Home
Mobile

சிவப்பு ஆந்தை.. ரெட் நிறத்தில் புது Nothing போன்-ஆ? பட்ஜெட் விலைல யாருமே எதிர்பார்க்கலை.. இது எந்த போன்?

நத்திங் (Nothing) நிறுவனம் சமீபத்தில் அதன் நத்திங் போன் 2a - Nothing Phone (2a) ஸ்மார்ட்போனை ப்ளூ நிற வேரியண்ட் மாடலாக இந்தியாவில் அறிமுகம் செய்தது. விரைவில் இன்னும் 2 கூடுதல் நிறங்களை நிறுவனம் அறிமுகம் செய்யவுள்ளது போல் தெரிகிறது.

நத்திங் நிறுவனத்திடம் இருந்து சமீபத்தில் வெளியான பட்ஜெட் செக்மென்ட் ஸ்மார்ட்போன் (budget segment smartphone) சாதனம் தான் இந்த புதிய நத்திங் போன் 2a (Nothing Phone 2a) டிவைஸ். முதலில் இந்த பட்ஜெட் நத்திங் போனை (budget nothing phone) நிறுவனம் வெள்ளை (white) மற்றும் கருப்பு நிறங்களில் (black colour) மட்டும் அறிமுகம் செய்து, விற்பனை செய்து வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

சிவப்பு ஆந்தை.. ரெட் நிறத்தில் புது Nothing போன்-ஆ? பட்ஜெட் விலை..

ரெட் நிறத்தில் புது Nothing Phone 2a-வா? பட்ஜெட் விலைல யாருமே எதிர்பார்க்கலை (Nothing Phone 2a In New Red Colour):

இதனை தொடர்ந்து, சமீபத்தில் நத்திங் நிறுவனம் ப்ளூ நிறத்துடன் புதிய நிறத்தில் நத்திங் போன் 2a (Nothing Phone 2a Blue) டிவைஸை வெளியிட்டது. இந்த நிறம் இந்தியாவில் பிரத்தியேகமாக அறிமுகம் செய்யப்பட்டது என்பது கவனிக்கத்தக்கது. இந்த புதிய ப்ளூ நிற நத்திங் போன் 2a (blue colour nothing phone 2a) சாதனத்துடன் இணையும் மற்றொரு புதிய நிறம் பற்றிய தகவலை நத்திங் நிறுவனம் இப்போது டீஸ் செய்துள்ளது.

தற்போது நத்திங் நிறுவனம் வெளியிட்டுள்ள புதிய விளம்பர போஸ்டரில் நத்திங் ஆர் - Nothing (R) என்ற வார்த்தை அச்சிடப்பட்டுள்ளது. இந்த நத்திங் ஆர் - Nothing (R) என்ற வார்த்தையில் மஞ்சள் (Yellow) மற்றும் சிவப்பு (Red) நிற புள்ளிகளை (dots) நம்மால் பார்க்க முடிகிறது. இந்த மஞ்சள், சிவப்பு நிற புள்ளியில் நத்திங் நிறுவனத்தின் வழக்கமான கருப்பு நிற புள்ளிகளுக்கு இடையே ஆங்காங்கே நிரப்பும் படி பதிவிடப்பட்டுள்ளது.

அதேபோல், அந்த போஸ்டரில் நத்திங் நிறுவனம் மற்றொரு முக்கியமான தகவலையும் பதிவிட்டுள்ளது. நத்திங்கின் சமீபத்திய போஸ்டரில் நத்திங் போன் 2a என்ற ஸ்மார்ட்போனின் பெயரை தொடர்ந்து ஆங்கிலத்தில், "எ ஸ்டோரி ஆஃப் கலர் பவர்ஃபுலி யுனிக்" (A story of colour powerfully unique) என்ற வார்த்தையை அச்சிட்டுள்ளது. இறுதியாக போல்ட் ஆன எழுதிகளில் கம்மிங் சூன் (Coming soon) என்ற வார்த்தையையும் அச்சிட்டுள்ளது.

சிவப்பு ஆந்தை.. ரெட் நிறத்தில் புது Nothing போன்-ஆ? பட்ஜெட் விலை..

நத்திங் போஸ்டரில் சிவப்பு ஆந்தை.. மஞ்சள் புள்ளிகள்.. இரண்டு நிறத்தில் புது Nothing போன்-ஆ?

இது நத்திங் போன் 2a சாதனத்தின் அடுத்த புதிய நிறம் பற்றிய வியாபரங்களை குறிப்பது போல் தெரிகிறது. ஆம், புதிய பவர்புல் கலர் உடன் நத்திங் போன் 2a இந்தியாவில் விரைவில் அறிமுகம் செய்யப்படும் என்ற தகவலை இந்த விளம்பரம் சொல்லாமல் சொல்லிவிட்டது. இந்த நத்திங் போஸ்டரில் (Nothing poster) காணப்படும் மஞ்சம் மற்றும் சிவப்பு நிற புள்ளிகளை வைத்து பார்க்கையில் ஒரு விஷயம் தெளிவாகிறது.

நத்திங் நிறுவனம் மங்களகரமாக மஞ்சள் நிறத்தில் ஒரு புதிய நத்திங் போன் 2a (Nothing Phone 2a Yellow) சாதனத்தை அறிமுகம் செய்யலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அல்லது சிவப்பு நிறத்தில் புதிய நத்திங் போன் 2a சாதனத்தை (Nothing Phone 2a Red) அறிமுகம் செய்யலாம் என்று கூறப்படுகிறது. இதில் சிவப்பு நிறத்தை பிரதிபலிக்கும் சிவப்பு நிற ஆந்தையுடன் (red owl) புதிய போஸ்டர் இணையத்தில் காணப்பட்டுள்ளது.

மற்றொரு தரப்பு டிப்ஸ்டர்கள், நத்திங் போன் 2a வின் அடுத்த ஸ்மார்ட்போன் சாதனம் மஞ்சள் மற்றும் ரெட் நிறத்தை சேர்த்த ஒரு கலவையாக, புதிய தோற்றத்தில் அதன் போனை அறிமுகம் செய்ய அதிக வாய்ப்பிருக்கிறது என்றும் கூறியுள்ளதை உங்கள் கவனத்திற்கு கொண்டுவருகிறோம். எது எப்படியாக இருந்தாலும், நத்திங் போன் 2a இந்தியாவில் ஒன்றல்ல, இரண்டு புதிய நிறங்களை (Nothing Phone 2a new colours) பெறக்கூடும் என்று கூறப்பட்டுள்ளது.

இந்த புதிய நிறத்தை கொண்ட நத்திங் போன் 2a ஸ்மார்ட்போன் சாதனங்கள் வரும் ஜூன் அல்லது ஜூலை மாதத்தில் அறிமுகம் செய்யப்படலாம் என்று கூறப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Nothing Phone 2a Spotted With Nothing (R) Teaser With Yellow and Red Dots Might Linked To New Colour Smartphone In India
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X