Home
Mobile

விரட்டி விரட்டி ஆர்டர்.. 1 மணி நேரத்தில் 60000 யூனிட்.. ரூ.19999 பட்ஜெட்ல மிரளவிட்ட நத்திங் போன் 2ஏ!

நத்திங் பிரியர்கள் மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த ஸ்மார்ட்போன் பிரியர்களும் அறக்க பறக்கும் விதமாக நத்திங் போன் 2ஏ (Nothing Phone 2a) மாடலின் விற்பனையானது, வெறும் 1 மணி நேரத்தில் 60000 யூனிட்களை எட்டி இருக்கிறது. இந்த போன் குறித்த முழு இதோ.

நத்திங் போன் 2ஏ அம்சங்கள் (Nothing Phone 2a Specifications): இந்த நத்திங் மாடலின் டிசைனானது, ப்ரீமியம் லுக் மட்டுமல்லாமல், முந்தைய போன்களை போலவே டிரான்ஸ்பரன்ட் பேனல் கொண்டிருக்கிறது. ஆனால், சர்குளர் கிரிட் சிஸ்டம் (Circular Grid System) கொண்ட டூயல் கேமரா டிசைன் சேர்க்கப்பட்டுள்ளது.

விரட்டி விரட்டி ஆர்டர்.. 1 மணி நேரத்தில் 60000 யூனிட்..  மிரளும் போன்!

6.7 இன்ச் (2412×1084 பிக்சல்கள்) புல்எச்டிபிளஸ் (FHD+) அமோலெட் (AMOLED) டிஸ்பிளே கொண்டுள்ளது. 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 240Hz டச் சாம்பிளிங் ரேட், 2160Hz PWM டிம்மிங் ஃபிரிகொன்சி, எச்டிஆர்ட்10 பிளஸ் (HDR10+), 1300 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கொண்டிருக்கிறது.

கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 (Corning Gorilla Glass 5) பாதுகாப்பு கொண்டுள்ளது. ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14), நத்திங் ஓஎஸ் 2.5 (Nothing OS 2.5) சப்போர்ட் வருகிறது. ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 7200 ப்ரோ 4என்எம் (Octa Core MediaTek Dimensity 7200 Pro 4nm) சிப்செட் வருகிறது.

ஆகவே, பக்கா பர்ஃபாமென்ஸ் எதிர்பார்க்கலாம். 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி, 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மற்றும் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட 3 வேரியண்ட்கள் விற்பனைக்கு கிடைக்கின்றன. இந்த நத்திங் போன் 2ஏ மாடலில் டூயல் ரியர் கேமரா சிஸ்டம் (Dual Rear Camera System) வருகிறது.

விரட்டி விரட்டி ஆர்டர்.. 1 மணி நேரத்தில் 60000 யூனிட்..  மிரளும் போன்!

ஒஐஎஸ் (OIS) சப்போர்ட் கொண்ட 50 எம்பி மெயின் கேமரா + 50 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் கேமரா வருகிறது. 4K வீடியோ ரெக்கார்டிங் மற்றும் ஆக்சன் மோட் (Action Mode) சப்போர்ட் கொண்டிருக்கிறது. 32 எம்பி செல்பீ கேமரா வருகிறது. ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo speakers) வருகின்றன.

இன்-டிஸ்பிளே ஆப்டிகல் ஃபிங்கர்பிரிண்ட் ஸ்கேனர் (In-display Optical Fingerprint Scanner), யுஎஸ்பி டைப்-சி ஆடியோ (USB Type-C Audio), IP54 தர ஸ்பிளாஷ் ரெசிஸ்டன்ட் வருகிறது. இந்த நத்திங் போன் 2ஏ போனில் 45W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 5000mAh பேட்டரி வருகிறது.

இதன் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.23,999ஆகவும், 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.25,999ஆகவும் இருக்கிறது. அதேபோல 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட ஹை-எண்ட் மாடலின் விலை ரூ.27,999ஆக இருக்கிறது.

இருப்பினும், எச்டிஎப்சி பேங்க் கிரெடிட் கார்டுக்கு ரூ.2000 பேங்க் டிஸ்கவுண்ட் கொடுக்கப்பட்டுள்ளது. அதேபோல ரூ.2000 எக்ஸ்சேஞ்ச் போனஸ் கிடைத்தது. பிளிப்கார்ட் (Flipkart), குரோமா (Croma), விஜஸ் சேல்ஸ் (Vijay Sales) போன்ற பல்வேறு தளங்களில் மார்ச் 12 பிற்பகல் 12 மணிக்கு விற்பனை தொடங்கியது.

புதுவிதமான டிசைன், பிரீமியம் லுக், பக்கா சிப்செட் மற்றும் கேமரா போன்ற அம்சங்களில் பட்டையை கிளப்பியதால், விற்பனையும் அடித்து தூக்கியது. முதல் 1 மணி நேரத்தில் மட்டும் 60 ஆயிரம் யூனிட்கள் விற்றுத் தீர்ந்தன. இந்த விவரங்களை நத்திங் நிறுவனம், அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Nothing Phone 2a Under Rs 20000 sale hits 60000 units just 1 hour in India Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X