக இந்த போனின் புகைப்படங்களை ஆன்லைனில் வெளியிட்டுள்ளது நத்திங் நிறுவனம். அதன்படி இந்த போன் டூயல் ரியர் கேமரா அமைப்புடன் அறிமுகமாகும்.
அதேபோல் நத்திங் போன் 2ஏ மாடல் ஆனது வெள்ளை நிறத்தில் அறிமுகமாகும். பஞ்ச்-ஹோல் நாட்ச் டிஸ்பிளே, கிளிஃப் லைட்டிங் லேஅவுட் (Glyph lighting layout) போன்ற அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த நத்திங் போன் 2ஏ போன். மேலும் ஆன்லைனில் வெளியான இந்த போனின் அம்சங்களை இப்போது பார்க்கலாம்.

நத்திங் போன் 2ஏ அம்சங்கள் (Nothing Phone 2A specifications): 6.7-இன்ச் அமோலெட் டிஸ்பிளே (AMOLED display) வசதியுடன் நத்திங் போன் 2ஏ மாடல் அறிமுகமாகும். மேலும் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (120Hz refresh rate), 1000 நிட்ஸ் ப்ரைட்னஸ், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இந்த போனின் டிஸ்பிளே.
சக்திவாய்ந்த மீடியாடெக் டைமன்சிட்டி 7200 சிப்செட் ( MediaTek Dimensity 7200 SoC) வசதியுடன் இந்த நத்திங் போன் 2ஏ மாடல் வெளிவரும். இந்த சிப்செட் மேம்பட்ட செயல்திறன் வழங்கும். ஆண்ட்ராய்டு 14 (Android 14) இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த நத்திங் போன் 2ஏ ஸ்மார்ட்போன் வெளிவரும் என்று கூறப்படுகிறது.
ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 8ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி மற்றும் 12ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி என இரண்டு வேரியண்ட்களில் இந்த நத்திங் போன் 2ஏ மாடல் விற்பனைக்கு வரும் என்று கூறப்படுகிறது.
அதேபோல் இன்-டிஸ்பிளே கைரேகை ஸ்கேனர் ஆதரவு கொண்டுள்ளது இந்த நத்திங் ஸ்மார்ட்போன். குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனின் வடிவமைப்பு மற்றும் மென்பொருள் வசதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது நத்திங் நிறுவனம்.
நத்திங் போன் 2ஏ மாடல் 50எம்பி Samsung ISOCELL S5KGN9 பிரைமரி கேமரா + 50எம்பி ISOCELL JN1 அல்ட்ரா வைடு லென்ஸ் என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்புடன் வெளிவரும். பின்பு செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். இதுதவிர பல்வேறு கேமரா அம்சங்கள் இவற்றுள் இடம்பெற்றுள்ளது.

5000எம்ஏஎச் பேட்டரியுடன் இந்த நத்திங் போன் 2ஏ மாடல் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 45 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி, டால்பி ஆடியோ வசதி, யுஎஸ்பி டைப்-சி போர்ட், வைஃபை, ஜிபிஎஸ் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களுடன் இந்த நத்திங் போன் 2ஏ மாடல் மாடல் வெளிவரும் என்று கூறப்படுகிறது. குறிப்பாக இந்த போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது நத்திங் நிறுவனம்.
குறிப்பாக இந்தியாவில் நத்திங் போன் 2ஏ மாடல் ஆனது ரூ.30,000-க்கு கீழ் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. அதேபோல் இந்த போனுக்கு இந்தியாவில் நல்ல வரவேற்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Photo Credit: X/ Evan Blass (@evleaks)


Click it and Unblock the Notifications








